பார்க்லேன் கடைத்தொகுதி அழகு நிலையம் குறித்து எச்சரிக்கை

சேவைத் தரம் மோசமாக இருப்பது, சிகிச்சைக்கு நேரம் பதிவு செய்வதில் சிரமம் ஆகியவை குறித்து இரண்டு ஆண்டுகளாக புகார்களைப் பெற்ற பின்னர், பார்க்லேன் கடைத்தொகுதியில் உள்ள ஓர் அழகு நிலையம் குறித்து சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் (கேஸ்) பொதுமக்களை எச்சரித்துள்ளது.

கடைத்தொகுதியில் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள திவா லாஷ் & நெய்ல்ஸ் மீது 2022, 2023ஆம் ஆண்டுகளில் 89 புகார்கள் பெறப்பட்டன.

பெரும்பாலான புகார்களை நகம் அல்லது கண் இமை சேவைகளுக்காக ஏறக்குறைய $120 முதல் $1,200 வரையிலான தொகுப்புகளை வாங்கிய வாடிக்கையாளர்கள் செய்ததாக கேஸ் ஜனவரி 24ஆம் தேதி தெரிவித்துள்ளது.

முன்பதிவு செய்யும்போது தாங்கள் சிரமத்தை எதிர்கொண்டதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். அழகு நிலையம் பெரும்பாலும் பதிலளிக்கவில்லை அல்லது பதிலளிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது என்று புகாரில் கூறப்பட்டது.

முன்பதிவு செய்ய முடிந்த சந்தர்ப்பங்களில், அவர்கள் வரவேற்பறையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது.

இமை நீட்டிப்புச் சேவை குறித்தும் சில புகார்கள் செய்யப்பட்டன. சிகிச்சை மேற்கொண்ட சில நாள்களிலேயே இமை விழுந்து விடுவதாகவும், சிகிச்சைக்குப் பிறகு அசௌகரியம், வீக்கம், அரிப்பு ஏற்பட்டதாகவும் பயனீட்டாளர் புகார் தெரிவித்தனர்.

அதிருப்தியடைந்த சில வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் பணத்தைத் திருப்பித் தர முன்வந்தது. ஆனால், ஒப்பந்தப்படி நடந்துகொள்ளவில்லை என்று கேஸ் கூறியது.

புகார்களைத் தொடர்ந்து, நியாயமற்ற நடைமுறைகளை நிறுத்தவும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவும் சுய விருப்பத்தின் பேரில் உடன்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட நிறுவனத்துக்கு கேஸ் அழைப்பு விடுத்தது. ஆனால் அது அவ்வாறு செய்யவில்லை.

தற்போது அந்த நிறுவனத்திற்கு எதிராக மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க சிங்கப்பூர் வணிகப் போட்டி ஆணையத்தை ஈடுபடுத்தியுள்ளதாக கேஸ் கூறியது.

சிறப்புத் தள்ளுபடிகள், பரிசோதனை அல்லது ஒரு முறை மட்டுமே சலுகைகளாக சந்தைப்படுத்தப்படும் தயாரிப்புகள், சேவைகள் குறித்து பயனீட்டாளர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேஸ் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!