ஸ்பர்ஸ் குழுத் தலைவராக தென்கொரியர்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவின் தலைவராக தென்கொரியாவின் ஹியுங் மின் சோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நட்சத்திர வீரர் ஹேரி கேன் பயர்ன் மியூனிக் அணிக்குச் சென்றுவிட்டதாலும் தற்போதைய தலைவராக உள்ள ஹியூகோ லோரிஸ் அணியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையிலும் அணித் தலைவர் பொறுப்பு 30 வயது சோனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இங்கிலிஷ் பிரிமியர் லீக் வரலாற்றில் ஆசிய வீரர் ஒருவர் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை. 

களத்தில் வேகமாக விளையாடக்கூடிய சோன், 2021-22 பருவத்தில் 23 கோல்கள் அடித்து தங்கக் காலணியை வென்றார். இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் 100 கோல்கள் அடித்த ஒரே ஆசிய வீரரும் இவரே. 

இது தமக்கு வியப்பையும் பெருமையையும் தருவதாக சோன் தெரிவித்தார். குழுவில் உள்ள அனைவருமே தலைவர்தான் என்ற அவர், இந்தப் பருவத்தில் தம்மால் முடிந்த அனைத்தையும் செய்து குழுவைச் வெற்றிபெற செய்ய விரும்புவதாகவும் சொன்னார்.

சோன் 2015ஆம் ஆண்டு ஸ்பர்ஸ் குழுவில் சேர்ந்தார். அவர் இதுவரை அக்குழுவிற்காக 145 கோல்கள் அடித்துள்ளார். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!