You are here

தலைப்புச் செய்தி

பிரதமர் லீ: அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவில்லை - ஆக்ஸ்லி ரோடு வீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம்

படம்: gov.sg

பிரதமர் என்ற முறையில் தனக்கு உள்ள அதிகாரத்தைத் தான் தவ றாகப் பயன்படுத்திக் கொண்டிருப்ப தாக தன் உடன்பிறந்தோர் கூறிய குற்றச்சாட்டுகளைத் திரு லீ சியன் லூங் மறுத்துள்ளார். இதில் தனக்கு இருக்கும் தனிப்பட்ட நலன்களை பிரதமர் என்ற முறையில் தனக்குள்ள பொதுவான கடமைகளில் இருந்து பிரித்து வைத்து செயல்பட்டு இருப்ப தாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் வீடு தொடர்பாக நாடாளுமன்றம் விவாதிப்பதற்காக நேற்றும் இன்றும் என இரு நாட்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், நேற்று அவையில் பேசிய திரு லீ மேற் கண்டவாறு தெரிவித்தார்.

‘அமைச்சர் நிலைக் குழுவுக்கு நிபந்தனை விதிப்பதில்லை’

எண் 38 ஆக்ஸ்லி ரோட்டில் அமைந்திருக்கும் முன்னாள் பிரதமர் திரு லீ குவான் இயூவின் வீடு.

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் எண் 38 ஆக்ஸ்லி ரோடு வீடு தொடர்பான அமைச்சர் நிலை குழுவிற்கோ அந்தக் குழுவின் உறுப்பினர் களுக்கோ தான் எந்த நிபந்தனை களையும் விதிப்பதில்லை என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார். அந்தக் குழுவினர் கேட்டுக் கொள்ளும்போது மட்டும் தன் உடன்பிறப்புகள் செய்வதைப்போல, குழுவினருடன் தான் எழுத்து மூலமாக தொடர்புகொள்வதாக திரு லீ குறிப்பிட்டார். சொந்த நலன் குறித்த பிரச் சினை என்று வரும்போது அத் தகைய ஒரு பிரச்சினையைக் கையாளுவதற்கு இதுவே சரியான, முறையான வழி என்றார் அவர்.

ஜூரோங் வட்டாரத்தில் புதிய சைக்கிள் பாதை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜூரோங் ஈஸ்ட், சீனத் தோட்டம், லேக்ஸைட் ஆகிய பகுதிகளை இணைக்கும் 15 கிலோமீட்டர் தூர சைக்கிள் பாதை கட்டமைப்பு நேற்று காலை ஜூரோங் லேக் வட்டாரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஒரு முழுமையான சைக்கிள் பாதை கட்டமைப்பைக் கொண்ட எட்டாவது இடமாக இது திகழ்கிறது. புதிய பாதையினால் மக்கள் ஜூரோங் லேக் தோட்டங்களையும் அங்கிருந்து தாமான் ஜூரோங் வரையில் பூங்கா இணைப்புக்கள் மூலம் சைக்கிள் பயணம் மேற்கொள்ளலாம்.

தமிழ் முரசு வாங்குவோருக்கு வெகுமதி

‘நேச்சுரல்’ அரிசிப் பொட்டலம்

சனிக்கிழமைகளில் குறிப்பிட்ட கடைகளில் தமிழ் முரசு நாளிதழை வாங்குங்கள், வெகுமதி ஒன்றைப் பெறுங்கள். கீழ்க்கண்ட இடங்களில் தமிழ் முரசு நாளிதழை வாங்குவோருக்கு ‘நேச்சுரல்’ அரிசிப் பொட்டலம் வழங்கப்படும்.

சொத்துச் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகளைத் தளர்த்துவதற்கு காலம் கனியவில்லை

பொருத்தமான காலம் சொத்துச் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகளைத் தளர்த்துவதற்கு இன்னும் பொருத்தமான காலம் வரவில்லை என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் நேற்று தெரிவித்தார். சொத்துச் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகளில் இவ்வாண்டு தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களை அந்நடவடிக்கை களைத் தளர்த்துவதற்கான அறிகுறி யாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிட்ட சில நோக்கங் களுக்காக அந்த மாற்றங்கள் அறி விக்கப்பட்டன என்றும் திரு மேனன் சொன்னார். கடந்த மார்ச் மாதத்தில் வீடு விற்பவருக்கான முத்திரைத்தாள் கட்டணக் குறைப்பு உள்ளிட்ட சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.

கணினிகளை முடக்கி பணம்பெற மீண்டும் சதி

உலகளவில் பல நாடுகளிலும் கடந்த மே மாதம் கணினிகளை முடக்கி நிர்வாகத்தை நிலைகுலையவைத்த ‘வானாகிரை’ போன்ற மற்றும் ஓர் இணையத் தாக்குதல் ஆசியாவையும் எட்டிவிட்டது. ஐரோப்பாவிலிருந்து கிளம்பி அமெரிக்காவை சென்றடைந்த அந்தக் கிருமிகள், ஆசியாவிலும் நிறு வனங்களையும் துறைமுகங்களையும் அரசாங்க நிர்வாகத்தையும் ஒழுங்காகச் செயல்படவிடாமல் கெடுத்துவிட்டன. இந்தியாவின் ஆகப் பெரிய கொள் கலத் துறைமுகமாகத் திகழ்கின்ற மும்பைக்கு அருகே உள்ள ஜவகர்லால் நேரு துறைமுகத்தின் நடவடிக்கைகள் குறிப்பிடும்படியாக பாதிக்கப்பட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

நல்லிணக்கம் வளர்க்கும் ரயில்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரிவினை வாதம் தலைதூக்கும் இந்தக் காலகட்டத்தில், பிரிட்டன், பிரஸல்ஸ், பிலிப்பீன்ஸ் நாடுகளில் தாக்குதல்கள் நடைபெற்றுள்ள நிலையில் நல்லிணக்கத்தை வலி யுறுத்துவது முக்கியமான இலக்கு என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார். ஹாபர்ஃபிரண்ட் எம்ஆர்டி நிலையத்தில் நேற்று நல்லிணக்க ரயிலின் ஓட்டத்தைத் தொடங்கி வைத்து பேசிய அவர், “நமக்கிடை யேயுள்ள வேற்றுமைகள் நம்மைப் பிரித்துவிடுவோ என்று அச்சம் தலைதூக்கும்போது நமது பொது இலக்குகளை நாம் நினைவுறுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்.

நல்லிணக்கப் பேராளர் வீட்டு விருந்தில் அமைச்சர் புதுச்சேரி

படம்: ஃபேஸ்புக்/ ஜனில் புதுச்சேரி

நோன்புப் பெருநாளை முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் களிக்க வாய்ப்பு அளித்தது மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ‘SG Muslims for Eid’ எனும் திட்டம் ஒன்று. இதை முன்னிட்டு திட்டத்தை அறிமுகப்படுத்திய 27 வயது குமாரி நூர் மஸ்தூராவின் இல் லத்திற்குத் தொடர்பு, தகவல் அமைச்சு மற்றும் கல்வி மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி சிறப்பு விருந்தினராகச் சென்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடினார்.

இலவச பயணத் திட்டம் நீட்டிப்பு

உச்ச நேரம் அல்லாத மற்ற வேளைகளில் ரயில்களில் பயணம் செய்வதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை பொதுப் போக்குவரத்து மன்றம் மறுஆய்வு செய்யும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. உச்ச நேரத்திற்கு முன் இலவசமாகப் பயணம் செய்யும் திட்டம் 2013லும் உச்ச நேரம் அல்லாத பயண அட்டைத் திட்டம் 2015லும் அறிமுகம் கண்டன. பொதுப் போக்குவரத்தில் உச்ச நேரத்தின்போது பயணிகள் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த சோதனை முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

Pages