இளம் குற்றவாளிகளுக்கான மறுவாழ்வுச் சேவைகளில் ஈடுபடும் இளையர்கள்

இளங்குற்றவாளிகள் தவறான நடத்தை தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபடுவதன் காரணமாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவதற்குப் பதிலாக அவர்கள் சமூகத்தில் ஒருங்கினைக்கப்படுவதற்காக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

அவற்றில் குறிப்பாக, ‘கைடன்ஸ் புரோகிராம்’ (Guidance Programme) எனும் வழிகாட்டல் திட்டம், 10 வயது முதல் 18 வயது வரையிலுள்ள இளங்குற்றவாளிகள் மீண்டும் தவறான பாதையில் செல்வதைத் தடுக்கும் விதமாக உள்ளது. ஆறு மாதத் திட்டமான இது, அதிகபட்சம் 12 மாதங்கள் வரை நீட்டிக்கப்படலாம்.

இதற்காகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு 2018ல் ஒருங்கிணைந்த சேவை வழங்குநர்களை நியமித்தது. ஒருங்கிணைந்த சேவை வழங்குநர்கள் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் நிதி உதவியோடு அந்த இளங்குற்றவாளிகளுக்கான பலதரப்பட்ட திட்டங்களை வழங்கும் சமூக சேவை நிறுவனங்கள் ஆகும். தற்போது தீவு முழுவதும் மொத்தம் 10 ஒருங்கிணைந்த சேவை வழங்கும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

அண்மையில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நியமித்த அந்த ஒருங்கிணைந்த சேவை வழங்குநர்கள் தங்களின் ஐந்தாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடினர். இதுவரை 2000க்கும் மேற்பட்ட இளங்குற்றவாளிகள் வெற்றிகரமாக அந்த திட்டங்களின் மூலம் பலனடைந்துள்ளனர்.

இத்திட்டங்களின் வழி இளங்குற்றவாளிகளைச் சரியான பாதைக்கு இட்டுச் செல்லும் மூன்று சமூக சேவையாளர்களின் அனுபவங்களை அறிந்து வந்தது இந்த வார இளையர் முரசு.

சிறிதளவு மாற்றமும் ஒரு முன்னேற்றமே

சிறுவயதிலிருந்தே பிறருக்கு உதவ வேண்டும் என்று விரும்பினார் ஏரன் ஸ்காட் டோனவன், 29. தனது பணியை அதற்கு ஏற்ப தேர்ந்தெடுத்தும் உள்ளார். ஃபெய் யுவே சமூக சேவை நிறுவனத்தில் ஏரன் சேவையாளராகப் பணிபுரிந்து வருகிறார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இளையர்களுடன் பணியாற்றிய அனுபவம் உள்ள ஏரன், திருட்டு, குண்டர் கும்பல் போன்றவற்றில் ஈடுபட்ட இளையர்களுடன் பணியாற்றியுள்ளார்.

வழிகாட்டல் திட்டத்தை ஒட்டிய தன் அனுபவத்தை விளக்கிய ஏரன், இளங்குற்றவாளிகள் இந்தத் திட்டம் மூலம் பல அம்சங்களில் கட்டுப்படுத்தப்படுவதாகக் கூறினார். பள்ளி முடிந்து வீட்டிற்கு நேரத்தோடு வந்துவிட வேண்டும், நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடக்கூடாது போன்ற நிபந்தனைகள் வீட்டில் விதிக்கப்படுவதால் இளையர்கள் அத்திட்டத்தில் ஈடுபட விரும்புவதில்லை என்று சொன்னார்.

பலதரப்பட்ட குற்றப் பின்னணிகளிலிருந்து வரும் இளங்குற்றவாளிகளைக் கையாளும்போது ஏரனுக்கு பணிச் சோர்வும் ஏற்படுவதுண்டு என்றார்.

தனக்கு ஆதரவு அளிப்பவர்களுடன் பழகுவதும் நேரம் கிடைக்கும்போது மனநல சிகிச்சை அமர்வுகளுக்குச் செல்வதும் அவருக்கு உதவுகின்றன.

ஒருமுறை ஓர் இளங்குற்றவாளியுடன் பேசிக்கொண்டிருந்தபோது அந்த இளையர், “எனக்கு இந்தத் திட்டத்தில் சேர நாட்டமில்லை. திருந்தி வாழ எப்போது எனக்குத் தோன்றுகிறதோ அப்பொழுதுதான் நான் மாறுவேன்,” என்று கூறியது ஏரனை இக்கட்டான ஒரு நிலைக்குத் தள்ளியது.

தான் என்ன செய்தாலும் அந்த இளையருக்குப் புரியப்போவதில்லை. அதனால், அவர்கள் எப்பொழுது திட்டத்தில் சேரத் தயாராக இருக்கிறார்களோ அப்பொழுதே வரலாம் என்பதை ஏரன் பரிந்துரைத்தார்.

இளையர்கள் திட்டம் மூலம் பலன் அடைந்ததை அவர்களின் நடத்தையில் ஏரன் கவனிப்பதுண்டு. வாழ்க்கையைப் பற்றிய நேர்மறையான கண்ணோட்டம், வாரந்தவறாமல் ஏரனை அவர்கள் பார்க்க வருவது போன்ற சிறிய மாற்றங்கள் மூலம் அவர்கள் திருந்தி வாழ்வதை அறியலாம் என்றார் ஏரன்.

நேர்மறையான மனிதர்களே முன்மாதிரி

வாழ்க்கையில் நேர்மறையான சிந்தனை கொண்டோரைத் தன் முன்மாதிரிகளாகக் கருதும் 29 வயது சரிதா பிள்ளை, தற்போது கேர் கார்னரின் திட்டமான க்ரோஸ்ரோட் இளையர் நிலையத்தில் ஒருங்கிணைந்த சேவை வழங்கும் சமூக சேவையாளராகப் பணிபுரிகிறார்.

இத்துறையில் ஐந்தாண்டுகளாக இருக்கும் இவர், வழிகாட்டல் திட்டத்தைத் தவிர்த்து மேம்படுத்தப்பட்ட இளையர் கண்காணிப்புத் திட்டம், மேம்படுத்தப்பட்ட ‘ஸ்திரீட்வைஸ்’ திட்டம், திருட்டுத் தடுப்புத் திட்டம் போன்ற இதர திட்டங்களும் இளங்குற்றவாளிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார். ஆனால் இத்திட்டங்களில் சேரும் இளையர்கள் இவற்றை ஒரு தண்டனையாகப் பார்ப்பதாக கூறினார்.

ஒரு முறை 12 வயதுடைய இளையரைக் கையாள வேண்டிய சூழலில் சரிதாவுக்கு அந்த இளையரிடம் திட்டத்தின் நோக்கத்தைப் பற்றி புரியவைக்கச் சவாலாக இருந்தது. அவர்களின் மனப்பான்மையை மாற்றித் திட்ட அமர்வுகளுக்கு வரவழைப்பதே ஒரு பெரிய சவால் என்று சரிதா கருதுகிறார்.

இளையர்களின் விருப்பத்துக்கு மாறாக அவர்கள் அந்தத் திட்டங்களில் சேர்ந்துகொள்வதால் அவர்கள் பலவகையான உணர்ச்சிகளை வெளிக்காட்டுகிறார்கள். சரிதாவிடம் வந்த இளையர், ஒருமுறை மிக சோகமாகவும் அதேநேரத்தில் கோபமாகவும் நடந்துகொண்டார்.

அந்த உணர்ச்சி சரிதாவைக் குறிவைத்து வெளிப்படுத்தப்படவில்லை. தான் ஏன் இதுபோன்ற நிலைக்குத் தள்ளப்பட வேண்டும் என்று இளங்குற்றவாளிகள் வருத்தப்பட்டு நடந்துகொள்வதே என்றார் சரிதா.

திட்டத்தில் சில காலம் பயணித்த பிறகு இளங்குற்றவாளியின் ஒழுக்கத்தில் மாற்றங்கள் தென்படுகிறதா என்பதைச் சரிதா சிறிய மாற்றங்களின் மூலம் கண்காணிக்கிறார்.

மாற்றங்கள் பெரிதளவில் இல்லாமல் இருந்தாலும் சமூகத்திற்குத் திருப்பித் தருவது போன்ற மாற்றங்கள் மூலம் அந்த இளையர் திருந்திவிட்டாரா என்பது சரிதாவுக்குத் தெரிய வரும்.

மாற்றத்தை ஏற்படுத்த முனைப்பு

வித்யகீஷன் ஒன்பது ஆண்டுகளாக இளையர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதில் நான்கு ஆண்டுகள் குடும்பங்களுடன் வேலை பார்த்த அனுபவமும் ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த சேவை வழங்குநர் அனுபவமும் இவருக்கு உண்டு. 37 வயதாகும் இவர், தற்போது அங் மோ கியோ குடும்பச் சேவை நிலைய சமூக சேவைகள் நிறுவனத்தில் இளையர் சேவைப் பிரிவில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

வழிகாட்டல் திட்டத்தைப் பற்றி பகிர்ந்துகொண்ட அவர், திட்டத்தில் சேரும் இளங்குற்றவாளிகள் பயன் அடைவதாகத் தெரியாத நிலையில் அவர்களின் பெற்றோர்களை அணுக வேண்டிய சூழல் ஏற்படுவதாகத் தெரிவித்தார். ஆனால், சில நேரங்களில் பெற்றோர் ஒத்துழைப்பும் கேள்விக்குறியாக உள்ளது என்றார்.

இளையர்களைச் சரியான பக்குவத்துக்குக் கொண்டுவருவதோடு வித்யகீஷன் அவர்கள் பயிலும் பள்ளிகளோடு இணைந்து கல்விமீது அவர்கள் செலுத்தும் நாட்டத்தையும் கண்காணித்து வருகிறார். ஒரு சமூக சேவையாளராக ஒருவருக்கு உதவ முன்வரும்போது உதவியைப் பெறுபவரும் ஈடுபாடு காட்ட வேண்டும் என்ற வித்யகீஷன், அந்தச் சிந்தனை இளையர்கள் பலரிடம் தென்படுவதில்லை என்றார்.

தன்னைப் போன்ற சமூக சேவையாளர்களை ஓர் எதிரியாக இளங்குற்றவாளிகள் பார்க்கின்றனர் என்ற வித்யகீஷன், ஒருமுறை ஓர் இளையரிடம் பேசிக்கொண்டிருந்தபோது தான் சொல்வதைக் கேட்காமல் இளையர் சுவரைக் குத்தியதாகக் கூறினார். இதுபோன்ற நேரங்களில் பொறுமையை இழக்காமல் இளையரைக் கவனத்தோடு அணுக வேண்டுமென்றார்.

பணியின் சவால்களுக்கிடையே நாள் முடிவில் ஏதோ ஒரு வகையில் அந்த இளையரின் வாழ்வில் சிறிதளவாவது மாற்றம் ஏற்பட தான் உந்துதலாக இருப்பதை நினைத்து மனநிறைவடைகிறார் வித்யகீஷன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!