சிவசக்தியாக தமன்னா

தமன்னா ‘ஒடேலா 2’ படத்தில் சிவசக்தி என்ற நாகசாது கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஓ.டி.டி.யில் வெளியான ‘ஒடேலா ரெயில்வே ஸ்டேஷன்’ திரைப்படம் பெரும் வெற்றிப் பெற்றது. அசோக் தேஜா இயக்கத்தில் வெளியான இந்த துப்பறியும் கதையை சம்பத் நந்தி எழுதியிருந்தார். தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘ஒடேலா - 2’ என்ற பெயரில் உருவாகிறது.

‘ஒடேலா - 2’ படத்தில் நடிகை தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தக் கதை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் பிரபலம் என்றாலும் ஓ.டி.டி.யில் தனது அண்மைய வெற்றிப் படங்களால் கவனம் ஈர்த்த தமன்னா இதில் இணைந்திருப்பது ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் படத்தை பல மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

சம்பத் நந்தி திரைக்கதையில் அசோக் தேஜா இயக்கும் இந்தப் படத்தை மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம்வொர்க்சின் கீழ் மது தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஹெபா பட்டேல், வசிஷ்டா என். சிம்ஹா, யுவா, நாக மகேஷ், வம்சி, சுரேந்தர் ரெட்டி, பூஜா ரெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் காசியில் தொடங்கியது. இந்த நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு படத்தின் முதல் சுவரொட்டியை படக்குழு வெளியிட்டு, சிவசக்தி என்ற நாகசாது கதாபாத்திரத்தில் நடிகை தமன்னா நடிப்பதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த சுவரொட்டியில் எண் 2, திரிசூலம் மற்றும் மூன்று கோடிட்ட விபூதி, அதன் மேல் உள்ள சிவப்பு ஆகியவை சிவலிங்கத்தை காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதையில் இடம்பெறும் ஆன்மீக விஷயத்தைக் குறிப்பதை இது உணர்த்துவதாக உள்ளது.

ஒரு கையில் கோலும் மற்றொரு கையில் உடுக்கையுமாக தமன்னா இடம்பெற்றுள்ள இந்த சுவரொட்டி தற்பொழுது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. கதை, நடிப்பு, தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப தரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கதை மிகப்பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், மும்பையில் ஒரு ஆடை அலங்கார நிகழ்ச்சியில் தமன்னா அணிந்திருந்த உடை பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

பாலிவுட் நடிகைகள் அவ்வப்போது இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, விலையுயர்ந்த ஆடை அணிந்து ஒய்யார நடைபோடுவது வழக்கம். இதில் நடிகைகள் அணிந்து வரும் ஆடைகளும் அழகு சாதன பொருட்களும் பெரியளவில் கவனம் ஈர்க்கும்.

அந்தவகையில் மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமன்னா அணிந்திருந்த கவர்ச்சிகரமான உடை பெரியளவில் கவனம் ஈர்த்தது.

அந்த உடையை அணிந்து அவர் ஒய்யார நடை போட்டு பார்வையாளர்களை பரவசப்படுத்தினார். இதுதொடர்பான புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இது சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. “ஆடை அலங்கார பவனி என்பதற்காக உடல் பாகங்களை அப்பட்டமாக காட்டும் வகையிலான உடைகள் அணியலாமா? பிரபலங்களே இப்படி செய்யலாமா? இது கவர்ச்சி அல்ல, இதுதான் ஆபாசம்’’, என்று ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

உடைகள் அணிவது என்பது அவரவர் விருப்பம். இதையெல்லாம் விமர்சனம் செய்வது கூடாது என்றும் ஒருசாரார் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை தமன்னா பாட்டியா ஒரு புதிய படப்பிடிப்பு செய்துள்ளார். அதில் அவர் மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு வெளியாகி இருக்கும் காணொளியில் அவர் மயக்கும் நீல நிற லெஹங்காவை அணிந்திருந்தார்.

அந்தப் புகைப்படம் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு, தமன்னா ஏஞ்சல் எனவும், மிகவும் அழகாக இருக்கிறீர்கள் எனவும் வர்ணித்து வருகின்றனர்.

திரையுலகில் 19 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் தமன்னா ‘ஒடேலா 2’ தவிர ஜான் ஆபிரகாமுடன் ‘வேதா’ என்ற படத்திலும், தமிழில் ‘அரண்மனை 4’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

‘அரண்மனை 4’ படத்தில் நடித்திருக்கும் தமன்னாவைப் பற்றி அந்தப் படத்தின் இயக்குநர் சுந்தர் சி கூறுகையில், “தமன்னாவைப் பார்த்து அதிர்ச்சியடைவீர்கள். அவரிடம் இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே முடியாது. அவ்வளவு பிரமாதமாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்,” என்று புகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!