டிசம்பரில் ஏற்றுமதி மீண்டும் குறைந்தது

மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி தொடர்ந்து சரிவைச் சந்தித்துவந்ததை அடுத்து சிங்கப்பூரின் ஏற்றுமதி டிசம்பர் மாதத்தில் மீண்டும் குறைந்தது.

‘எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ அமைப்பு ஜனவரி 17ஆம் தேதியன்று வெளியிட்ட தரவுகளின்படி எண்ணெய் சாரா ஏற்றுமதி, ஓராண்டுக்கு முன் பதிவானதைக் காட்டிலும் 1.5% சரிந்தது.

நவம்பர் மாதத்தில் 1% அதிகரிப்பு இருந்ததென அறியப்படுகிறது.

எண்ணெய் சாரா ஏற்றுமதி 13 மாதங்களாக சரிந்து வந்ததை அடுத்து கடந்த ஆண்டு நவம்பரில் மீண்டும் வளர்ச்சி தலைகாட்டுவதாக இருந்தது.

டிசம்பரில் மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி 11.7% சரிந்துள்ள நிலையில் 17வது மாதமாக ஏற்பட்ட இறக்கம் இது.

குறிப்பாக கணினிகள், அவற்றின் பாகங்கள், ஒருங்கிணைந்த மின்சுற்றுச் சாதனங்கள் ஆகியவற்றால் மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி குறைந்தது.

மின்னணு எண்ணெய் சாரா பொருள்களின் ஏற்றுமதியில் 10% கணினிகள். இவற்றின் ஏற்றுமதி ஆண்டு அடிப்படையில் 34.3% சுருங்கியது.

ஒருங்கிணைந்த மின்சுற்றுச் சாதனங்களில் ஏற்றுமதி 7.9% குறைந்தது.

இருப்பினும் மின்னணு சாராத பொருள்களின் ஏற்றுமதி ஆண்டு அடிப்படையில் 1.4% உயர்ந்தது.

நவம்பரில் பதிவான 5.2% வளர்ச்சியைத் தொடர்ந்து டிசம்பரில் பதிவாகியுள்ள இரண்டாவது ஏற்றம் இது.

மருந்துப் பொருள்கள், பணமல்லாத தங்கம், இதர தயாரிப்புப் பொருள்கள் ஆகியவற்றால் இந்த ஏற்றம் காணப்பட்டது.

சிங்கப்பூரின் ஆகப் பெரிய சந்தைகளுக்கான ஏற்றுமதி ஒட்டுமொத்தமாகச் சரிந்தன. குறிப்பாக, தைவான், தென்கொரிய, ஜப்பானிய சந்தைகளுக்கான ஏற்றுமதி குறைவாகப் பதிவானது.

அதேவேளை சீனா, ஹாங்காங், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றுக்கான ஏற்றுமதி அதிகரித்தது.

மாத அடிப்படையில் சிங்கப்பூரின் எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்தி 2.8% சரிந்து $14.6 பில்லியன் என்று பதிவானது. அதற்கு முந்திய மாதத்தில் 0.3% ஏற்றம் இருந்தது.

2022ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகம் 2023ன் டிசம்பரில் 6.8% சரிந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!