ஏலத்தில் $961,400க்கு விலைபோன பிரபல ‘டைட்டானிக்’ மரத்துண்டு

பலரையும் அழவைத்த ஒரு திரைப்படம், ‘டைட்டானிக்’. அந்தப் படத்தின் கதாநாயகி ரோஸ், உயிர்பிழைப்பதற்குக் காரணமாக இருந்த மரத்துண்டு ஏலம் ஒன்றில் $718,750க்கு (S$961,400) விலைபோனது.

‘பிளேனட் ஹாலிவுட்’ என்ற உணவக, உல்லாச விடுதி நிறுவனத்திற்குச் சொந்தமான பொருள்களும் ஆடைகளும் ஏலமிடப்பட்டபோது இந்த மரத்துண்டும் விற்பனை செய்யப்பட்டது.

கதவுச் சட்டத்தின் ஒரு பகுதியான அந்த மரத்துண்டில், காதலிக்கு மட்டுமே இடமுண்டு என்று விடாப்பிடியாகக் கூறும் கதாநாயகன் பின்னர் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய காட்சி பெரும் சர்ச்சைக்கு உள்ளான காலமும் இருந்தது.

ரோஸ் ஒரு சுயநலவாதி என்றும் கதாநாயகன் ஜேக் ஒரு முட்டாள் என்றும் கூறி ‘டைட்டானிக்’ திரைப்பட இயக்குநருக்குப் பலரும் மின்னஞ்சல்கள் அனுப்பினர்.

உண்மையான ‘டைட்டானிக்’ கப்பலிலிருந்து கிடைத்த குப்பையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படத்துக்காக இந்த மரத்துண்டு உருவாக்கப்பட்டது. படம்: இணையம்

இதற்கிடையே, கதவு என்று பலரும் தவறாக நினைத்திருந்த அந்த மரத்துண்டு, 1912ஆம் ஆண்டில் நடந்த உண்மையான ‘டைட்டானிக்’ அசம்பாவிதத்தைச் சேர்ந்த குப்பையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்று ‘ஹெரிடேஜ் ஆக்‌ஷன்ஸ்’ குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!