இவ்வாண்டு வளர்ச்சி வாய்ப்பு மந்தம்: நாணய ஆணையம்

அமெ­ரிக்கா, ஐரோப்பா, ஜப்­பான் போன்ற வளர்ச்­சி­ய­டைந்த நாடுகளில் இருந்து மின்­ன­ணு­வி­யல் ஏற்­று­ம­தி­க­ளுக்­கான தேவை குறைந்­துள்ள நிலை­யில், சிங்­கப்­பூ­ரின் வளர்ச்சி வாய்ப்புகள் மேலும் நிலை­யற்றதாக இருப்­ப­தாக சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் வெளி­யிட்டுள்ள அறிக்­கை­யில் எச்­ச­ரித்­துள்­ளது.

பெரிய பொரு­ளி­யல்­க­ள் இடையே சீனா விதி­வி­லக்­காக விளங்­கும். அங்கு கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் முடி­வுக்கு வந்த பிறகு பொரு­ளி­யல் வளர்ச்சி மீட்­சி­ய­டைய இருப்­ப­தாக ஆணை­யம் நேற்று வெளி­யிட்ட விரி­நி­லைப் பொரு­ளி­யல் மறு­ஆய்வு அறிக்கை தெரி­வித்­தது.

எனி­னும், சுற்­றுப்­ப­ய­ணத்­துறைக்கு அப்­பாற்­பட்டு, சீனா அதன் எல்­லை­களை மீண்­டும் திறந்­த­தன் கார­ண­மாக சிங்கப்பூர் உள்­ளிட்ட ஆசிய நாடு­களின் ஏற்­று­ம­தி­க­ள் மேம்பாடு சற்று மந்­த­மாக இருக்கும் என முன்­னு­ரைக்­கப்­படு­வதாக ஆணை­யம் குறிப்­பிட்டது.

வட்டி விகி­தங்­களின் அதி­க­ரிப்­பா­லும் அமெ­ரிக்க, ஐரோப்பிய வங்­கித் துறை­களில் நிலவும் கொந்­த­ளிப்­பா­லும் சிங்கப்பூர் நிதித் துறைக்­கான கண்­ணோட்டம் வலு­வி­ழந்­து காணப்படுவதாக ஆணை­யம் கூறி­யது.

அமெ­ரிக்க-சீன வர்த்­தக மோதல்­க­ளுக்கு மத்­தி­யில் விநி­யோ­கத் தொடர்­கள் மறு­கட்­ட­மைக்­கப்­ப­டு­வது, உல­க­ளா­விய தொழில்­நுட்­பத் துறை­யின் வளர்ச்­சிக்­கும் சிங்­கப்­பூ­ரின் மின்­ன­ணு­வி­யல் துறைக்­கும் அச்­சு­றுத்­தல் விடுப்­ப­தாக ஆணை­யம் எச்­ச­ரித்­தது.

சிங்­கப்­பூர் மின்­ன­ணு­வி­யல் துறை, உற்­பத்­தித் துறை­யில் 42 விழுக்­கா­டும் பண­வீக்­கம் சரி­செய்­யப்­ப­டு­வ­தற்கு முந்­திய மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் 10 விழுக்­கா­டும் பங்கு வகிக்­கிறது.

பொரு­ளி­யல் நட­வ­டிக்கை வலு­வி­ழந்­தால் உல­கம் முழு­வதும் பண­வீக்­கத்­தின் சரிவு வேக­ம­டை­யும். ஆனா­லும், பெரும்­பா­லான மத்­திய வங்­கி­கள் விரும்­பு­வ­தை­விட விலை­வாசி வேக­மாக உயர்­கிறது. இத­னால் வட்டி விகி­தங்­கள் தொடர்ந்து அதி­க­மாக இருக்­கும் என்று ஆணை­யம் விளக்­கி­யது.

உள்­நாட்டு ஊழி­யர் சந்­தை­யில் இறுக்­கம் குறைந்து சம்­பள ஏற்­றம் மித­ம­டை­வ­தால், பண­வீக்க அழுத்­தம் வலு­வி­ழக்­கும் என்று ஆணை­யம் நம்­பு­கிறது.

ஆண்­டி­று­திக்­குள் மூலா­தாரப் பண­வீக்­கம் 2.5 விழுக்­காடு வரை குறை­யும் என்று ஆணை­யம் எதிர்­பார்க்­கிறது. இதன்­மூ­லம், ஆண்டு சரா­சரியாக அது 3.5-4.5 விழுக்காட்டிற்கு இடைப்­பட்­ட­தாக இருக்­கும்.

இவ்­வாண்டு சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் 0.5 விழுக்­காட்­டிற்­கும் 2.5 விழுக்­காட்­டிற்­கும் இடைப்­பட்ட நிலை­யில் வளர்ச்சி­ய­டை­யும் என்ற தனது முன்­னு­ரைப்­பில் ஆணை­யம் மாற்­றம் செய்­ய­வில்லை. எனி­னும், இடர்­கள் குறித்து அது எச்­ச­ரித்­தது.

“உல­க­ளா­விய மின்­ன­ணு­வியல் துறை­யில் ஏற்­பட்­டுள்ள பர­வ­லான வீழ்ச்சி, அமெ­ரிக்­கா­வி­லும் ஐரோப்­பா­வி­லும் வங்­கித் துறைக்கு ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி போன்­ற­வற்­றால் சிங்­கப்­பூரின் வளர்ச்சி வாய்ப்­பு­கள் குறைந்­துள்­ளன,” என்று ஆணை­யம் விவ­ரித்­தது.

உல­க­ள­வில் கடந்த ஆண்டு இறு­தி­யில் தொடங்­கிய உற்­பத்தி, வர்த்­தக மெது­வ­டைவு, இவ்­வாண்டு தொடக்­கத்­தில் மேலும் மோச­ம­டைந்­தது. அதன் வர்த்­த­கப் பங்­கா­ளித்­துவ நாடு­களுக்­கான பொரு­ளி­யல் வளர்ச்சி பெரும்­பா­லும் இவ்வாண்டு குறை­வாக இருக்கக்­கூ­டும்.

உல­க­ள­வில் நாண­யக் கொள்கை கடு­மை­யாக்­கப்­பட்டுள்­ள­தன் எதி­ரொ­லி­யாக, வரும் காலாண்­டு­களில் உல­கம் முழு­வ­தும் பொரு­ளி­யல் நட­வடிக்கை மெது­வ­டை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக ஆணை­யம் குறிப்­பிட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!