You are here

திரைச்செய்தி

புதிய லட்சியம்: விவரிக்கும் பவர்ஸ்டார்

‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன்.

ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க வேண்டும் என்பதையே இதுநாள் வரை தனது லட்சியமாகச் சொல்லி வந்தார் பவர் ஸ்டார் சீனிவாசன். இப்போது அது தலைகீழாக மாறிவிட்டது. அனுஷ்கா, திரிஷாவுக்கு நாயகனாக வேண்டும் என்பதே அவரது புதிய லட்சியமாம். மிர்ச்சி சிவா நடிப்பில், சினிமா பின்னணியில் உருவாகி இருக் கும் ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ கதா பாத்திரத்தில் பவர் ஸ்டார் பட்டையைக் கிளப்பி இருப்பதாக படக்குழுவினர் சொல்கிறார்கள்.

நட்சத்திரங்கள் தரை இறங்கினர்

நட்சத்திரங்கள் தரை இறங்கினர்

சிங்கப்பூரில் முதல்முறையாக நடைபெறவுள்ள ‘சைமா’ தென் னிந்திய திரைப்பட விருது விழா வுக்காக அனிருத், சமந்தா, வேதிகா, தேவி ஸ்ரீபிரசாத், சரத் குமார், ஜஸ்வர்யா ராஜேஷ் உட்பட பல நட்சத்திரங்கள் இன்று சிங்கப்பூர் வந்திறங்கினர். சன்டெக் சிட்டியில் நாளை வியாழக்கிழமை 30ஆம் தேதி தெலுங்கு, கன்னடமொழி திரைப் படங்களுக்கான விருது நிகழ்ச்சி யும் வெள்ளிக்கிழமை ஜூலை 1ஆம் தேதி அன்று தமிழ், மலை யாளப் படங்களுக்கான திரைப்பட விருது நிகழ்ச்சியும் நடைபெறு கின்றன.

மவுனம் காக்கும் விஷால், வரலட்சுமி

‘மதகஜராஜா’ படத்தின் ஒரு காட்சியில் விஷால், வரலட்சுமி.

நடிகர் விஷாலும், வரலட்சுமியும் காதலிப்பது ஊரறிந்த ரகசியம் தான். எனினும் இருவரும் அதைப் பற்றி தேவையின்றி பகிரங்கமாகப் பேசுவதில்லை. இந்நிலையில் விஷாலும் வரலட் சுமியும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது. இருவரும் காதலர்கள் என்று திரையுலக வட்டாரங்களில் பரவ லாகப் பேசுகிறார்கள். அதை உறுதிப்படுத்தும் விதமாக இருவ ரும் அடிக்கடி ஒன்றாக நிகழ்ச்சி களுக்கு வருவதும் நடந்தது.

‘மதகஜராஜா’ படத்தின் ஒரு காட்சியில் விஷால், வரலட்சுமி.

‘இருமுகன்’ படத்தில் தனக்குத் தானே வில்லன் ஆன விக்ரம்

‘இருமுகன்’ படத்தில் தனக்குத் தானே வில்லன் ஆன விக்ரம்

‘அந்நியன்,’ ‘ஐ’ ஆகிய பிரம்மாண்டமான படங்களை அடுத்து விக்ரம் நடிக்க, மிக அதிக பொருட்செலவில் உருவாகும் படம், ‘இருமுகன்.’ இதில், முதல்முறையாக அவர் இரு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் படம் இது. ‘புலி’ படத்தை தயாரித்த சிபுதமீன் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து முடிந்துள்ளது.

‘வீரசிவாஜி’ படத்தின் முன்னோட்ட காட்சிகளை வெளியிட்டார் ஏ.ஆர். முருகதாஸ்

‘வீரசிவாஜி’ படத்தின் முன்னோட்ட காட்சிகளை வெளியிட்டார் ஏ.ஆர். முருகதாஸ்

விக்ரம் பிரபு நடிப்பில், கணேஷ் விநாயக் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘வீரசிவாஜி’. நாயகியாக ஷாமிலி நடிக்கிறார். மேலும், ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் இப்படத்தில் உள்ளனர். இமான் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சுரேஷ் காமாட்சி: ரசிகர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது

‘பகிரி’ படத்தின் ஒரு காட்சியில் பிரபு ரணவீரன், ஷர்வியா.

“எதற்காகப் பேருந்து பேருந்தாக ஏறி திருட்டு விசிடிக்கள் விற்பவர்களைப் பிடிக்கவேண்டும். பேசாமல் திருட்டு விசிடியை சட்டபூர்வமாக்கி விடுங் கள். வருமானமாவது கிடைக்கும்,” என்று அதிரடி ஆலோசனை வழங்கி யுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள ‘பகிரி’ என்கிற புதிய படத்தின் பாடல் கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் வசந்தபாலன் வெளியிட்டார். ஒளிப்பதி வாளர் செழியன் பெற்றுக்கொண்டார்.

சைமாவுக்கு அரங்கம் நிறைந்த எதிர்பார்ப்பு

சைமாவின் தலைவர் திருமதி பிருந்தா பிரசாத்.

ப. பாலசுப்பிரமணியம்

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு நடிகர்கள் என தென் இந்திய நட்சத்திரப் பட்டாளத் தையே சிங்கப்பூருக்கு கொண்டு வருவது பெரிய காரியம். ஆனால், இந்தக் காரியத்தை நன்கு திட்ட மிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது 60 நபர்கள் அடங்கிய சைமா ஏற்பாட்டுக் குழு. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மிகப் பிரம்மாண்டமான முறையில் இரண்டு நாட்களாக சைமா நிகழ்ச்சியை துபாய் வேர்ல்ட் டிரேட் செண்டரில் நடத்திய அனுபவம் இக்குழுவினருக்கு உண்டு.

பிரபலங்களைக் காண அடித்தது யோகம்

தலா இரண்டு நுழைவுச்சீட்டுகளை வென்ற அதிர்ஷ்டசாலிகள். படங்கள்: திமத்தி டேவிட்

சுதாஸகி ராமன்

‘சைமா’ எனும் தென் இந்திய அனைத்துலகத் திரைப்பட விருது விழாவிற்குச் சென்று தமக்குப் பிடித்த நடிகர், நடிகை களைக் காணும் முயற்சியில் மக்கள் நேற்று முன்தினமே தமிழ் முரசு அலுவலகத்திற்கு முன்னால் வரிசை பிடிக்கத் தொடங்கிவிட்டனர். லிட்டில் இந்தியாவின் 31, பேராக் சாலையில் அமைந்திருக் கும் தமிழ் முரசு விளம்பரப் பிரிவின் அலுவலகத்திற்கு வந் திருந்த முதல் 50 அதிர்ஷ்ட சாலிகளுக்கு நுழைவுச்சீட்டுகள் பரிசாகக் கொடுக்கப்பட்டன.

சிவகார்த்திகேயன்: முன்னணி நாயகிகளுக்கு நன்றி

கீர்த்தி சுரே‌‌ஷ்

அண்மை­யில் ‘ரெமோ’ படத்­தின் பத்­தி­ரிகை­யா­ளர் சந்­திப்பு நடந்து முடிந்தது. அந்த நிகழ்ச்­சி­யில் பிரம்­மாண்ட இயக்­கு­நர் சங்கர், சிவ­கார்த்­தி­கே­ய­னின் பெண் வேடம் கொண்ட முதல் சுவ­ரொட்­டியை வெளி­யிட்­டார். அன்றைய நிகழ்ச்­சி­யில் சிவ­கார்த்­தி­ கே­யன் பேசும்­போது, “என்­னு­டன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை­களுக்கு நான் இந்த சம­யத்­தில் நன்றி கூறிக்­கொள்­கி­றேன். காரணம் அவர்­கள் நடிக்க ஒத்­துக்­கொண்­டி­ருந்தால் கீர்த்தி சுரே‌ஷுடன் இந்தப் படத்­தில் நடிக்­கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்­தி­ருக்­காது. அவர் இந்தப் படத்தில் கதைக்கு பொருத்­த­மாக நடித்து அசத்தியிருக்கிறார்,” என்றார்.

யோகா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு ஒன்றரை கோடி ரூபாய்

பிபாசா பாசு

பிபாசா பாசு தமிழில் விஜய்யுடன் ‘சச்சின்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அவர் அண்மையில் நடந்து முடிந்த யோகா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு ரூபாய் ஒன்றரை கோடி வாங்கியது பற்றி சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் குவிகின்றன. பிபாசா பாசு நன்றாக யோகா செய்யக்கூடியவர். தினமும் யோகா மற்றும் தியானம் செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறார். சக நடிகைகளுக்கும் யோகா கற்றுக்கொடுக்கிறார்.

Pages