You are here

சிங்க‌ப்பூர்

சமூக நிறுவனம் நடத்தும் புதிய அங்காடி நிலையம்

படம்: ஹாக்கர் மேனஜ்மெண்ட்

ஜூரோங்கில் வசிக்கும் மக்களுக்கு இப்போது மேலும் பல வகை உணவு கிடைக்கவிருக்கிறது. ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 61ல் அமைந்திருக்கும் புதிய சந்தை அங்காடி நிலையம் நேற்று திறக் கப்பட்டது. அதில் சமைத்த உணவை விற்கும் 34 கடைகளும் 14 சந்தைக் கடைகளும் உள்ளன. மொத்தம் 500 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய அளவுக்கு இருக் கும் அந்த நிலையத்தை ‘ஹாக்கர் மேனஜ்மெண்ட்’ என்ற சமூக நிறு வனம் லாபநோக்கற்ற அடிப்படை யில் நடத்துகிறது.

வசதி குறைந்தோருக்கு தீபாவளி உதவி

படம்: தஞ்சோங் பகார் இந்திய நற்பணிக் குழு

தஞ்சோங் பகார்=தியோங் பாரு பகுதியில் வாடகை வீடுகளில் குடியிருக்கும் வசதி குறைந்த சுமார் 120 இந்தியக் குடும்பங் களுக்குச் சனிக்கிழமை தீபாவளி ‘அங்பாவ்வும்’ உணவுப் பொருட் களும் வழங்கப்பட்டன. சட்ட, நிதி மூத்த துணை அமைச்சரும் தஞ்சோங் பகார் குழுத்தொகுதியின் அடித்தள அமைப்புகள் ஆலோசகருமான குமாரி இந்திராணி ராஜா கலந்து கொண்டு உணவுப் பொருட்களை வழங்கினார்.

விவேக சிகிச்சை: பையனைக் காத்த மருத்துவர்

ஒரு நான்கு வயது பையனுக்கு ஒவ்வாமை காரணமாக கடுமை யான பாதிப்பு ஏற்பட்டது. மருத்து வர் ஒருவர் விரைவாகச் செயல் பட்டு அந்தப் பையனைக் காப் பாற்றினார். டாக்டர் லாய் யிரோங் என்ற அந்த மருத்துவர் வெள்ளிக்கிழமை இரவு 8.20 மணிக்கு யுனைட்டட் ஸ்கொயரில் தான் நடத்தி வரும் தனியார் மருந்தகத்திலிருந்து வீட் டுக்குப் புறப்படவிருந்த நேரத்தில் ஒரு மாது தன்னுடைய நான்கு வயதுப் பயனை தூக்கிக்கொண்டு சிகிச்சைக்காக வந்தார். “அந்தப் பையன் இருமினான். இருமல் சத்தம் வித்தியாசமாக இருந்தது. மூச்சுவிட அவன் சிரமப்பட்டது தெரிந்தது. ஒவ்வாமை காரணமாக பையனுக் குப் பாதிப்பு ஏற்பட்டதாகக் கருதி னேன்.

தனித்துவம் குறைந்துவரும் தீபாவளி சந்தை

தீபாவளி வந்துவிட்டால் பண்டி கைக்குத் தேவையான பொருட் களை வாங்க கிண்டா சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள தீபாவளி சந்தைக்கு வாடிக் கையாளர்கள் செல்வது வழக்கம். பலகாரங்கள், பாரம்பரிய இந்திய உடைகள், ஆடை அணிகலன்கள், வீட்டுக்குத் தேவையான அலங்காரப் பொருட்கள், மருதாணி இடும் சேவைகள் என அனைத்தும் ஒரே கூரையில் கிடைக்கும் தளமாக இச்சந்தை விளங்கி வந்துள்ளது. இவ்வாண்டின் தீபாவளிச் சந்தையில் நுழைந்தபோது அதன் முகப்பில் இத்தகைய அம்சங்கள் தெரிந்தன. ஆனால் சந்தைக்குள் செல்லச் செல்ல பண்டிகை உணர்வும் குறையத் தொடங்கியது.

‘கட்சியில் தனது நிலையை வலுப்படுத்த சசிகலா திட்டம்’

தற்போதைய தமிழக அரசியல் சூழலில் அதிமுகவில் இழந்த தனது பிடியை இறுக்கிக்கொள்ள வும் தனிக்கட்சி தொடங்கத் திட்டமிட்டுள்ள தினகரனை ஓரம் கட்டவும்தான் சசிகலா பரோலில் வந்திருப்பதாக அரசியல் கவனிப் பாளர்கள் கருதுகின்றனர். நேற்று முன்தினம் பெங்களூரு சிறையிலிருந்து கார் மூலம் சென்னை வந்தடைந்த சசிகலா வுடன் தினகரனும் பயணம் செய் ததாகக் கூறப்பட்டது. நேற்று பிற் பகல் 12 மணிக்கு மருத்துவ மனைக்குச் சென்று கணவரைப் பார்த்தார் சசிகலா. கணவரின் உடல்நலம் குறித்து கண்ணீர் மல்க சசிகலா விசாரித்தார் என்று கூறப்பட்டது. செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் இருக் கும் நடராசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைக்கும் பீஷான் காப்பிக்கடை

மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்- களை அடையாளம் கண்டு அவர் களுக்கு நட்பார்ந்த சேவை வழங்- கும் வகையில் காப்பிக்கடை ஒன்று புதிய வடிவமைப்புடன் தோற்றம் அளிக் கிறது. பீஷான் ஸ்திரீட் 13, புளோக் 511ல் உள்ளது அந்த காப்பிக்கடை. கிம் சாங் லெங் கோப்பித்தியாம் என்ற அக்கடையில் உள்ள மேசை களில் அங்கு விற்கப்படும் உண- வுகளின் படங் களும், வாசகங்- களும் பெரிய அளவில் அச் சிடப்பட்டுள்ளன. மறதி நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நாணயங்களை எளி தில் அடையாளம் காண முடியாது. அவ்வகையில் நாணயங்களின் வடிவங்களும் உணவு மேசை களில் அச்சிடப்பட்டுள்ளன.

அனைவரையும் ஈர்க்கும் வகையில் புதிய லெங் கீ சமூக மன்றம்

லெங் கீ சமூக மன்றம் இரண் டாண்டு புதுப்பிப்புக்குப் பிறகு இப்போது கதவைத் திறந்திருக்- கிறது. குயீன்ஸ்டவுன் பேட்டை- யில் வசிக்கும் 47,000 மக்களுக்கு அந்த மன்றம் இப்போது முன்னிலும் சிறந்த வசதியை வழங்கத் தயாராகி இருக்கிறது. பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் திறப்புவிழாவில் கலந்துகொண்டார். “இந்த மன் றத் தைச் சுற்றிலும் அமைந்துள்ள குடியிருப்புப் பேட்டை முதிர்ச்சி யடைந்த பேட்டை என்றாலும் கடந்த சில ஆண்டுகளில் இங்கு புதிய அடுக்குமாடி வீடுகள் கட் டப்பட்டு இருக்கின்றன. அவற்றில் இளம் குடும்பங்கள் குடியேறுகின்றன,” என்று அமைச் சர் குறிப்பிட்டார்.

அதிபர் ஹலிமாவின் தேர்தல் பிரசார செலவு $220,875

அதிபர் ஹலிமா யாக்கோப் தனது தேர்தல் பிரசாரத்திற்கு மொத்தம் $220,875 செலவிட்டார். தேர்தல் துறை நேற்று வெளியிட்ட பத்திரங்கள் இந்த விவரங்களைக் காட்டுகின்றன. இதில் $198,154 தொகை விளம்பரத்திற்கும் பிரசுரங்களுக் கும் செலவிடப்பட்டது. அதிபர் ஹலிமா $73,000 செலவில் 20,110 பிரசார சுவரொட்டிகளை அச்சிட்டார். பிரசாரத்தின்போது பயன்படுத் தப்பட்ட 200 பிவிசி வாசகக் கொடிகளுக்கு மட்டும் $20,000 செலவானது. $34,000 செலவில் 1.28 மில்லியன் அட்மெய்ல் ஏ5 அட்டைகள் உருவாக்கப்பட்டன. அவரைப் பற்றிய காணொளி ஒன்றும் $29,000 செலவில் தயா ரிக்கப்பட்டது.

போதைப்பொருள் சிக்கியது; சந்தேகத்தின்பேரில் மூவர் கைது

மத்திய போதைப்பொருள் ஒழிப் புப் பிரிவு வெள்ளிக்கிழமை மேற் கொண்ட நடவடிக்கையின் விளைவாக சுமார் $109,-000 மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. போதைப்பொருள் குற்றவாளி கள் என்று சந்தேகிக்கப்படும் மூன்று பேர் பிடிபட்டு இருக் கிறார்கள். ஹாலண்ட் ரோட்டில் இருக்கும் ஜெலிட்டா ஷாப்பிங் சென்டர் அருகே இருந்த இரண்டு அதிகாரிகள், 41 வயது ஆடவர் ஒருவர், 26 வயது மலேசியருடன் பேசிக்கொண்டு இருந்ததைப் பார்த்தார்கள். பிறகு அந்த மலேசியர், அந்த கடைத்தொகுதிக்குள் நுழைந் தார். சிங்கப்பூரரான மற்றோர் ஆடவர் தன் வாகனத்தில் காத் துக்கொண்டிருந்தார். இந்த ஆடவர் கிம் மோ லிங்க் அருகே கைதானார்.

ரயில் சேவையில் கடுமையான பாதிப்பு

சிங்கப்பூரில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக தோ பாயோ எம்ஆர்டி ரயில் நிலையத்திற்கும் பிராடல் நிலையத்திற்கும் இடை யில் சுரங்கப்பாதையில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் வடக்கு-தெற்கு ரயில் வழித்தடத்தின் பெரும் பகுதி செயல்பட முடியாமல் பாதிக்கப்பட்டது. ரயில் தண்ட வாளங்களில் வெள்ளம் ஏற்படா மல் இருப்பதை உறுதிப்படுத்த வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் அண்மையில் மேம்படுத்தப்பட்டன. இருந்த போதிலும், நேற்று சுரங்கப்பாதை யில் தண்ணீர் புகுந்துவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி வித்தது.

Pages