You are here

இந்தியா

69 மணி நேரம் யோகா: கின்னஸ் சாதனை

சென்னை: திருப்பூர் மாவட்டம், ராகல்பாவி பகுதியைச் சேர்ந்த 45 வயது யோகா ஆசிரியரான குணசேகரன் 69 மணிநேர தொடர் யோகாசனம் செய்து புதிய கின்னஸ் சாதனையை உருவாக்கியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு யோகாசனம் கற்பித்துப் பல விருதுகளை பெற்றுள்ள இவர், அனைத்துலக யோகா தினத்தையொட்டி கின்னஸ் உலக சாதனை முயற்சியாக பொள்ளாச்சி, கே.கே.ஜி. மண்டபத்தில் 18ஆம் தேதி மாலை 5 மணியளவில் யோகா செய்யத் தொடங்கினார்.

சிறுவனுக்கு தவறான சிகிச்சையளித்த மருத்துவமனை மீது நடவடிக்கை

லக்சய் என்ற 5 வயது குழந்தை (படம்)

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள மல்லையா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட லக்சய் என்ற 5 வயது குழந்தை (படம்) கோமா நிலைக்குச் சென்றுவிட்டான். அவன் இப்போது மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். “இந்த விஷயம் குறித்து உரிய விளக்கம் அளிக்கக் கூறி மல்லையா மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சிகிச்சையின் போது தவறு நடந்திருந்தால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உரிய நஷ்டஈடு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். அத்துடன் சம்பந்தப் பட்ட டாக்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று சுகாதாரத் துறை அமைச்சர் யுடி காதர் கூறியுள்ளார்.

குத்து ரம்யாவுக்கு அமைச்சர் பதவி தர ராகுல் உத்தரவு

குத்து ரம்யா

பெங்களூரு: ஒக்கலிகா சமூகத் தைச் சேர்ந்த நடிகையும் முன்னாள் எம்பியுமான குத்து ரம்யாவை அமைச்சராக்க கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பரிந்துரைத்துள்ளது அக்கட்சியில் பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளது. கர்நாடகா காங்கிரசில் அம்பரீ ‌ஷுக்கும் குத்து ரம்யாவுக்கும் ஏற்கெனவே ஏழாம் பொருத்தம். 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தாம் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனதற்கு அம்பரீ‌ஷின் உள்ளடி வேலைதான் காரணம் என குறை கூறினார் ரம்யா.

உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட விஜயகாந்த் ஒப்புதல்

 தேமுதிக  தலைவர் விஜயகாந்த் ஒப்புதல்

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியையடுத்து, எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட தேமுதிக முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேமுதிக நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கடந்த பத்து நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தி வந்தார். அப் போது தேர்தல் கூட்டணி தொடர்பில் விஜயகாந்த் தவறான முடி வெடுத்துவிட்டதாக பல நிர்வாகி கள் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தனர் என்று செய்தி வெளியானது.

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, அதிமுக மோதல் ஒரு மோசடி - திருமா

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

சென்னை: கச்சத்தீவு விவகாரத் தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே துணிச்சல் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இரு கட்சிகளின் செயல்பாடு கள் இதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் சென்னையில் செய்தியாளிர்களிடம் பேசியபோது அவர் கூறினார். கச்சத்தீவு விஷயத்தில், திமுக வும் அதிமுகவும் இணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வில்லை என்று குறிப்பிட்ட அவர், மாறாக இரு கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் குறை சொல்வது மோசடியான செயல் என்று சாடினார்.

53 மணி நேரம் யோகா: சாதனை முயற்சி

சென்னை: உலக சாதனைக்காக தொடர்ந்து 53 மணி நேரம் யோகாசன பயிற்சி மேற்கொண்ட பெண் வழக்கறிஞருக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித் துள்ளனர். ரஞ்சனா என்ற அப்பெண் சென்னைப் பல்கலைக்கழக யோகா பயிற்சித்துறையின் ஆதர வுடன் இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டார். திங்கட்கிழமை காலை ஒன்பது மணியளவில் சென்னைப் பல்கலைக்கழக அரங்கில் தனது தொடர் யோகா பயிற்சியைத் தொடங்கிய அவரை ஊக்கப் படுத்தும் விதமாக கூடியிருந்தோர் உற்சாகக் குரலெழுப்பி ஆதரவு தெரிவித்தனர். முன்னதாக செய்தியாளர்களி டம் பேசிய அவர், அனைத்துலக யோகா தினத்தையொட்டி யோகா சனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இம்முயற்சி என்றார்.

தவறான விவரங்களுடன் தமிழக அரசு இணையத்தளம்

சென்னை: முதல்வர் ஜெய லலிதா தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு மாதமாகிவிட்டபோதிலும், தமிழக அரசின் அதிகாரப் பூர்வ இணையத்தளத்தில் பல்வேறு முக்கியத் தகவல்கள் இன்னும் இடம்பெறவில்லை. குறிப்பாக அமைச்சரவை யில் இடம்பெற்றுள்ள புதிய அமைச்சர்களின் புகைப் படங்கள், எம்எல்ஏக்கள் குறித்த விவரங்கள் முழு மையாக இல்லை. அரசின் இணையத்தளத் தில் மாநில ஆளுநர், முதல் வர், அமைச்சர்கள், நாடாளு மன்ற - சட்டப்பேரவை உறுப்பினர்களின் பெயர்கள், விவரங்கள் இடம்பெற்றுள் ளன. மேலும் அரசுத் துறை கள் வழங்கும் சேவைகள், அவற்றுக்கான படிவங்கள், அரசின் முக்கிய அறிவிப்பு கள், அரசாணைகள் எனப் பல்வேறு விஷயங்கள் காணப்படும்.

சவூதி, ஓமனில் தவிக்கும் 14 பெண்கள்

மதுரை: பணிப்பெண் வேலைக்காக ஓமன் நாட்டிற்குச் சென்ற 13 பெண்கள் அங்கு பல்வேறு சித்ர வதைகளுக்கு ஆளாகியுள்ளதாக அவர்களது குடும்பத்தார் தெரி விக்கின்றனர். 13 பேரையும் மீட்கக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த 30 வய தான மேகலாவின் கணவர் இதய நோயால் அவதிப்படுகிறார். அவ ரது சிகிச்சைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் தேவைப்பட்டதை அடுத்து, வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக இடைத்தரகர் மூலம் ஓமன் சென்றார். கடந்த ஏப்ரல் மாதம் மேகலா உள்ளிட்ட 13 பெண்களை பணிப் பெண் வேலைக்காக கும்ப கோணத்தைச் சேர்ந்த அப்துல்லா என்ற முகவர் ஓமன் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கையின் சூழ்ச்சிக்கு இந்தியா பலியாகிவிட்டது: நெடுமாறன் புகார்

பழ.நெடுமாறன்

சென்னை: கடந்த 1975ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது, அதைத் தடுக்க யாழ்ப்பாண மேயராக இருந்த ஆல்பர்ட் துரையப்பா தீவிர முயற்சி மேற்கொண்டதாக பழ.நெடுமாறன் குற்றம்சாட்டி உள்ளார். அம்மாநாட்டில் பங்கேற்றவர்கள் மீது காவல்படை தாக்குதல் நடத்தவும், அதில் 9 தமிழர்கள் படுகொலையானதற்கும் துரையப்பாவே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். “தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு ஆல்பர்ட் துரையப்பா பெயரை இலங்கை அரசு சூட்டி, இந்தியப் பிரதமர் மோடியைக் கொண்டு அந்தப் பெயர் பலகையைக் காணொளிக் காட்சியின் மூலம் திறக்க வைத்துள்ளது.

தமிழகத்தில் தமிழுக்கு முதலிடம்: குமரி அனந்தன் வலியுறுத்து

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன்

செங்கல்பட்டு: தமிழகத்தில் தாய்மொழி தமிழுக்கு எங்கும் முதலிடம் தரப்பட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வலியுறுத்தி உள்ளார். செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகப் படிவங்கள் அனைத்திலும் தமிழுக்கு முதலிடம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். ரயில் நிலையங்களில் தமிழில் முறையாக அறிவிப்புகள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Pages