‘காம்லிங்க்’ திட்டத்தின் புதிய அணுகுமுறையால் பலர் பயன்

ஒன்­பது பிள்­ளை­க­ளின் தாயான 42 வயது திரு­வாட்டி ஹோ, அவரது இரண்­டா­வது கண­வ­ரின் நாலா­யி­ரம் வெள்ளி மாதச் சம்­பளத்­தில் பல்­வேறு சவால்­களை எதிர்­நோக்­கி­னார்.

இந்­நி­லை­யில், 'காம்­லிங்க்' எனப்படும் சமூக உதவித் திட்­டம் தனது குடும்­பத்­துக்கு மிக­வும் உதவி­யாக இருந்­த­தாக அவர் கூறினார்.

காம்­லிங்க் எனப்­படும் பல்­வேறு அமைப்­பு­கள் பங்­கு­பெ­றும் ஒருங்­கி­ணைந்த முன்­னோ­டித் திட்­டம், சிங்­கப்­பூ­ரின் வச­தி­ கு­றைந்த குடும்­பங்­க­ளைக் கைதூக்­கி­விட்­டுள்­ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு தொடங்­கிய இந்­தத் திட்­டம், குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­கள் சொந்­தக் காலில் நிற்­ப­தற்கு உதவு­கிறது.

அவர்­க­ளின் நிதிச் சுமை, குடும்பப் பிரச்­சி­னை­கள், சுகா­தா­ரச் சிக்­கல்­கள், பிள்­ளை­க­ளின் படிப்பு உள்­ளிட்ட பல அம்­சங்­களில் அது கவ­னம் செலுத்­தும்.

பிரச்­சி­னை­க­ளுக்கு விரி­வான உத­வியை ஒருங்­கி­ணைந்த முறை­யில் வழங்­க­வும் வகை­செய்­யும்.

சிங்­கப்­பூ­ரில் சமூ­க­சேவை வழங்­கப்­படும் விதத்­தில் ஆழ­மான மாற்­றத்தை விதைத்­துள்­ளது காம்­லிங்க் திட்­டம் என்று சமூ­க­சே­வை­கள் ஒருங்­கி­ணைப்­புக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ சென்ற வாரம் கூறி­யி­ருந்­தார்.

குடும்­பங்­கள் உத­வி­கேட்டு வரும்­வரை காத்­தி­ருக்­கா­மல் இந்தத் திட்­டம் நாடிச் சென்று உதவி வழங்கு­வதை அவர் சுட்டினார்.

குடும்ப உறுப்­பி­னர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைத் தனித்­த­னி­யாக அணு­கா­மல் ஒட்­டு­மொத்­தக் குடும்­பத்­தின் அடிப்­ப­டை­யில் தீர்­வு­கா­ணப்­ப­டு­வது இந்­தத் திட்­டத்­தின் சிறப்­பம்­சம்.

இது­வரை 3,800 குடும்­பங்­கள் காம்­லிங்க் மூலம் பல­ன­டைந்­துள்­ளன. நாட­ளா­விய இந்­தத் திட்­டத்­தின் மூலம் அடுத்த சில ஆண்­டு­களில் 14,000க்கும் அதி­க­மான குடும்­பங்­கள் பய­ன­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!