20 ஆண்டுக் காத்திருப்பு முடிவிற்கு வந்தது!

ஐந்து ஆட்டங்களிலும் வென்று இந்தியா முதலிடம்

தர்மசாலா: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி முதன்முறையாக நியூசிலாந்து அணியைத் தோற்கடித்துள்ளது.

சொந்த மண்ணில் நடந்துவரும் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இதுவரை தான் ஆடிய ஐந்து போட்டிகளிலும் வாகை சூடி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

தர்மசாலாவில் அக்டோபர் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

முன்னதாக, இரு அணிகளும் தலா நான்கு போட்டிகளில் வென்றிருந்ததால் அவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி தொடர்பில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா காயமடைந்த நிலையில் அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டார். அதேபோல், ஷார்துல் தாக்குருக்குப் பதிலாக முகம்மது ஷமி இடம்பெற்றார்.

முதலில் பந்தடித்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ஓட்டங்களை எடுத்தது. அவ்வணியின் டேரல் மிட்செல் 130 ஓட்டங்களையும் ரச்சின் ரவீந்திரா 75 ஓட்டங்களையும் குவித்தனர்.

அதன்பின் பந்தடித்த இந்திய அணி, 12 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது.

அணித்தலைவர் ரோகித் சர்மா (46), விராத் கோஹ்லி (95), ரவீந்திர ஜடேஜா (39*) சிறப்பாக ஆடி, இந்திய அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தனர்.

நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் முதல் போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகளைச் சாய்த்த முகம்மது ஷமி ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

கடைசியாக 2003ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கிண்ணத் தொடரில், ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுப் போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றிருந்தது.

அடுத்ததாக, 28ஆம் தேதி சனிக்கிழமை நடக்கும் போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவையும் அதற்கு மறுநாள் நடக்கும் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தையும் எதிர்கொள்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!