அமெரிக்காவில் மெஸ்ஸி அதிரடித் தொடக்கம்

ஃபோர்ட் லாடர்டேல்: நட்சத்திர காற்பந்து ஆட்டக்காரரும் அர்ஜென்டினா அணித் தலைவருமான லயனல் மெஸ்ஸி, அமெரிக்காவின் இன்டர் மயாமி குழுவிற்கு மாறிய தனது முதல் ஆட்டத்திலேயே முத்திரை பதித்தார்.

மெக்சிகோ குழுவான குரூஸ் அஸுலுக்கு எதிரான லீக்ஸ் கிண்ண ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கோலடித்து, 2-1 என்ற கணக்கில் தமது குழுவிற்கு மெஸ்ஸி வெற்றி தேடித் தந்தார்.

இந்த ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கினார் மெஸ்ஸி. இடைநிறுத்தத்திற்காக ஆட்டத்தின் இறுதியில் சேர்க்கப்பட்ட கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடத்தில் கிடைத்த ‘ஃபிரீ கிக்’ வாய்ப்பின்மூலம் மெஸ்ஸி உதைத்த பந்து, வளைந்து சென்று வலைக்குள் புகுந்தது.

“ரசிகர்களுக்கு இப்படி ஒரு வெற்றியைப் பரிசாகக் கொடுத்துத் தொடங்க விரும்பினோம்,” என்றார் மெஸ்ஸி.

மெஸ்ஸி அமெரிக்காவில் முதன்முறையாகக் களம் கண்ட ஆட்டத்தை நேரில் காண 20,000 பேர் அரங்கில் திரண்டிருந்தனர். கூடைப்பந்து நட்சத்திரம் லெப்ரான் ஜேம்ஸ், டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ஊடகப் புகழ் கிம் கர்தாஷியன் உள்ளிட்டோரும் அவர்களில் அடங்குவர்.

அண்மையில் பிரான்சின் பிஎஸ்ஜி குழுவிலிருந்து இன்டர் குழுவிற்கு மாறியிருந்தார் மெஸ்ஸி. அக்குழுவின் உரிமையாளர்களுள் முன்னாள் இங்கிலாந்து அணித்தலைவர் டேவிட் பெக்கமும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பானிய வீரரரும் மெஸ்ஸியுடன் முன்னர் பார்சிலோனா குழுவில் இணைந்து ஆடியவருமான செர்ஜியோ புஸ்கெட்சும் இன்டர் மயாமி குழுவில் இணைந்துள்ளார். மாற்று வீரராகக் களம் கண்ட அவரும் ஆட்டத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!