டோட்டோவில் சாதனை அளவாக ஒரே சீட்டில் $13.1 மில்லியன் பரிசு

சிங்கப்பூரில் மே 9ஆம் தேதி நடத்தப்பட்ட டோட்டோ குரூப் 1 அதிர்ஷ்டக் குலுக்கலில் சாதனை அளவாக, ஒரே பரிசுச்சீட்டில் $13.1 மில்லியன் தொகை பரிசளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஒரே பரிசுச்சீட்டில் வெல்லப்பட்ட ஆக அதிக தொகை இது என்று சிங்கப்பூர் பூல்சின் பேச்சாளர் உறுதிசெய்தார். இதற்கு முன்னர், 2023 அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்ற பரிசுக் குலுக்கலில், ஒரே பரிசுச்சீட்டில் $13 மில்லியன் தொகை அளிக்கப்பட்டது.

மே 9ஆம் தேதி நடந்த குலுக்கலில் 9,15, 20, 26, 43, 49 ஆகியவை வெற்றிபெற்ற எண்களாக அறிவிக்கப்பட்டன. கூடுதல் எண்ணாக 36 அறிவிக்கப்பட்டது.

கடந்த மூன்று பரிசுக் குலுக்கல்களில் குரூப் 1 வெற்றியாளர் யாரும் இல்லை என்பதால் முதல் பரிசுக்கான தொகை மொத்தம் $13,123,509 ஆனது.

குரூப் 1 வெற்றியாளராக அறிவிக்கப்படுவதற்கு, ஒருவரின் பரிசுச்சீட்டில் வெற்றிபெற்ற ஆறு எண்களும் இடம்பெற்றிருக்க வேண்டும். ஒரு குலுக்கலில் அவ்வாறு யாரும் வெற்றிபெறாவிட்டால் அந்தப் பரிசுத்தொகை அடுத்த குலுக்கலின் வெற்றியாளருக்குச் சேர்த்து அளிக்கப்படும்.

மே 9ஆம் தேதியின் குரூப் 1 வெற்றியாளர், தனது பரிசுச்சீட்டை சிங்கப்பூர் பூல்ஸ் செயலியின் மூலம் இணையம் வாயிலாக வாங்கியிருப்பதாக டோட்டோ முடிவுகளை வெளியிடும் இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அதை ஒருவர் வாங்கினாரா, சிலர் பகிர்ந்துகொள்கின்றனரா என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

குரூப் 2 பரிசை 12 பேர் பகிர்ந்துகொள்கின்றனர். இவர்கள் தலா $127,391 பெறுவர். இவர்கள், சிங்கப்பூர் பூல்சின் சைனாடவுன் பாயிண்ட் கிளை, பைனியர் மால் கடைத்தொகுதியில் உள்ள ஜயண்ட் பேரங்காடி, உட்லே மால் கடைத்தொகுதியில் உள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடி ஆகியவற்றில் உள்ள முகப்புகளில் பரிசுச்சீட்டுகளை வாங்கினர்.

குரூப் 1 பிரிவில் இதுவரை கிடைத்த ஆக அதிகப் பரிசுத் தொகை $19.4 மில்லியன் என்றும், 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி நடந்த குலுக்கலில் அந்தப் பரிசுத்தொகையை எட்டுப் பேர் பகிர்ந்துகொண்டதாகவும் சிங்கப்பூர் பூல்ஸ் பேச்சாளர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!