உல‌க‌ம்

காஸா: இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான மிகக் கடுமையான போரின் காரணமாக காஸாவின் தென்பகுதியிலிருந்து வெளியேற முடியாமல் ஆயிரக்கணக்கானோர் சிக்கித் தவிக்கின்றனர்.
குவான்டனாமோ பே, கியூபா: அல்-காய்தா இயக்கத்துடன் சேர்ந்து பாலித் தீவில் 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த பயங்கரவாத குண்டு வெடிப்புக்கு சதித் திட்டம் தீட்டியவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மலேசியர்கள் இருவரின் சிறைத் தண்டனையை மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டித்து குவான்டனாமோ பே ராணுவ நடுவர் மன்றம் ஜனவரி 26ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.
நியூயார்க்: மனிதத் தலையும் உடற்பாகங்களும் அடங்கிய பைகளைத் தனது வீட்டுக் குளிர்பதனப் பெட்டியில் அடைத்து வைத்ததற்காக புரூக்ளினில் வசிக்கும் பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் ஜனவரி 26ஆம் தேதி தெரிவித்தனர்.
கெய்ரோ: ஏமனின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான ராஸ் இஸா துறைமுகத்தைக் குறி வைத்து அமெரிக்காவும் பிரிட்டனும் வான்வழியாக இரண்டு தாக்குதல்களை நடத்தியதாக ஹுதி அமைப்பின் அல்-மசிரா தொலைக்காட்சி கூறி உள்ளது.
பெட்டாலிங் ஜெயா: நிலச்சரிவு அபாயம் அதிகமுள்ள இடங்களாக கேமரன் மலை, தாப்பா-கேமரன் மலை இடையிலான சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.