போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணை அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம், பொறுப்பு

போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணை அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரமும் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளன.

விமானப் போக்குவரத்து தொடர்பான சம்பவங்கள் நிகழும்போதெல்லாம் அவை குறித்து இவர்களிடம் தெரிவிக்கப்படுகிறது.

அந்த வரிசையில், போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட வேண்டிய விமானப் போக்குவரத்து சம்பவ வகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நடுவானில் விமான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு முடங்குவது, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு துண்டிக்கப்படுவது போன்றவை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

சம்பவங்கள் குறித்து சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் தெரிவிப்பதுடன் போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணை அதிகாரிகளிடமும் இவற்றைப் பற்றி இனி தெரிவிக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாது, ரயில் விபத்துகள், பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள், பொதுப் பேருந்துச் சேவை ஒப்பந்தங்களின்கீழ் இயங்கும் பேருந்துகள் தொடர்பான சம்பவங்கள் ஆகியவை குறித்தும் விசாரணை நடத்த இவர்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1ஆம் தேதியன்று போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணைச் சட்டம் நடைமுறைக்கு வந்ததை அடுத்து, இந்த மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சட்டம் தொடர்பான தீர்மானம் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஐந்து ஆண்டுகள் கழித்து, இச்சட்டம் நடப்புக்கு வந்துள்ளது.

இந்தச் சட்டத்தின்கீழ், போக்குவரத்து அமைச்சின் ஒரு பகுதியான போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணைப் பிரிவுக்குக் கடல்துறை தொடர்பான சம்பவங்களையும் விசாரிக்க அதிகாரம் தரப்பட்டுள்ளது.

அதன்படி, ஆறுகள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் படகுகள், நீர்க்கலன்கள் ஆகியவை தொடர்பான சம்பவங்கள் குறித்தும் இப்பிரிவு விசாரணை நடத்தும்.

இதற்கு முன்பு, இத்தகைய படகுகள் மற்றும் நீர்க்கலன்கள் தொடர்பான சம்பவங்களை இப்பிரிவு நடத்த வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததில்லை. அவை தொடர்பான விசாரணையை அதுவாகவே அப்பிரிவு முன்வந்து நடத்தியது.

அனைத்து வகை போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு விசாரணைக்கான சட்டத்தை ஒருங்கிணைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சு கூறியது.

இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஏன் ஐந்து ஆண்டுகள் ஆகின என்பது குறித்து அமைச்சிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அமைச்சு, இச்சட்டம் முழுமையடைந்து தாக்கத்தை ஏற்படுத்த, துணைச் சட்டங்களின் மேம்பாடு அவசியமாக இருந்தது என்று கூறியது.

சிங்கப்பூரிலிருந்து வேறொரு நாட்டுக்குச் செல்லும் ரயில் சேவைகள் இந்தச் சட்டத்துக்கு உட்படாது என்று தெரிவிக்கப்பட்டது, எதிர்காலத்தில் இயங்க இருக்கும் ஜோகூர் பாரு- சிங்கப்பூர் விரைவு ரயில் சேவை இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

சிங்கப்பூரிலிருந்து வேறு நாட்டுக்குச் செல்லும் ரயில் சேவைகள் தொடர்பான விசாரணை குறித்த ஏற்பாடுகள் மேம்படுத்தப்படுவதாகவும் அதுகுறித்த மேல்விவரங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சு கூறியது.

போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணைப் பிரிவு வெளியிடும் விசாரணை அறிக்கை, போக்குவரத்து அமைச்சின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

இதன்மூலம் பாதுகாப்பு தொடர்பான பாடங்களை அனைவரும் கற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சு கூறியது.

பிரிவின் விசாரணை அறிக்கையை நீதிமன்றங்களில் ஆதாரமாகப் பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண விசாரணை அதிகாரி வழக்குகள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

விபத்துகள், அசம்பாவிதங்கள் ஆகியவற்றைத் தடுப்பதே போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணைப் பிரிவின் இலக்கு என்றும் மற்றவர்களைக் குறைகூறுவது அல்ல என்றும் அமைச்சு கூறியது.

போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணைப் பிரிவு நடத்தும் விசாரணை, காவல்துறை, மரண விசாரணை அதிகாரிகள் , சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் கடல்துறை மற்றும் துறைமுக ஆணையம், நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவை நடத்தும் விசாரணைக்குத் தடையாக இருக்காது என்று அமைச்சு உறுதி அளித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!