ஆசிய விளையாட்டுகள்: கடைசி தங்கப் பதக்கங்களை வென்ற ஜப்பான், தைவான், சீனா

ஹாங்ஜோ: சீனாவின் ஹாங்ஜோ நகரில் நடைபெற்ற இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளின் கடைசி தங்கப் பதக்கங்களை சீனா, தைவான், ஜப்பான் ஆகியவை வென்றுள்ளன.

கலைநய நீச்சல், கராத்தே ஆகியவற்றில் அவை தங்கம் வென்றன.

விளையாட்டுகளின் ஆகக் கடைசி தங்கப் பதக்கத்தை வென்றார் தைவானின் 26 வயது கு ஷியாவ்-ஷுவாங். அவர் கஸக்ஸ்தானின் மோல்டிர் சாங்பிர்பேயை வென்று கராத்தேயின் பெண்கள் 50 கிலோகிராம் ‘குமைத்தே’ பிரிவில் மீண்டும் தங்கத்தைக் கைப்பற்றினார்.

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுகளிலும் அவர் இப்பிரிவில் வாகை சூடினார். இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளில் தைவான் 19 தங்கப் பதக்கங்களை வென்றது.

கராத்தேயின் ஆண்கள் ‘கட்டா’ குழுப் பிரிவில் மக்காவை வென்று தங்கம் வென்றது ஜப்பான்.

கலைநய நீச்சலின் ‘ஃபிரீ ருட்டீன்’ குழுப் பிரிவில் சீனா தங்கம் வென்றது. வெள்ளிப் பதக்கத்தை வென்றது ஜப்பான், வெண்கலம் கஸக்ஸ்தானுக்குச் சென்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!