ஜெமினி 1.0: கூகல் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மாதிரி

கூகல் நிறுவனம் கடந்த டிசம்பர் 6 ஆம் நாளன்று ‘ஜெமினி 1.0’ எனும் செயற்கை நுண்ணறிவு மாதிரியை வெளியிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு முன்னெப்போதையும் விட பன்மடங்கு அதிகரித்துள்ளது. தகவல் புள்ளிகளைக் கொண்டு, கொடுக்கப்படும் கட்டளைகளுக்கேற்ப தீர்வுகளை நொடியில் வழங்கும் இந்த செயற்கை நுண்ணறிவை தனிநபர் முதல் பெருநிறுவனங்கள் வரை பயன்படுத்துகின்றன.

அதன் நீட்சியாக கூகல் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த மாதிரி, எழுத்து வடிவம் மட்டுமின்றி புகைப்படங்கள், காணொளிகள், ஒலிக் குறிப்புகள் என அனைத்தையும் அடையாளப்படுத்தி, தக்க தகவல்களுடன் தீர்வு சொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது சிக்கலான கணிதம், இயற்பியல் தொடர்பான கேள்விகளுக்கும் விடையளிக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

இந்த பலவகை நுண்ணறிவு மாதிரியானது (Multimodal AI Model) பல்வேறு கூறுகளை அடையாளம் கண்டுகொள்ளும் வண்ணம் பயிற்றுவிக்கப்பட்டதோடு, உள்ளீடுகளை ஆராய்ந்து தக்க தீர்வளிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதனை அனைவரும் பயன்படுத்தும் மாதிரியாக வெளியிட்டுள்ளதோடு, தங்கள் நிறுவனத்தின் ‘பிக்சல்’ திறன்பேசியின் ‘8 ப்ரோ’வில், ‘ஜெமினி நானோ’ எனும் இதே நுண்ணறிவையும் இணைத்துள்ளது.

இதன்மூலம் திறன்பேசியின் செயல்பாடுகளும் மேம்படும் என்று குறிப்பிட்டுள்ளது அந்நிறுவனம்.

ஒலிப்பதிவு செய்யப்பட்ட குரலிலிருந்து,ஏறத்தாழ 28 மொழிகளில் அக்குறிப்புகளை உரையாக்குவது, கூகள் விசைப்பலகை மூலம், உள்வரும் செய்திகளுக்கு தகுந்த பதில்கள் படைப்பது என பயன்பாட்டை சுலபமாக்க இந்த ஜெமினி உதவும்.

மேலும், அதிர்வுகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காணொளிகளை நிலைப்படுத்துவது, குறைந்த வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட காணொளிகளை மேம்படுத்துவது, குரல் பதிவு செய்யப்படும் காணொளிகளில் பின்னணி சத்தங்களை அறிந்து களைவது ஆகியவற்றையும் இந்த ஜெமினி சாத்தியப்படுத்துகிறது.

சேதமடைந்த முக்கிய ஆவணக் குறிப்புகளை படமெடுத்தால், அதன் கறைகளை நீக்குவது, தெளிவாக்கிக் காட்டுவது போன்றவற்றையும் செய்யலாம். மேலும், திறன்பேசி பழுதடைந்தால், சரிசெய்யும் தருணத்தில் தகவல்களைப் பாதுகாக்க ‘ரிப்பேர் மோட்’ ஆகியவற்றையும் ஜெமினி வழங்குகிறது.

மேலும், திறன்பேசிக்கு அருகிலில்லாத நேரங்களில் வரும் அழைப்புகளுக்கு பதிலளித்து தகவல்களைப் பதிவு செய்வது, மேம்பட்ட காணொளி அழைப்பு முறைகள் என திறன்பேசிப் பயன்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த ஜெமினி நுண்ணறிவு மாதிரி உதவுகிறது.

இதுதவிர, கணினி மொழிகளான சி. சி++, ஜாவா, பைத்தான் உள்ளிட்ட குறியீடு முறைகளை அடையாளம் காண்பதோடு, தரப்படும் உள்ளீடுகளுக்கேற்ப, குறியீடு முறையில் தீர்வும் வழங்குகிறது ஜெமினி. இணைய பக்கம், திறன்பேசி விளையாட்டு வடிவமைப்பு போன்றவற்றிற்கு உதவியாக, முதற்படியை கட்டமைக்க இது உதவுகிறது என்கிறது அந்நிறுவனம்.

பலவகையான பயன்பாடுகள் கொண்ட இந்த மாதிரி தற்பொழுது ஆங்கிலத்தில் 180 நாடுகளில் பயன்படுத்தும் வகையில் வெளிவந்துள்ளது. எதிர்காலத்தில் இன்னும் பல மொழிகளிலும், ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அறிமுகம் காண உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!