You are here

தலைப்புச் செய்தி

கார் பயணிகளுக்கு கைரேகைப் பதிவு

படம்: சாவ் பாவ்

துவாஸ், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிகள் வழியாகச் செல்லும் கார் பயணிகள் விரைவில் தங் களது கட்டைவிரல் ரேகைகளை அங்குள்ள குடிநுழைவு முகப்பு களில் பதிவுசெய்ய வேண்டி இருக்கும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட அந்த ‘பயோஸ்கிரீன்’ பாதுகாப்புக் கட்டமைப்பு மூலம் அவ்விரு சோதனைச்சாவடிகள் வழியாக சிங்கப்பூருக்கு வருவோரின், சிங்கப்பூரைவிட்டு வெளியேறு வோரின் கட்டை விரல் ரேகைகள் பதிவு செய்யப்படும். தற்போது ரயில், பேருந்துப் பயணிகளுக்கும் லாரி போன்ற சரக்கு வாகனங்களுக்கும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வரு கிறது.

சைக்கிள் ஓட்ட வசதியாக தெம்பனிஸ் தொகுதி மாறும்

தெம்பனிஸ் தொகுதியை வரும் 2022ஆம் ஆண்டுக்குள் சிங்கப் பூரின் நடப்பதற்கும் சைக்கிள் ஓட்டுவதற்கும் ஏற்ற இரண்டாவது நகரமாக மாற்றி வடிவமைக்க உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிவித்தது. இத்திட்டத்தில் சைக்கிள் பாதையின் நீளத்தை மும்மடங்காக அதிகரித்து சைக்கிள்ளோட்டி களுக்கு பாதுகாப்பான பாதையாக மாற்றுவதுடன் நடைபாதையை அகலப்படுத்தி பாதசாரிகளுக்குப் பாதுகாப்பான, வசதிமிக்க இடமாக தெம்பனிஸ் தொகுதியை உருமாற்ற ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஐஎஸ்ஸில் சிங்கப்பூரர்

மெகாட் ‌‌ஷாடான் அப்துல் சமட், 39,

சிங்கப்பூரர் ஒருவர் இடம்பெற்றுள்ள ஐஎஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்க்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அக்காணொளியில் இருப்பது மெகாட் ‌‌ஷாடான் அப்துல் சமட், 39, என்று அடையாளம் கண்டுள்ள உள்துறை அமைச்சு, பாதுகாப்பு அமைப்புகள் அவனது நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவதையும் உறுதிப்படுத்தியுள்ளது. பணி நிமித்தமாக 2014ஆம் ஆண்டு மெகாட் மத்திய கிழக்கு வட்டாரத்திற்குச் சென்றதாகக் கூறிய அமைச்சு, அங்கு அவன் சுயதீவிரவாதப் போக்கிற்கு மாறி இருக்கலாம் என்று நம்புகிறது. "அங்கு சென்றபின் அவன் சிரியா சென்று ஐஎஸ்ஸில் இணைந்திருக்கலாம்.

‘மேம்பாட்டுக்கு உதவும் சிண்டா விருதுகள்’

புதிய சாத்தியங்களை உருவாக்கு வதுடன் பல்வேறு வழிகளில் வெற்றியை அடைய உதவும் சிண்டாவின் உன்னத விருதுகள் மாணவர்களின் மேம்பாட்டுக்குக் கைகொடுக்கின்றன என்றார் கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங். கல்வி, விளையாட்டு, கலை ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களை கௌரவித்து வரும் சிண்டா, 26வது முறையாக நேற்று 485 மாணவர்களுக்கு உன்னத விருதுகளை வழங்கியது.

உதவிக்கு ஓடோடி வந்த வெளிநாட்டு ஊழியர்கள்

தவறாகத் திருப்பப்பட்டதால் படி களில் சரிந்தபடி நின்ற காரை மற்றவர்கள் தங்கள் கைபேசிகளில் படம் பிடித்தவாறு இருக்க, வெளி நாட்டு ஊழியர்கள் பலர் ஒன்று சேர்ந்து தள்ளி மீண்டும் சாலைக் குக் கொண்டு சென்ற சம்பவம் பொங்கோல் வாட்டர்வே பாய்ண்ட் கடைத்தொகுதியில் நேற்று முன் தினம் மாலையில் நிகழ்ந்தது. வெளிநாட்டு ஊழியர்களின் இச்செயலைக் கண்டு வியப்பும் நெகிழ்ச்சியும் அடைந்த திரு கேரெட் லிம், 38, அது தொடர் பான காணொளியையும் படங் களையும் தமது ஃபேஸ்புக் பக்கத் தில் பதிவேற்றம் செய்தார். அப்பதிவை இதுவரை ஏறத்தாழ 6,000 பேர் ‘லைக்’ செய்துள்ளனர்;

சீனப் பிரதமர்: சிங்கப்பூருடனான உறவுக்குப் பெரும் முக்கியத்துவம்

படம்: சாவ் பாவ்

சிங்கப்பூருடனான இருதரப்பு உற வுக்குச் சீனா பெரும் முக்கியத்துவம் அளிப்பதாக சீனப் பிரதமர் லீ கெச்சியாங் கூறியிருக்கிறார். பரஸ்பர மரியாதையை அடிப்படை யாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த உறவு இரு நாடுகளுக்கும் சமத்துவமானது என்றும் இருநாட்டு மக்களுக்கும் பலனளிப்பதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். சீனாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை நேற்று பெய்ஜிங்கின் மாபெரும் மக்கள் அரங்கில் சந்தித்தபோது சீனப் பிரதமர் லீ இவ்வாறு கூறினார். இரு நாட்டுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை இரு பிரதமர் களும் மறுஉறுதிப்படுத்தினர்.

பங்ளாதேஷ்: உதவிப் பொருட்களைப் பெற முண்டியடித்ததில் மூவர் பலி

பங்ளாதே‌ஷில் உள்ள ரோஹிங்யா அகதிகள் முகாமுக்கு அருகே உதவிப் பொருட்கள் வழங்கப்பட்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மிதிபட்டு இரண்டு சிறுவர், ஒரு பெண் ஆகியோர் சென்ற வெள்ளிக்கிழமை பலியானதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்தது. உதவிப் பொருட் களைப் பெறுவதில் அகதிகளுக் கிடையே சண்டை ஏற்படுவதாக வும் அது குறிப்பிட்டது. அதிகாரிகளிடம் அனுமதி ஏதும் பெறாமல் உதவிப் பொருட் களை பலர் அகதிகளுக்கு வழங்கி வருகின்றனர். அவ்வாறு பலுகாலி பகுதியில் உள்ள முகாமுக்கு அருகே உடைகளை அகதிகளுக்கு வழங்கியபோது ஏற்பட்ட நெரிசலில் மிதிபட்டு அம்மூவரும் இறந்துபோனதாக கூறப்பட்டது.

வெளியேறிய வெட்டல்; முன்னேறிய ஹேமில்டன்

சிங்கப்பூர் கிராண்ட் பிரி எஃப்1 கார் பந்தயத்தில் முன்னணியில் போட்டியைத் தொடங்கிய செபாஸ்டியன் வெட்டல் முதல் சுற்றிலேயே வெளியேறினார். மழையால் ஈரமான சாலையில் அவரது கார் முதல் சுற்றிலேயே திருப்பம் ஒன்றில் சக ‘ஃபெராரி’ குழு உறுப்பினர் கிமி ரைக்கோனென், ‘ரெட்புல்’ கார் ஓட்டிய மேக்ஸ் வெர்ஸ்டாப்பென் ஆகியோரின் கார்கள்மீது மோதியதில் கார்கள் கடுமையாகச் சேதமுற்றன. போட்டியின் தொடக்கத்துக்கு முன்பாகவே வெட்டலைவிட மூன்று புள்ளிகள் அதிகம் வைத்திருந்த லூவிஸ் ஹேமில்டன் ஐந்தாம் இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறினார். படம்: ராய்ட்டர்ஸ்

மேஃபிளவர் பள்ளிக்கூடத்தில் காதுகேளா மாணவர் பயில்வர்

மேஃபிளவர் தொடக்கப்பள்ளியில் அடுத்த ஆண்டு முதல் காது கேளாத குறைபாடுள்ள பிள்ளைகள் வழக்கமான மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து கல்வி பயில்வார்கள். அங் மோ கியோவில் இருக்கும் அந்தப் பள்ளிக்கூடம் அடுத்த ஆண்டு தொடக்கப்பள்ளி முதல் வகுப்பில் காதுகேளாத குறைபாடு உள்ளோரில் ஏழு மாணவர்கள் வரை சேர்த்துக்கொள்ளும். மிதமானது முதல் அறவே காது கேட்காத மாணவர்களைச் சேர்த் துக்கொள்ளும் வகையில் வகைப் படுத்தப்பட்டுள்ள முதலாவது தொடக்கப்பள்ளி இதுவே ஆகும். இத்தகைய குறைபாடுள்ள பிள்ளைகள் இப்போது சிறப்பு கல்வி பள்ளிக்கூடங்களான லைட் ஹவுஸ் அல்லது கனோசியன் பள்ளிக்குச் செல்கிறார்கள்.

Pages