வீவக மறுவிற்பனை விலை ஜனவரியில் 1.5% உயர்வு; சாதனையாக $1 மில்லியனுக்கு 74 வீடுகள் விற்பனை

வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனைச் சந்தை ஜனவரியில் சூடுபிடித்தது. சாதனை அளவாக 74 வீடுகள் ஒவ்வொன்றும் குறைந்தது $1 மில்லியனுக்குக் கைமாறின.

சொத்துச் சந்தைத் தளங்களான, சிங்கப்பூர் சொத்துச் சந்தை எக்ஸ்சேஞ்ச் (எஸ்ஆர்எக்ஸ்), 99.co ஆகியவை பிப்ரவரி 6ஆம் தேதி வெளியிட்ட தரவுகளின்படி, டிசம்பர் மாத 0.6 விழுக்காட்டு அதிகரிப்பைவிட வேகமாக ஜனவரியில் மறுவிற்பனை வீவக வீட்டு விலை 1.5 விழுக்காடு உயர்ந்தது.

ஆண்டு அடிப்படையில் விலை 5.7 விழுக்காடு ஏறியுள்ளது.

2023 ஏப்ரலுக்குப் பிறகு விலை 1 விழுக்காட்டிற்கும் அதிகமாக உயர்ந்திருப்பது இதுவே முதல் முறை என்று சொத்து நிறுவனமான ஆரஞ்ச்டீ குழுமத்தின் தலைமை ஆய்வாளர் திருவாட்டி கிறிஸ்டின் சன் கூறினார்.

ஜனவரியில் அதிக மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டன, டிசம்பரின் 6.2 விழுக்காட்டு வீழ்ச்சிக்குப் பிறகு பரிவர்த்தனைகள் 30.8 விழுக்காடு உயர்ந்து 2,629 ஆக இருந்தன என்று தரவு காட்டியது.

பெரிய மறுவிற்பனை வீடுகளுக்கான தேவையும் சாதனை அளவாக மில்லியன் டாலர் பரிவர்த்தனைகளுமே விலை அதிகரிப்புக்குக் காரணம் என்று சொத்து ஆய்வாளர்கள் கூறினர்.

முதிர்ச்சியடைந்த, முதிர்ச்சி அடையாத பேட்டைகளில் அனைத்து வீட்டு வகைகளிலும் மறுவிற்பனை விலை அதிகரித்தாலும், ஆக அதிகமாக ஐந்தறை வீட்டு விலை 2.1 விழுக்காடு உயர்ந்துள்ளது.

பரிவர்த்தனை செய்யப்பட்ட ஐந்தறை வீடுகளின் எண்ணிக்கை 33.3 விழுக்காடு அதிகரித்துள்ளது, டிசம்பரில் 456ஆக இருந்த அந்த எண்ணிக்கை ஜனவரியில் 608 ஆக உயர்ந்தது. 2022 செப்டம்பருக்குப் பிறகு ஆக அதிகமான எண்ணிக்கை இது என்று திருவாட்டி சன் கூறினார்.

எஸ்ஆர்எக்ஸ், 99.co ஆகியவற்றின் அடிப்படையில் ஐந்தறை மறுவிற்பனை வீடுகள், ஜனவரி மாத மொத்த பரிவர்த்தனைகளில் 23.8 விழுக்காடு. இது டிசம்பர் மாத 23.5 விழுக்காட்டிலிருந்து சற்று அதிகரித்துள்ளது. நான்கறை வீடுகள் ஜனவரியில் 45.6 விழுக்காடாக அதிகரித்து பரிவர்த்தனைகளின் பெரும்பகுதியாக விளங்கியது.

15 மாத காத்திருப்பு காலத்தை முடித்த தனியார் வீடுகளை விற்ற முதல் தொகுதியினர் ஜனவரி முதல் வீவக மறுவிற்பனை வீடுகள் வாங்க முடியும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். காத்திருப்பு காலம் என்பது மறுவிற்பனை சந்தையை தணிப்பதற்காக 2022 செப்டம்பரில் கொண்டுவரப்பட்ட ஒரு தற்காலிக நடவடிக்கையாகும்.

ஜனவரி மாத மில்லியன் டாலர் பரிவர்த்தனைகள்

2023 ஆகஸ்ட் மாத 54 மில்லியன் டாலர் பரிவர்த்தனை சாதனையை ஜனவரி மாத மில்லியன் டாலர் விற்பனை முறியடித்தது. டிசம்பர் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 48 விற்பனையைவிட இது அதிகமாகும்.

ஜனவரியில் விற்கப்பட்ட 74 மில்லியன் டாலர் வீவக மறுவிற்பனை வீடுகளில், 19 நான்கறை வீடுகள், 31 ஐந்தறை வீடுகள், 24 எக்சிஸியூட்டிவ் அடுக்குமாடி வீடுகள் ஆகும்.

அவற்றில் பெரும்பாலானவை பீஷான், புக்கிட் மேரா, காலாங்/ வாம்போ, தோ பாயோ, குவீன்ஸ்டவுன், அங் மோ கியோ போன்ற முதிர்ச்சியடைந்த பேட்டைகளிலும், நான்கு முதிர்ச்சியடையாத நகரங்களான ஹவ்காங், பொங்கோல், உட்லண்ட்ஸ் ஆகியவற்றிலும் உள்ள வீடுகளாகும்.

தி பீக் @தோ பாயோ குடியிருப்பில், 40க்கும் 42வது மாடிக்கும் இடைப்பட்ட தளத்தில் உள்ள 117 சதுர மீட்டர் ஐந்தறை வீடு $1,568,888க்கு கைமாறியது. இது மறுவிற்பனை வீட்டுக்கான ஆக அதிகமான பரிவர்த்தனை விலையாகும்.

அதே குடியிருப்பில் உள்ள மற்றொரு அடுக்குமாடியில் 31வது முதல் 33வது மாடிகளுக்கு இடையில் உள்ள 117 சதுர மீட்டர் ஐந்தறை வீடு $1.54 மில்லியனுக்கு விற்கப்பட்டது.

பொங்கோல் ஃபீல்டில் உள்ள 149 சதுர மீட்டர் எக்ஸிகியூட்டிவ் வீடு $1.1 மில்லியனுக்கு விற்பனையானது. இது ஜனவரி மாதத்தில் முதிர்ச்சி அடையாத பேட்டையில் ஆக அதிக விலையில் பரிவர்த்தனையான வீடாகும்.

சீனப் புத்தாண்டு விடுமுறை, ‘பிடிஓ’ வீடுகள் விற்பனை நடவடிக்கை காரணமாக பிப்ரவரியில் பரிவர்த்தனைகள் குறையும் என்று சொத்துச் சந்தை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!