சிங்கப்பூரின் நன்கு இணைக்கப்பட்ட வட்டார மையமாக தெம்பனிஸ்

சிங்கப்பூரின் மிகவும் நன்கு இணைக்கப்பட்ட வட்டார மையமாக தெம்பனிஸ் விளங்குவதாக புதிய நூல் ஒன்றில் தெரியவந்துள்ளது.

வட்டார நிலையங்கள் என்பவை வேலை அல்லது பொழுதுபோக்கிற்காக மக்கள் வீட்டிலிருந்து பயணம் செய்யும் தூரத்தைக் குறைப்பதாகும்.

‘நகரம் மறுஉருவாக்கம்: சிங்கப்பூரில் கட்டமைப்புகள், இணைப்பு மற்றும் இடம் அடையாளங்கள்’ எனும் அந்நூல், சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்பு பல்கலைக்கழக கௌரவப் பேராசிரியர் சான் ஹெங் சீ மற்றும் பேராசிரியர் ஆய்வாளர் ஹார்வி நியோவால் திருத்தப்பட்டது.

2019, 2020, 2021 ஆண்டுகளில் செப்டம்பர் மாதம் 837 கைப்பேசிகளின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்த டாக்டர் நியோவும் எஸ்யுடிடி துணை ஆய்வாளர் லி பேயியும், தெம்பனிஸ் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து செல்லுமிடங்களுக்கு மிகக் குறுகிய தூரம் பயணம் செய்ததைக் கண்டறிந்தனர்.

அதே நேரத்தில், தெம்பனிஸ் மற்றும் ஜூரோங்கில் வசிப்பவர்களுடன் ஒப்பிடுகையில், உட்லண்ட்ஸ் குடியிருப்பாளர்கள் சராசரியாக தொலைதூரப் பயணம் மேற்கொண்டது கண்டறியப்பட்டது.

2020ல் கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் சமூக இடைவெளி நடவடிக்கைகள் கடுமையாக இருந்தபோது தெம்பனிஸ் குடியிருப்பாளர்கள் பயணம் செய்த சராசரி தூரம், மூன்று வட்டார மையங்களிலேயே மிகவும் குறைவு.

அதே நேரத்தில் ஜூரோங் குடியிருப்பாளர்களுக்குப் பயண தூரம் சற்றுதான் குறைந்தது என்று டாக்டர் நியோ மற்றும் திரு லியின் பகுப்பாய்வு கண்டறிந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!