2024 ஒலிம்பிக் போட்டிகளில் பிரெஞ்சுக் காற்பந்து அணி பயிற்றுநராக ஹான்ரி

பாரிஸ்: பிரான்சின் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான காற்பந்து அணியின் பயிற்றுவிப்பாளராக தியெரி ஹான்ரி திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டார்.

பாரிசில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் களமிறங்கும் குழுவுக்கு ஹான்ரி பொறுப்பேற்பார் என்று தகவலறிந்த தரப்பு தெரிவித்தது.

ஆர்சனல், பிரான்ஸ் அணிகளின் முன்னாள் ஆட்டக்காரரான ஹான்ரி, 46, கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குப் பிறகு பெல்ஜியம் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து நிர்வாகப் பொறுப்புக்குத் திரும்புகிறார்.

பிரான்சுக்காக 123 ஆட்டங்களில் 51 கோல்களைப் போட்ட ஹான்ரி, அண்மைக் காலமாக தொலைக்காட்சி ஆலோசகராகப் பணியாற்றி வந்தார்.

ஒலிம்பிக் போட்டிகளில் கிலியன் இம்பாப்பே உள்ளிட்ட ஆட்டக்காரர்கள் இடம்பெறும் குழுவை ஹான்ரி அமைக்கக்கூடும். அப்போட்டிகளில் விளையாடுவதற்கான தமது விருப்பத்தை இம்பாப்பே முன்னதாகத் தெரிவித்து இருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!