யுனைடெட் தொடர் தோல்வி

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட் மீண்டும் தோல்விகண்டுள்ளது.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் யுனைடெட், துருக்கியின் கலட்டாசரே குழுவிடம் தோல்வியுற்றது. இப்போட்டியில் இதற்கு முன்பு ஜெர்மனியின் பயர்ன் மியூனிக்கிடம் தோல்வியடைந்தது.

பிரிமியர் லீக்கிலும் யுனைடெட் இப்பருவத்தில் இதுவரை பெரிய அளவில் தடுமாறி வந்துள்ளது. குழு, ஏழு லீக் ஆட்டங்களில் நான்கில் தோல்வியடைந்துவிட்டது.

சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் யுனைடெட் இரண்டு முறை முன்னுக்குச் சென்றபோதும் இறுதியில் சமநிலைகூட காணத் தவறியது. குழுவின் புதிய கோல்காவலர் ஆண்ட்ரே ஒனானா தொடர்ந்து இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் தவறு இழைத்ததால் யுனைடெட்டுக்குப் பிரச்சினை எழுந்தது.

‘ஏ’ பிரிவின் மற்றோர் ஆட்டத்தில் பயர்ன், டென்மார்க்கின் கோப்பன்ஹேகனை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது.

‘பி’ பிரிவில் மற்றொரு பிரிமியர் லீக் குழுவான ஆர்சனலும் சாம்பியன்ஸ் லீக்கில் தோல்விகண்டது. பிரான்சின் ஆர்சி லொன்ஸ், ஆர்சனலை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது.

‘சி’ பிரிவில் ஸ்பெயினின் ரியால் மட்ரிட், இத்தாலியின் நேப்பொலியை 3-2 எனும் கோல் கணக்கில் வென்றது. விட்டுக்கொடுக்காமல் ஆடியபோதும் நேப்பொலியால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

‘டி’ பிரிவில் இத்தாலியின் இன்டர் மிலான், போர்ச்சுகலின் பென்ஃபிக்காவை 2-1 எனும் கோல் கணக்கில் வெற்றிகண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!