You are here

வாழ்வும் வளமும்

தமிழவேளை சிறப்பித்த மணிமன்றம்

தமிழவேள் கோ.சாரங்கபாணியின் சார்பில் அவரது மகள் ராஜம், மலேசியப் பிரதமர் நஜிப்பிடம் இருந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.

தமிழ் முரசின் மாணவர் இதழான மாணவர் மணிமன்ற இதழ் வழி உருவான இளையர் மணி மன்றத்தின் மணிவிழாக் கொண் டாட்ட நிறைவு 21, 22 தேதிகளில் பெரிய அளவில் போர்ட்டிக்சன், லுக்கூட்டில் நடைபெற்றது. தமிழ் இளைஞர் மணிமன்றம் என்ற பெயரில் மலேசியாவெங்கும் துடிப்புடன் இயங்கும் இந்த இளையர் இயக்கம் தேசிய அளவில் 60 ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. நிகழ்ச்சியில் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அனுப்பிய செய்தியை திரும்பப் பெறும் வசதி

ஒருவருக்கு அனுப்ப வேண்டிய குறுஞ்செய்தியைத் தவறுதலாக இன்னொருவருக்கு அனுப்பிவிட் டால் அதைவிட தர்மசங்கடமான நிலை வேறு இருக்கமுடியாது. ‘வாட்ஸ்அப்’ சமூக ஊடகம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய அம்சத்தின் மூலம் இனி அந்தத் தொல்லையிலிருந்து விடுபடலாம். அனுப்பிய குறுஞ்செய்தியை மீண்டும் திரும்பப் பெறவும் அதில் எழுத்துப்பிழை இருந்தால் மாற்றம் செய்யவும் ஏதுவாக விரைவில் வெளியிடப்படவுள்ள வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் புதிய வசதிகள் இடம்பெற இருக்கின்றன. செய்தியைத் திரும்பப் பெறவும் திருத்தவும் குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்படுமா என்ற விவரங்கள் தெரியவில்லை.

கதைக்களத்தில் எழுத்தாளர் செ.ப.பன்னீர்செல்வம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற் குழுவும் இணைந்து நடத்தும் பிப்ரவரி மாதக் கதைக்களம், பிப்ரவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு, 21 கிளோஸ்டர் சாலையில் அமைந்து உள்ள பெக் கியோ சமூக மன்றத் தில் நடக்கவுள்ளது. இதில் எழுத் தாளர் திரு. செ.ப.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, ‘எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

‘பேலியோ’ உணவு முறை

பேலியோ உணவு முறை என்பதற்கு ஆதி மனிதனின் உணவுப் பழக் கம் என்ற பெயரும் உண்டு. பேலியோ உணவு முறையில் பால், சீனி, பதப்படுத்தப்பட்ட எண்ணெய் வகைகள் உப்பு, அல்கஹால், காப்பி போன்ற உணவு வகை களைத் தவிர்க்கப்படுகின்றன. அவற்றுக்குப் பதிலாகக் காய்கறி கள், பழங்கள், கடலை வகைகள், இறைச்சி வகைகள் போன்றவை சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. கொழுப்பை முதன்மையாகக் கொண்ட உணவு முறைதான் பேலியோ உணவு முறை. பேலியோ உணவின் சிறப்பு உணவில் மாவுச்சத்துடைக் குறைத்துவிட்டு, கொழுப்பையும் புரதத்தையும் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.

‘நாயன்மார்கள் கண்ட தமிழ்’

சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றத்தின் 64வது இலக்கியச் சோலை நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு எண் 101 பாலஸ்டியர் சாலை, சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப் அரங்கில் நடைபெறுகிறது. இதில் ‘நாயன்மார்கள் கண்ட தமிழ்’ எனும் தலைப்பில் ரெத்தின சபாபதியும் ‘ஆழ்வார்கள் போற்றிய தமிழ்’ தலைப்பில் ஆமருவி தேவ நாதனும் சிறப்புரை ஆற்று கின்றனர். நிகழ்ச்சியில் சிறுவர்கள் படித்ததைப் பகிரும் அங்கம் மற்றும் கேட்டதைப் பகிரும் அங்கம் இரண்டிலும் கலந்து கொண்டு பேசுவார்கள்.

‘நாடக வளர்ச்சி பற்றி பேச்சு’

தேசிய நூலக வாரியத்தின் “ஒரு நூலகரின் உலகம்” எனும் கண்காட்சியில் சிங்கப்பூரில் நாடக வளர்ச்சியை எடுத்துக்கூறும் நூல்கள் பற்றிய சிறப்புப் பேச்சு இடம்பெறும். தமிழ் நாடகங்கள் மட்டுமல்லாது ஆங்கிலம், சீன மொழி நாடகங்களின் வளர்ச்சி பற்றிய உரையும் இடம்பெறும். இன்று இரவு 7 மணிக்கு தேசிய நூலகக் கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் www.nlb.gov.sg எனும் இணையத்தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.

தந்தையின் வழிகாட்டுதலில் வாழ்க்கையில் முன்னேற விரும்பும் மகன்

படம்: சிங்கப்பூர் போலிஸ் படை

தம்முடைய தந்தை 37 ஆண்டுக ளாக போலிஸ் படையில் பணி யாற்றி வருவதால் தேசிய சேவை யின்போது தமக்கும் போலிஸ் படையில் பணியாற்ற வாய்ப்புக் கிட்டும் என 23 வயது திவாகர் ராஜசேகரன் சற்றும் எதிர்பார்க்க வில்லை. கடந்த மூன்று மாதங்க ளாக போலிஸ் படையில் அடிப் படை பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார் திவாகர். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்க காவல் அதிகாரியாகப் பணி யாற்ற அடுத்த மூன்று மாதங்க ளுக்கு அவருக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

பொங்கல் கொண்டாட்டம்

19, சிலோன் ரோட்டில் அமைந்துள்ள செண்பக விநாயகர் ஆலயத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை பொங்கல் கொண்டாட்டமும் அதைத் தொடர்ந்து இரவு விருந்து மண்டலாபிஷேகம் பொத்தோங் பாசிர் அவென்யூ 2, ஸ்ரீ சிவ துர்க்கா ஆலயத்தின் மகா கும்பாபிஷேக மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு அனுக்ஞை, ஸ்ரீ விநாயகர் பூஜை, கலச பூஜை, சங்கு பூஜை, 10 மணிக்கு மகா பூர்ணாஹுதி, 10.30 மணிக்கு ஸ்ரீ சிவபெருமானுக்குச் சங்கு அபிஷேகம், 11 மணிக்குப் பக்தர்கள் ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு மஞ்சள் குடம் எடுத்தல், தொடர்ந்து அபிஷேகம், 12.30 மணிக்கு அன்னதானம் நடைபெறும்.

பாரம்பரியத் தொழில்களின் சுவடுகள்

சிங்கப்பூரில் தமிழர்களின் பாரம்பரியத் தொழில்கள் நீடித்து வளர என்ன செய்யலாம், சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்து லிஷாவின் தலைவர் திரு ராஜ்குமாரும் அபிராமி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் திரு அருணாசலமும் நாளை மறுநாள் நடைபெறும் கலந்துரையாடலில் பகிர்ந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கேள்வி=பதில் அங்கமும் உண்டு. இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி தேசிய நூலகக் கட்டடத்தின் 5வது மாடியில் உள்ள Imagination அறையில் காலை 10.30 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. இன்று பதிவுக்கு இறுதி நாள்.

Pages