பாதாளத்திலிருந்து மீண்டெழுந்த யுனைடெட்

மான்செஸ்டர்: தொடர் சரிவை எதிர்கொண்டுவந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட் யாரும் எதிர்பாரா வகையில் மீண்டெழுந்து பிரென்ட்ஃபர்டுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றிகண்டது.

ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் மத்தாயஸ் யென்சன் பிரென்ட்ஃபர்டை முன்னுக்கு அனுப்பினார். யுனைடெட் கோல்காவலர் ஆண்ட்ரே ஒனானா, கசமியரோ உள்ளிட்ட வீரர்கள் செய்த தவறுகளால் அந்த கோல் விழுந்தது.

பிற்பாதியாட்டம் முழுவதும் யுனைடெட் முழுவீச்சில் கோல் போடும் முயற்சியில் இறங்கியது. ஆனால் அக்குழு அதிக கோல் வாய்ப்புகளை உருவாக்கவில்லை.

ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் யுனைடெட்டின் ஸ்காட் மெக்டாமினே மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கினார். 93வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார் மெக்டாமினே. அத்துடன் நின்றுவிடாமல் 97வது நிமிடத்தில் அவர் யுனைடெட்டின் வெற்றி கோலையும் போட்டார்.

யுனைடெட்டில் இருக்கும் பல நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரர்கள் செய்யமுடியாததைச் செய்து குழுவை மீட்டார் மெக்டாமினே. இந்த ஆட்டத்திலிருந்து யுனைடெட் மீண்டு வெற்றிப் பாதையில் பயணம் செய்யும் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் கொண்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!