You are here

தலையங்கம்

அதிபர் தேர்தல் அரசியல் போர்: பாஜக தலித் தந்திரம்

ஜனநாயகத்துக்கு, சாதி அரசியலுக்குப் பெயர்போன இந்தியாவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் வந்துவிட்டது. அந்தத் தேர்தல் தெருவுக்குத் தெரு, வீதிக்கு வீதி விழாபோல நடந்து பொதுமக்கள் வாக்களிக்கும் பொதுத் தேர்தல் அல்ல. பதிலாக, நாட்டின் நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் 776 பேரும் பல மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் 4,120 பேரும் ஆக மொத்தம் 4,896 பேர் வாக்களித்து அரசமைப்புச் சட்டப்படி ஆக உயரிய பதவிக்கு ஒருவரைத் தேர்ந்தெடுக்க நடக்கும் தேர்தல் அது. மொத்த வாக்குகள் 10,98,903 ஆகும். மாநிலத்தின் மக்கள் தொகையைப் பொறுத்து சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு இருக்கும்.

பிரிட்டிஷ்- அரசியலை நிலைகுலைய வைத்த பிரதமர்

பிரிட்டிஷ் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமர் தெரேசா மே அரசியலில் தடுமாறி விழுந்துவிட்டார். தப்புக்கணக்கு போட்டுவிட்டார். தான் விழுந்ததோடு அல்லாமல் நன்றாக இருந்த நாடாளுமன்றத்தை தொங்கு நாடாளுமன்றமாக ஆக்கி அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டார்.

இதுவரை இல்லா அளவுக்கு பயங்கரவாத மிரட்டல் சூழல்

உலகில் எத்தனையோ பொருளியல் மிரட்டல்களை எல்லாம் சமாளித்துவிட்ட சிங்கப்பூரை, இதுநாள்வரை இல்லாத அளவுக்கு பயங்கரவாத மிரட்டல்கள் அண்மைய ஆண்டு களில் ஆகஅதிகமாகச் சூழ்ந்துவிட்டன.

மத்திய கிழக்கில் ஆட்டம்போடும் ஐஎஸ் அமைப்புதான் சிங்கப்பூருக்கு அதிபயங்கரவாத மிரட்டலாக இருந்து வருகிறது. பயங்கரவாதிகளின் முக்கிய குறியாக சிங்கப்பூர் இருக்கிறது. தீவிரவாத மனப்போக்குடன், தனி ஆட் களாகச் செயல்படும் உள்ளூர் பயங்கரவாதிகளால் ஆபத்து ஏற்படக்கூடிய நிலைமையும் உள்ளது. தீவிரவாத மனப்போக்குடன் இங்கு வாழ்ந்துவரும் வெளிநாட்டவரும் இருக்கிறார்கள்.

பால்மாவு-தாய்ப்பால் மனப்போக்கு முக்கியம்

உலகில் எத்தனையோ உயிரினங்கள் வாழ்ந்து வந்தாலும் பாலூட்டிகளுக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. இந்த இனத்தைச் சேர்ந்த உயிரினங்களுக்கு=அவை விலங்கு களாக இருந்தாலும் மனிதப் பிறவியாக இருந்தாலும் தாய்ப்பால் என்பது இயற்கையிலேயே மிகவும் இன்றியமை யாத ஒரு வரப்பிரசாதமாக இருந்துவருகிறது.

பிள்ளைகள் பிற்காலத்தில் நோய்நொடியின்றி - நீரிழிவு, உடல் பருமன் இன்றி, உடலில் தேவையற்ற சதை எதுவு மின்றி, முழுமையாக வளர்ச்சி அடைந்து நீடித்த ஆயுளுடன் வாழ அடிப்படையை அமைத்துத் தருவது தாய்ப்பால்தான்.

சிங்கப்பூரின் வளர்ச்சி, செழிப்பு தொடர வழி

உலகில் இப்போது பல நாடுகளும் வர்த்தகத்தைச் சார்ந்து இருக்க, வர்த்தகத்துக்குத் தன் கதவை அகலமாகத் திறந்துவிட தயாராகி வருகின்றன.

அதேவேளையில் அமெரிக்காவின் நிலை எப்படி இருக் கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. உலக வர்த்தகத் தில் தன்னைப்பேணித்தனத்துடன் கடும் போக்கை அமெ ரிக்கா கடைப்பிடித்தால் உலக வர்த்தகத்துக்குக் கடும் போட்டாபோட்டி ஏற்படும். அதனால் உலக நிலவரம் விரை வில் மோசமடையக்கூடிய நிலை வரலாம்.

ஒத்மான் வோக் நல்லிணக்கச் சிற்பி

உலகின் தென்கிழக்கு ஆசியப் பகுதியில், 50 ஆண்டுகளுக்கு முன் மலேசியா-சிங்கப்பூரை உள்ளடக்கி, பல இன மக்களுடன் இருந்த மலேசியத் தீபகற்பத்தில் மலாய்க் காரர்கள் பெரும்பான்மையினராக இருந்த ஒரு நேரத்தில், அவர்களுக்குத் தனி உரிமைகளை அளிக்கக்கூடிய ஓர் அரசமைப்புச் சட்ட ஆட்சிதான் வேண்டும் என்று முன் னணி மலாய்க் கட்சியான அம்னோ வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் இறங்கியது.

ஆர்கே நகர் போதிக்கும் பாடம்

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வசிக்கும் கோடானுகோடி மக்களுக்கு ஜனநாயகம் என்பது மனதுக்குப் பிடித்த, ரத்தத்தில் ஊறிய ஒன்று. தங்கள் உரிமைகளை, சுதந்திரத்தைக் கட்டிக்காக்க என்ன விலையை வேண்டுமானாலும் கொடுக்க அந்த மக்கள் தயங்குவதில்லை.

இந்திய நாடாளுமன்றத்தின் கீழவை, மேலவை என்ற இரண்டு அமைப்புகளுக்கும் அதிபர், துணை அதிபர் என்ற பதவிகளுக்கும் மாநிலங்களில் சட்டமன்றங்கள் என்ற அமைப்புக்கும் முறையாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை பொதுத் தேர்தலை நடத்தி, அந்த அமைப்பு களில் மக்களின் பேராளர்களை அமரச் செய்து அதன்வழி மக்களாட்சித் தத்துவத்தை அமலாக்கி வருகிறது இந்தியா.

கருத்துக் கணிப்புகளுக்குத் தடை

கருத்துக் கணிப்புகளுக்குத் தடை

சென்னை: ஆர்.கே.நகர் சட்ட மன்றத் தொகுதி குறித்து கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் நேற்று தடை விதித்தது. இது குறித்து ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் பல்வேறு விதிமுறை கள் அமலில் இருக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது. மேலும் இம்மாதம் 10ஆம் தேதி மாலை 5.00 மணி முதல் 12ஆம் தேதி மாலை 5.00 மணி வரை கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடுவதற்கும் கருத்துக் கணிப்புகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுவதாக ஆணை யம் தெரிவித்தது. ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு 12ஆம் தேதி அன்று காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

சிங்கப்பூரில் சமயங்களின் பொறுப்பும் கடமையும்

சமய நல்லிணக்கத்திற்கு உலகின் பல நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது சிங்கப்பூர். பல சமயங்கள், இனங்களைச் சேர்ந்த மக்கள் சிங்கப்பூரில் வாழ்கிறார்கள். பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என எந்த சமயத்தவராக இருந்தாலும் இந்த நாட்டுக்கே உரிய தனித் தன்மையான நல்லிணக்க அணுகுமுறையை அவர்கள் கைக்கொண்டு வருகிறார்கள்.

சிங்கப்பூரிலுள்ள சமய அமைப்புகளும் சமயத் தலைவர் களும் தங்களது சமய நன்னெறிகளை மக்களுக்குப் போதிக்கும் அதே அளவுக்கு மற்ற சமயங்களைப் பற்றிப் புரிந்துகொண்டு, பல சமயங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமூகத்தில் ஒற்றுமையை நிலைநாட்டுவதிலும் கவனம் செலுத்துகின்றனர்.

மைல்கல்லில் தமிழ்தான் பாஜகவுக்கு வழிகாட்டும்

இன்றைய உலகில் ஏறக்குறைய 6,500 மொழிகள் பேசப் படுகின்றன. அவற்றில் சுமார் 2,000 மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கை 1,000க்கும் குறைவு. உலகில் பல மொழிகள் புழங்கும் நாடுகள் பல இருக்கின் றன. இருந்தாலும் மொழியைப் பொறுத்தவரையில் இந்தியாவைப்போல வேறு ஏதாவது ஒரு நாடு இந்த உலகில் இருக்கிறதா என்பது சந்தேகம்தான்.

பல கலாசார, சமய, மொழிகளின் நாற்றங்கால்களைக் கொண்ட இந்தியா என்ற துணைக் கண்டத்தில், 1961 ஆம் ஆண்டு நிலவரப்படி 1,652 அங்கீகரிக்கப்பட்ட தாய்மொழிகள் புழக்கத்தில் இருந்தன. என்றாலும் அவற்றில் சுமார் 1,100 மொழிகள்தான் நன்கு பரிண மித்த மொழிகளாக வகைப்படுத்தப்பட்டன.

Pages