பார்சிலோனாமீது லஞ்ச ஊழல் விசாரணை

மட்ரிட்: பிரபல ஸ்பானிய காற்பந்துக் குழுவான பார்சிலோனா லஞ்ச ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளது. அதையடுத்து அக்குழுமீது விசாரணை நடத்தப்படுகிறது.

ஸ்பெயினின் நடுவர் அமைப்பில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஊழல் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. அதில் பார்சிலோனா சம்பந்தப்பட்டிரு்பபதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் உள்ள ஸ்பானிய காற்பந்துச் சம்மேளன அலுவலகங்களை காவல்துறையினர் சோதனையிட்டதாக பார்சிலோனா நகர நீதிமன்றம் ஒன்று தெரிவித்தது.

ஸ்பானிய காற்பந்து அண்மைக் காலமாகப் பல்வேறு சர்ச்சைகளை எதிர்நோக்கி வந்துள்ளது.

முன்னாள் ஸ்பானிய காற்பந்துச் சம்மேளனத் தலைவர் லூயிஸ் ருபியாலஸ் சில வாரங்களுக்கு முன்பு பதவி விலகினார். ஸ்பெயின் பெண்கள் அணி வீராங்கனை ஜெனி ஹர்மோசோவின் உதட்டில் அவரின் அனுமதியின்றி முத்தமிட்டதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து ருபியாலஸ் பதவி விலக நேரிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!