எளிதில் ஊடுருவப்படும் பாதுகாப்பற்ற கடவு‌‌ச்சொற்கள்

உலக அளவில் 2023ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட கடவுச்சொற்களில் 70 விழுக்காட்டுச் சொற்கள் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் ஊடுருவப்படுவதாக ‘நார்டுபாஸ்’ நிறுவனம் நடத்திய அண்மைய ஆய்வு கூறியுள்ளது.

அன்றாட வாழ்வில் மின்னிலக்கத் தளங்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், இணைய அடையாளங்கள், வங்கி, நிதிக் கணக்குகள், சிங் பாஸ் தொடங்கி சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் தளங்கள், மேகக்கணினிச் சேமிப்பு என அனைத்து முக்கியத் தரவுகளையும் பாதுகாக்க கடவுச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், பலரது கடவுச்சொற்கள் பலவீனமாக இருப்பதாகவும், அவற்றை இணைய ஊடுருவிகள் உள்ளிட்ட மோசடிப் பேர்வழிகள் எளிதாகக் கண்டறிய முடிவதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், உலக அளவில் பயன்படுத்தப்படும் பலவீனமான 300 கடவுச்சொற்களின் பட்டியலையும் அதனை ஊடுருவ ஆகும் நேரத்தையும் வெளியிட்டுள்ளது அந்த ஆய்வறிக்கை.

1234, 123456 போன்ற எண் வரிசைகள், ‘பாஸ்வேர்ட்’ என்பதையே கடவுச்சொல்லாக வைப்பது மிக பலவீனமானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 4 மில்லியன் மக்கள் இச்சொற்களைப் பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது. தவிர ‘அட்மின்’, 1111, 8888 என ஒரே எண்ணின் வரிசையையும் வைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்தப் பட்டியலில் உள்ள கடவுச்சொற்களை நீங்கள் பயன்படுத்தி வந்தால் அதை உடனடியாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது இந்த ஆய்வு.

தவிர்க்கப்பட வேண்டிய கடவுச்சொற்கள்

பொதுவாக பிறந்தநாள், திருமண நாள் போன்ற தங்களது சொந்தத் தகவல்கள், துணைவரின் பெயர், பிள்ளைகளின் பெயர், விசைப்பலகையில் அருகருகே இருக்கும் எழுத்துகள் உள்ளிட்டவற்றை கடவுச்சொற்களாக வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பெயருடன் 123 என எண்களை வரிசையாக வைத்திருத்தல், செல்லப்பிராணிகளின் பெயர்கள், வசிப்பிடத்தின் அஞ்சல் குறியீட்டெண்கள், வீட்டு எண்கள், திறன்பேசி எண்கள், அடையாள அட்டை எண்கள் போன்றவற்றைக் கடவுச்சொற்களாகப் பயன்படுத்துவது ஆபத்தானது

எந்த இணையத்தளத்திற்கு கடவுசொல்லைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அதே தளத்தின் பெயரையே கடவுச்சொல்லாக அமைப்பது பலவீனமாகக் கருதப்படுகிறது.

வலுவான கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுக்கும் வழிகள்

கடவுச்சொற்கள் பெரிய, சிறிய ஆங்கில எழுத்துகள், எண்கள், கேள்விக்குறி, காற்புள்ளி போன்ற குறியீடுகள் (*, #, $, %) உள்ளிட்டவற்றின் கலவையாக இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 8 முதல் 12 எழுத்துக்கள் கொண்ட கடவுச்சொற்களை அமைக்கலாம்.

பிறர் எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் இல்லாமல், நினைவில் நிற்கக்கூடிய பொருளற்ற சொற்றொடர்களை அமைக்கலாம்.

வலுவான கடவுச்சொல் உருவாக்கும் இணையத்தளம் மூலம் கடவுச்சொற்களை உருவாக்கலாம்.

நினைவில் கொள்ள வேண்டியவை

பல்வேறு தளங்களுக்கும் ஒரே கடவுச்சொல்லை வைப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.

அங்கீகரிக்கப்படாத இணையத்தளங்களில் பதிவு செய்யும்போது, தரவுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாமல் இருக்கலாம். அவ்வகைத் தளங்களுக்கும், முக்கிய இணையத்தளங்களுக்குமான கடவுச்சொற்கள் ஒன்றாக இருப்பின், திருடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பாதுகாப்பற்ற / பொது இடங்களில் இருக்கும் பெயர் தெரியாத ‘வைஃபை’ இணைப்பில் முக்கிய கடவுச்சொற்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.

முக்கியமான கணக்குகளுக்கு நீண்ட நாள்களுக்கு ஒரே கடவுச்சொல்லை வைத்திருப்பதும் பாதுகாப்பானது கிடையாது. அவ்வப்போது மாற்றுவது அவசியம்.

அடுத்தவர்களின் சாதனங்களைப் பயன்படுத்தும்போது கடவுச்சொற்களைச் சேமித்து வைக்க வேண்டாம்.

நினைவில் வைத்துக்கொள்ள கடவுச்சொற்களை எங்கும் எழுதி வைக்க வேண்டாம். அப்படி ஏதாவது ஒரு இடத்தில் குறிப்பெடுத்து வைக்க நேர்ந்தால், பயனர் பெயர், கடவுச்சொல்லை ஒரே இடத்தில் குறிப்பெடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

எந்த கடவுச்சொல்லையும் சமூக ஊடகக் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் போன்றவை மூலம் பகிர்வதைத் தவிர்க்கலாம்.

திறன்பேசிகளில் கைரேகை, முக அடையாளம் உள்ளிட்டவை மூலம் மட்டுமே உள்நுழையும்படி அமைத்துக்கொள்ளலாம்.

முக்கியக் கணக்குகளுக்கு ‘டூ ஃபேக்டர் ஆதன்டிகேஷன்’ எனும் ஈரடுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்து வைக்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!