You are here

இந்தியா

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் யோகா

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் யோகா

தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் யோகா நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உணர்வுகளை சமநிலைப் படுத்துவதற்கான முக்கிய கூறாக யோகா திகழ்வதை அரசு கருத்தில் கொண்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: தமிழக ஊடகம்

வயிற்றில் வளரும் பிள்ளை சோதனை: வல்லுநர் கைது

சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் உதவி அறுவை சிகிச்சை வல்லுநராகப் பணியாற்றும் ஏ தண்டபாணி (படம்), 3,000 ரூபாய் கட்டணத்தில் கர்ப்பிணிகள் பலருக்கும் சோதனை நடத்தினார். வயிற்றில் வளரும் பிள்ளை ஆணா பெண்ணா என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னார். மாநில அதிகாரிகள் போலியாக இரண்டு கர்ப்பிணிகளை அனுப்பி இவரைக் கைது செய்தனர். வயிற்றில் வளரும் கரு பெண் என்றால் அதை அழித்துவிட இவர் உதவி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: இந்திய ஊடகம்

சிறையில் நளினி உண்ணாவிரதம்

வேலூர்: ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி வேலூர் பெண்கள் சிறையில் அடைபட்டுள்ள நளினி, தன்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி உண்ணாவிரதம் இருந்துவருகிறார். அந்தச் சிறையிலிருந்து தன்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி நளினி மனு தாக்கல் செய்துள்ளார். புழலுக்கு மாற்றினால், மகளின் திருமண ஏற்பாட்டைக் கவனிக்க வசதியாக இருக்கும் என அவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனு எப்போது விசாரிக்கப்படும் என்பது தெரியவில்லை.

தலைமைச் செயலகத்தில் பாம்பு

சென்னை: தமிழக தலைமைச் செயலகத்துக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தலைமைச் செயலகச் செய்தியாளர் அறைக்கு அருகில் உள்ள நூலக அலுவலகத்திற்குள் பாம்பு சென்றதைப் பார்த்த போலிசார், தீயணைப்பு வீரர்களுக்கு அது பற்றி தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். பதுங்கியிருந்த எட்டு அடி நீளமுள்ள சாரைப்பாம்பு பிடிபட்டது. பாம்பு பிடிக்கப்படும் போது பாம்பின் வால் துண்டாகிவிட்டது. பிடிபட்ட பாம்பு கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா மற்றும் பாம்புப் பண்னையில் விடப்பட்டது.

அதலபாதாளத்துக்குச் சென்ற நீர்மட்டம்

சென்னை: திண்டுக்கல் மாநகராட்- சி யைச் சேர்ந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்- துக்குச் சென்றுவிட்டதால் குடிநீர் அல்லாத பிற உபயோகத்துக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்- ளாகியுள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமான ஆத்தூர் நீர்த் தேக்கம் வறண்டு காணப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நீர்த்தேக்கத்தில் உள்ள கிணறுகளில் இருந்து நீர் இரைக்கப்பட்டு விநியோகிக்கப்படு- கிறது. நீர்த்தேக்கப் பகுதியில் பத்து ஆழ்துளைக் கிணறுகள் அமைக்- கும் பணியும் நடை பெற்றுவருகிறது.

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறுவிற்பனை செய்யலாம்

சென்னை: அக்டோபர் 20ஆம் தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம் என்றும் இதுபோன்ற நிலங்களைச் சார்பதிவாளர்கள் பத்திரப்பதிவு செய்யவேண்டும் என் றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் விவசாய நிலங்- களை அழித்து சட்டவிரோதமாக, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக மாற்றப்படுவதாகவும், இதனால் விவசாயமும் விவசாய நிலங்களும் அழிந்து வருவதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்குத் தொடர்ந்தார்.

விசா இன்றி 24 ஆண்டுகள்: சவூதியில் தங்கியிருந்த தமிழர் நாடு திரும்புகிறார்

ஞானபிரகாசம் ராஜமரியான்

சென்னை: முறையான ஆவணங்கள், விசா இல்லாமல் வெளிநாடுகளில் சில நாட்கள் தங்குவதே பெரும் குற்றமாகிவிட்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் சவூதி அரேபியாவில் தொடர்ந்து 24 ஆண்டுகள் சட்டவிரோதமாக தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ஞானபிரகாசம் ராஜமரியான் என்ற அந்நபருக்கு தற்போது 52 வயதாகிறது. கடந்த 1994ஆம் ஆண்டு அவருக்கு சவூதியில் உள்ள பண்ணையில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் உரிய ஊதியம் கிடைக்காததால், பண்ணையில் இருந்து தப்பிச் சென்று பாலைவனப் பகுதியில் தலைமறைவானார் ஞானபிரகாசம்.

தமிழகம் முழுவதும் தினகரன் சுற்றுப்பயணம்

அதிமுகவின் துணைச் செயலாளர் தினகரன்

சென்னை: லஞ்ச வழக்கில் பிணை பெற்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ள டிடிவி தினகரன் தற்போது முழுவீச்சில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதிமுகவை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர் முயற்சி செய்வது முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ் அணியினரை நெருக்கடிக்கு ஆட்படுத்தி உள்ளது. சிறைவாசம் முடிந்த பின்னர் அவர் பங்கேற்க உள்ள முதல் பொதுக்கூட்டமானது ஓ.பன்னீர் செல்வத்தின் கோட்டை எனக் கருதப்படும் தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தினகரனின் ஆதரவாளர்கள் விரிவாகச் செய்து வருகின்றனர்.

அய்யாக்கண்ணு: திரையுலக ஆதரவும் வேண்டும்

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு.

சென்னை: நியாயமான கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தும் தங்களை போராடும் இடத்தில் இருந்து அப்புறப்படுத்தவே அரசுத் தரப்பு நினைப்பதாக விவசாயி அய்யாக்கண்ணு கூறியுள்ளார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவரான அவர், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், விவசாயிகளுக்கு திரையுலகத்தின ரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார். “தமிழக முதல்வர் விவசாயிக ளின் கோரிக்கைகளை நிறை வேற்றித் தருவதாகக் கூறுகிறார். ஆனால் செய்வதில்லை. எங்க ளுக்கு தெரிந்தது போராட்டம் ஒன்றுதான்,” என்றார் அய்யாக் கண்ணு.

சாதி, மதங்களைக் கடந்த ஒருவரைக் அதிபராக தேர்வு செய்ய வேண்டும்: திருமாவளவன்

சென்னை: சாதி, மதங்களைக் கடந்த ஒருவரைக் அதிபராக தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் திருமாவளவன். திருமாவளவன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைப்பது சரியான அணுகுமுறை அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். எனினும் நடப்பு அதிமுக ஆட்சி நீடிக்கக்கூடாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுவது ஜனநாய கத்தை நசுக்கும் செயலாகும்.

Pages