40 நாள்களுக்குப் பிறகு காட்டில் 4 குழந்தைகள் மீட்பு

விமான விபத்­தில் சிக்­கிய நான்கு குழந்­தை­கள் 40 நாள்­க­ளுக்­குப் பிறகு கொலம்­பி­யா­வின் அமே­சான் காட்­டுக்­குள் உயி­ரு­டன் மீட்­கப்­பட்டு உள்­ள­னர். 13, 9, 4 மற்­றும் 1 வயது ஆன அந்த நான்கு பழங்­கு­டி­யி­னக் குழந்­தை­களும் உயி­ரு­டன் திரும்பி வந்­த­தில் நாடே மகிழ்ச்சி அடை­வ­தாக கொலம்­பிய அதி­பர் தெரி­வித்­துள்­ளார். இருப்­பி­னும், விபத்­தில் இந்­தக் குழந்­தை­க­ளின் தாயார் இறந்து­விட்­டார்.

மே 1ஆம் தேதி அமே­சான் காட்­டுப் பகு­தி­யின் வான்­வெ­ளி­யில் நிகழ்ந்த விமான விபத்­தில் இரு விமா­னி­களும் மாண்­டு­விட்­ட­னர். இந்த விபத்­தில் சிக்­கிய நான்கு குழந்­தை­க­ள் இருக்கும் இடம் தெரிந்ததா மே 17ஆம் தேதி தாம் வெளியிட்ட டுவிட்டர் பதிவை சரியான தகவல் இல்லை என அதிபர் பின்னர் நீக்கிவிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் களை மீட்க அர­சாங்­கம் பெரு­முயற்சி மேற்­கொண்­ட­தாக அதி­பர் கஸ்­டாவோ பெட்ரோ தெரி­வித்­தார். உள்­ளூர் மக்­க­ளின் துணை­யு­டன் ஏரா­ள­மான ராணுவ வீரர்­கள் தேடு­தல் பணி­யில் ஈடு­பட்ட நிலை­யில் ஒரு­வ­ழி­யாக காட்­டுக்­குள் அவர்­கள் இருக்­கும் இடம் தெரிய வந்­தது. உயர்ந்த மரங்­க­ளுக்கு நடுவே சிர­மப்­பட்டு ஹெலி­காப்­டர்­கள் அந்த நான்கு குழந்­தை­க­ளை­யும் மீட்டு வந்­தது.

பின்­னர் விமா­னத்­தில் தலை­நகர் பொகோட்­டா­வுக்கு அனுப்­பப்­பட்ட குழந்­தை­கள் அங்­கி­ருந்து ஆம்­பு­லன்ஸ் மூலம் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டன. நால்­வ­ரும் உடல் மெலிந்து, சுய­நி­னை­வு­டன் இருந்ததாக ராணுவத்தினர் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!