பால்டிமோர் பால விபத்து: விநியோகச் சங்கிலி இடையூறு குறித்த அச்சம்

பால்டிமோர்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் கப்பல் மோதியதால் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தை அடுத்து, உலகெங்கும் விநியோகச் சங்கிலி பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

விபத்தை அடுத்து, மறுஅறிவிப்பு வரும்வரை அந்தத் துறைமுகம் வழியாகக் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் உலகளாவிய நிலையில் விநியோகச் சங்கிலி பாதிக்கப்படும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

கார், திரவ நிலையிலான இயற்கை எரிவாயு ஆகியவற்றின் ஏற்றுமதியில் அது முக்கியப் பங்கு வகிப்பதை அவர்கள் சுட்டினர். சென்ற ஆண்டு அத்துறைமுகம் வழியாக 47 மில்லியன் டன்னுக்கும் அதிகமான சரக்குகள் அனுப்பப்பட்டன.

இவ்வேளையில், உள்ளூர் நேரப்படி மார்ச் 27ஆம் தேதி காலை 6 மணிக்கு (சிங்கப்பூரில் மாலை 6 மணி) முக்குளிப்பாளர்கள் தேடல், மீட்புப் பணியை மீண்டும் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாலி கப்பல் 2016ல் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தில் விபத்துக்குள்ளானது. 2023ல் சிலியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அக்கப்பலை உந்தும் இயந்திரத்திலும் துணை இயந்திரங்கள் சிலவற்றிலும் குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அக்கப்பல் 2023 ஜூனிலும் செப்டம்பரிலும் இருவேறு வெளிநாட்டுத் துறைமுகச் சோதனைகளில் தேர்ச்சி பெற்றதாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் கூறியுள்ளது.

டாலி கப்பலின் உரிமையாளரான சிங்கப்பூரின் ‘கிரேஸ் ஓஷியன்’ நிறுவனம், பல மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகை வழங்க நேரிடும் என அஞ்சப்படும் நிலையில், 1851ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டம் அந்தத் தொகையைக் குறைக்க உதவக்கூடும் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.

1912ல் டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது அக்கப்பல் உரிமையாளர்களுக்கு அந்தச் சட்டம் கைகொடுத்தது.

விபத்துக்குப் பிறகு கப்பலின் மதிப்பு, அதிலிருந்த சரக்கைக் கொண்டுசெல்ல வசூலிக்கப்பட்ட கட்டணம் ஆகியவற்றின் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகையைக் குறைக்க அச்சட்டம் உதவும் எனக் கருதப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!