ஐரோப்பாவில் சிட்டியை விஞ்சிய வெஸ்ட் ஹேம்

லண்டன்: ஐரோப்பியக் காற்பந்துப் போட்டிகளில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான வெஸ்ட் ஹேம் யுனைடெட் தொடர்ந்து 17 ஆட்டங்களில் தோல்வியடையாமல் சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த எந்தக் குழுவும் ஐரோப்பியப் போட்டிகளில் இத்தனை ஆட்டங்களில் தோல்வியடையாமல் இருந்ததில்லை.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக், பிரிமியர் லீக் ஆகிய இரண்டு போட்டிகளிலும் நடப்பு வெற்றியாளர் குழுவாக இருக்கும் மான்செஸ்டர் சிட்டி 16 ஐரோப்பிய ஆட்டங்களில் தோல்வியடையவில்லை. இதன் தொடர்பில் தற்போதைக்கு சிட்டியையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது வெஸ்ட் ஹேம்.

வெஸ்ட் ஹேமின் இந்தச் சாதனையை எண்ணி அதன் நிர்வாகி டேவிட் மோய்ஸ் மகிழ்ச்சி தெரிவித்தார்.

“ஐரோப்பியப் போட்டிகளில் 17 ஆட்டங்களில் தோல்வியடையாமல் இருப்பது எனக்கு மிகுந்த பெருமையைத் தருகிறது,” என்று வெஸ்ட் ஹேமின் இணையத்தளத்தில் மோய்ஸ் கூறினார்.

உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை யூயேஃபா யுரோப்பா லீக் போட்டியில் வெஸ்ட் ஹேம், ஜெர்மனியின் எஃப்சி ஃபிரைபர்க்கை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது. அதன் மூலம் ஐரோப்பாவில் தனது வெற்றிப் பயணத்தை 17 ஆட்டங்களுக்கு நீட்டித்தது வெஸ்ட் ஹேம்.

“சாதனை படைப்பது என்றும் சிறந்ததே. ஆனால் அதைவிட முக்கியம் இன்றைய ஆட்டத்தில் வெற்றிகண்டு மூன்று புள்ளிகளைப் பெற்றது. அதிலும் இந்தப் பிரிவில் ஆகச் சவாலானதாகக் கருதப்படும் குழுவை வென்றது சிறப்பு,” என்றார் மோய்ஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!