ஆறுதல் வெற்றிபெற இங்கிலாந்து ஆயத்தம்

அகமதாபாத்: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 36ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறது.

ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு அகமதாபாத் விளையாட்டரங்கில் நடக்கிறது.

நடப்பு வெற்றியாளரான இங்கிலாந்து 6 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அதன் அரையிறுதி வாய்ப்பும் கிட்டத்தட்ட கைநழுவிப் போய்விட்டது.

இருப்பினும் தனது பரம வைரியான ஆஸ்திரேலியாவை வீழ்த்த இங்கிலாந்து முயற்சி செய்யும்.

ஆஸ்திரேலியா தொடர்ந்து நான்கு ஆட்டங்களில் வெற்றுபெற்றுள்ளது.

அதன் பந்தடிப்பாளர்கள் நன்கு ஓட்டங்கள் குவித்து வருகின்றனர்.

கிளன் மேக்ஸ்வெல் காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிட்சல் மார்‌ஷ் தனிப்பட்ட காரணத்தால் தாயகம் சென்றுவிட்டார். இவை ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெல்லும் பட்சத்தில் அதன் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!