இந்தியாவும் சீனாவும் பத்திரிகையாளர்களை கூண்டோடு வெளியேற்றியதால் பதற்றம் அதிகரிப்பு, உறவில் பாதிப்பு

இந்­தி­யா­வின் பத்­தி­ரி­கை­யா­ளர்­களை சீனா வெளி­யேற்­றி­யது. அத­னைத் தொடர்ந்து இந்­தி­யா­வும் சீனப் பத்­தி­ரி­கை­யா­ளர்­களை வெளி­யேற்­றி­யது.

இந்த வெளி­யேற்­றங்­க­ளுக்­குப் பிறகு, குறிப்­பாக அண்­மைய வாரங்­க­ளாக இரு நாட்டு உற­வில் முன்­னர் எப்­போ­தும் இல்­லாத அள­வுக்கு ஒரு பின்­ன­டைவு ஏற்­பட்டு உள்­ளது.

நிலைமை தொடர்ந்­தால் இரு நாடு­க­ளி­லும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட சீன, இந்­தி­யப் பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் அறவே இல்­லாத நிலை ஏற்­படும் என்­றும் அது மோச­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும் என்­றும் முன்­னாள் அரச தந்­தி­ரி­கள் அச்­சம் தெரி­விக்­கின்­ற­னர்.

எல்­லைப் பிரச்­சி­னை­யால் பதற்­றம் தொட­ரும் நிலை­யி­லும் புவி­சார் அர­சி­யல் போட்டி அதி­க­ரித்து வரும் நிலை­யி­லும் சீனா­வும் இந்­தி­யா­வும் ஒன்­றை­யொன்று தொடர்­பு­கொள்­வ­தில் சிக்­கல் எழ­லாம் என்­றும் அவர்­கள் கூறு­கின்­ற­னர்.

லடாக்­கில் எழுந்த எல்­லைப் பூச­லைத் தொடர்ந்து 2020 மே மாதம் இரு­நாட்டு ராணு­வ­மும் மோதிக்­கொண்­ட­தில் இருந்து இந்­தி­யா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யில் பதற்­றம் தொடர்­கிறது.

இது­கு­றித்து அண்­மை­யில் செய்­தி­யா­ளர்­க­ளுக்கு சிறப்பு பேட்­டி­ய­ளித்த இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர், 2020 மே மாதம் சீனா இருநாட்டு எல்லை தொடர்பான ஒப்­பந்­தங்­களை மீறி, எல்­லைக்கு அருகே அதிக எண்­ணிக்­கை­யி­லான ராணுவ வீரர்­களை நிறுத்­தி­யது முதல் பூசல் நீடிப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

அந்­தச் சம்­ப­வம் நிகழ்ந்­தது முதல் இரு நாடு­களும் எதி­ரெ­திர் நாடு­க­ளின் பத்­தி­ரி­கை­யா­ளர்­களை கொஞ்­சம் கொஞ்­ச­மாக வெளி­யேற்றி வந்­தன. அண்­மைய வாரங்­க­ளாக அந்த எண்­ணிக்கை அதி­க­மா­னது.

கிட்­டத்­தட்ட அந்­தந்த நாட்­டின் எல்­லாப் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளை­யும் வெளி­யேற்ற இந்­தி­யா­வும் சீனா­வும் நட­வ­டிக்கை எடுத்­தன.

ஏரா­ள­மான சீன பத்­தி­ரிகை யாளர்­க­ளின் விசாவைப் புதுப்­பிக்க இந்­தியா மறுத்­தது. அதன் விளை­வாக, 2020ஆம் ஆண்டு தொடக்­கத்­தில் 10 முதல் 15 வரை­யி­லான சீன செய்­தி­யா­ளர்­கள் இந்­தி­யா­வில் இருந்த நிலை மாறி தற்­போது ஒரே ஒரு செய்­தி­யா­ளர் உள்­ளார்.

சீனா­வும் பதி­லுக்­குப் பதில் நட­வ­டிக்கை எடுத்­த­தால் அங்­கும் ஒரே ஓர் இந்­திய செய்­தி­யா­ளர் தற்­போது உள்­ளார்.

சீனா­வின் போக்கு குறித்து விமர்­சித்த திரு ஜெய்­சங்­கர், மோடி­யின் ஒன்­பது ஆண்டு கால அர­சாங்­கத்­தில் உல­கின் அதி­கார மைய­மா­கத் திக­ழும் பெரும்­பா­லான நாடு­க­ளு­டன் இந்­தியா கொண்­டி­ருக்­கும் உறவு மேம்­பட்­டுள்ள நிலை­யில் சீனா­வு­ட­னான உற­வில் மட்­டும் முன்­னேற்­ற­மில்லை என்­றார்.

எல்லை அருகே ராணு­வத்தை நிலை­நி­றுத்தி தனது வலி­மை­யைக் காட்ட சீனா தொடர்ந்து முயன்று வருவதும் இதற்­கு ஒரு கார­ணம் என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!