மாஸ்கோ தாக்குதல் எதிரொலி: விழிப்புநிலையில் இந்தோனீசியா

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் மாஸ்கோ தாக்குதல் போல் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்தோனீசியா அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு இசைக்கூடத்தில் கடந்த 23.3.2024ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 130க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்எஸ் பயங்கரவாதக் குழு பொறுப் பேற்றிருக்கிறது.

இந்நிலையில் இந்தோனீசியாவில் இதே பாணியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் அந்த நாட்டின் அரசியல், சட்ட, பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹாடி ஜாஜான்டோ தெரிவித்துள்ளார். மார்ச் 25ஆம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

ஈஸ்தர், ஈகைப் பெருநாள் போன்ற மத நிகழ்ச்சிகளில் எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தயார்நிலையில் உள்ளது என்று அமைச்சர் ஹாடி கூறினார்.

மேலும், இதுபோன்ற தாக்குதலில் பயங்கரவாதிகள் ஈடுபடக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரில் சுய தீவிரவாதச் சிந்தனையை வளர்த்துக்கொண்ட தனிநபர்களையும் பயங்கரவாதக் குழுக்களையும் அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து வருகிறது என்று அமைச்சர் ஹாடி தெரிவித்தார்.

மாஸ்கோவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அதே பாணியில் தாக்குதல் நடத்தக்கூடிய வலுப்பெற்றுள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகளை அரசாங்கம் அடையாளம் கண்டு கண்காணிக்கத் தொடங்கிவிட்டது.

இதில், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு முகவை (பிஎன்பிடி), உளவுத்துறை, பயங்கரவாதத்திற்கு எதிரான காவல் படை ஆகிய அமைப்புகளுடன் பாதுகாப்புத்துறை இணைந்து செயலாற்றி வருகிறது என்று அமைச்சர் ஹாடி கூறினார்.

செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்ட பிஎன்பிடி தலைவர் ரிக்கோ அமெல்ஸா, “சமூக ஊடகங்களில் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு ஆதரவு அளிப்பவர்கள் இன்னும் இருக்கவே செய்கின்றனர். பயங்கரவாதச் செயல்களை ஊக்குவிப்போர், பரப்புவோர் அடையாளம் காணப்பட்டு அதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்,” என்றார்.

உலகம் முழுவதும் பயங்கரவாதச் சிந்தனையுள்ளவர்கள் மக்களோடு மக்களாய் கலந்து வாழ்ந்து வருகின்றனர்.

“இவ்வாறு வாழ்பவர்களின் சித்தாந்தத்திற்கு எதிராக நாம் எவ்வாறு போராடுவது, அதற்கு நாம் அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், பயங்கரவாதச் சிந்தாத்தத்தைக் கொண்டிருப்பவர்களின் மனத்தை மாற்ற முடியும்,” என்று பயங்கரவாதக் கட்டமைப்பின் உளவு அமைப்புகள் பற்றி ரிக்கோ குறிப்பிட்டார்

உலகின் எந்த மூலையில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தாலும் அதே பாணியில் இந்தோனீசினியாவில் தாக்குதல் நடத்தப்படும் வரலாற்றை நாம் கொண்டுள்ளோம் என்று பயங்கரவாதச் சித்தாத்தம் குறித்த ஆய்வு நிலையத்தின் மூத்த ஆய்வாளர் திரு முஹ் தவ்ஃபிகுரோமன் தெரிவித்துள்ளார்.

சென்ற 2013ஆம் ஆண்டு நடந்த போஸ்டன் மாரத்தோன தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். 260க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்தத் தாக்குதலில் பிரஷர் குக்கர் பாணி வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்த வெடிகுண்டு கைப்பேசி மூலம் இயக்கப்பட்டது.

இந்தோனீசியாவின் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதிகள், அதே பாணியிலான பிரஷர் குக்கர் வெடிகுண்டை இந்தோனீசியாவில் வெடிக்கச் செய்தனர். காவல்துறை மற்றும் பொதுமக்களை குறிவைத்து ஆறு முறை தாக்குதல் நடத்த முயற்சி நடத்தப்பட்டது என்று அவர் கோடிட்டுக் காட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!