ஸின்ஜியாங் ‘இனப்படுகொலை’; அமெரிக்கா கண்டனம்

வாஷிங்­டன்: ஸின்­ஜி­யாங்­கில் உள்ள உய்­கர் முஸ்­லிம்­களை சீனா நடத்­தும்­வி­தத்தை 'இனப்­ப­டு­கொலை மற்­றும் மனி­த­கு­லத்­திற்கு எதி­ரான குற்­றச்­செ­யல்­கள்' என்று நேற்று வெளி­யி­டப்­பட்ட மனித உரிமை ஆண்டு அறிக்­கை­யில் அமெ­ரிக்கா குறிப்பிட்டுள்ளது.

அமெ­ரிக்­கா­வின் முன்­னாள் அதி­பர் டோனல்ட் டிரம்ப்­பும் கடந்த ஜன­வ­ரி­யில் ஸின்ஜியாங் தொடர்பில் கூறி­யி­ருந்­ததை பைடன் நிர்­வா­க­மும் தற்­போது உறுதி செய்­துள்­ளது.

உலகம் முழு­வ­தும் மனித உரிமை மீறல்­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

இவற்­றில் சீனா­வின் மனித உரிமை மீறல்­களும் அடங்­கும் என்று அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் அந்­தோணி பிளிங்­கன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­துள்­ளார். ரஷ்­யா­வில் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்­க­ளை­யும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

பெலா­ரஸ், ஏமன், எத்­தி­யோப்­பியா, சிரியா உள்­ளிட்ட நாடு­க­ளி­லும் மனித உரிமை மீறல்­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

மியன்­மா­ரில் நடந்­துள்ள ஆட்­சிக் கவிழ்ப்­பை­யும் பிளிங்­கன் கண்­டித்­துள்­ளார்.

மியன்­மா­ரில் ஜன­நா­யக முறை­யில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அர­சாங்­கத்­தின் ஆட்சி திரும்ப வேண்­டும் என்­று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

அமெ­ரிக்­கா­வின் வெளி­யு­றவு கொள்­கை­யில் மனித உரிமை மீறல் பிரச்­சி­னை­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் வழங்க அதி­பர் பைடன் கடப்­பாடு கொண்­டி­ருப்­ப­தாக செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் திரு பிளிங்­கன் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!