களங்கத்தைப் போக்கி பொருளிலை மேம்படுத்துவதில் ஸின்ஜியாங் தீவிரம்

உரும்கி: உய்கர் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை, அடக்குமுறையைக் கட்டவிழ்த்ததாக தன்மீது அனைத்துலக அளவில் உள்ள களங்கத்தைத் துடைத்தொழிக்க சீனாவின் ஸின்ஜியாங் மாநிலம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

பொருளியலை மேம்படுத்தி, சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் முயற்சியில் அது இறங்கியுள்ளது.

ஸின்ஜியாங்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் அரசியல் ஆலோசனை மற்றும் சட்ட அமர்வுக்கான தொடக்க விழாவில் கலந்துகொள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு முதல்முறையாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

விழாவில் கலந்துகொண்ட செய்தியாளர்களில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்களும் அடங்குவர். ஹாங்காங் மற்றும் மக்காவிலிருந்தும் செய்தியாளர்கள் கலந்துகொண்டனர்.

அதுமட்டுமல்லாமல், சீனாவுக்கான ஈரானிய, கஸக்ஸ்தான், கிர்கிஸ்தான், தஜிக்கிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், பாகிஸ்தான், மங்கோலியா, பெலாருஸ் ஆகிய நாடுகளின் தூதர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

ஸின்ஜியாங்கின் மிகவும் முக்கியமான அரசியல் நிகழ்வான இந்த ஆலோசகனை,. சட்ட அமர்வு அண்மையில் நிறைவடைந்தது.

அரசியல் கூட்டங்களைக் காண செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கபடவில்லை.

தொடக்க விழாவில் மட்டும் அவர்கள் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த மாற்றத்துக்கு ஸின்ஜியாங் மாநிலத்தின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மா ஸிங்ருய் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஸின்ஜியாங் மாநிலத்தின் பொருளிலை மேம்படுத்த அம்மாநில கட்சித் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

உய்கர் முஸ்லிம் சிறுபான்மையினத்தவருக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்ததாகக் குறைகூறப்படும் திரு சென் குவான்குவோவுக்குப் பதிலாக திரு மா மாநிலக் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

திரு சென் 2017ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரை ஸின்ஜியாங் மாநிலத்துக்குத் தலைமை தாங்கினார். அப்போது உய்கர் மக்களுக்கு எதிராக அவர் பல கொடுமைகளை இழைத்ததாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியிருந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!