இசை எனும் இன்பவெள்ளத்தில் மூன்று தலைமுறையினர்

‘தபேலா முருகையா’ எனும் புனைபெயரில் அக்காலத்தில் தபேலா வாசித்துவந்த திரு நாகலிங்கம் வீரமுத்து, 78, இசையுலகில் புகழ் பெற்றவர். ஃபெப்ரா, சங்கம் பாய்ஸ், மறுமலர்ச்சி முதலிய இசைக்குழுக்களில் பல்லாண்டுகளாக வாசித்தவர்.

மறுமலர்ச்சி இசைக்குழுவில் தபேலா வாசித்தார் ‘தபேலா முருகையா’ என்று அழைக்கப்படும் திரு நாகலிங்கம் வீரமுத்து, 78. (முன்வரிசை இடம்​). படம்: மறுமலர்ச்சி இசைக்குழு

சிங்கப்பூரில் புகழ்பெற்ற ‘வசந்தம் பாய்ஸ்’ குழுவின் முகமது நூர், முகமது பஷீர், முகமது ரஃபி, ‘மறுமலர்ச்சி’ குழுவின் தலைவர் ரவிஷங்கர் ஆகியோரின் குருவாக விளங்கியவர் திரு நாகலிங்கம்.

அவருடைய மனைவி திருமதி லலிதா, 69, 1970களில் உள்ளூர்த் தொலைக்காட்சி மற்றும் வானொலிப் பாடகர். மலேசிய நிகழ்ச்சிகளிலும் பாடியவர். அவர் வீட்டில் பக்திப் பாடல்கள் பாட, திரு நாகலிங்கம் தபேலா வாசிக்க, ஏழெட்டு வயதிலிருந்தே இசையில் ஊறி வளர்ந்தார் அவர்களின் மகன் குமரன்.

குமரனின் பெற்றோர் விதைத்த இசையார்வம் மரமாகி, மேலும் மூன்று விதைகளை விதைத்தது. இன்று 43 வயது குமரனின் மூன்று பிள்ளைகளும் இசைப் பிரியர்கள்.

குமரனைப் போலவே 16 வயது சர்வேஷ்ராம், 14 வயது தனேஷ்ராம் இருவரும் டோல்கி, தபேலா, மிருதங்கம், தவில் ஆகிய கருவிகளில் வல்லமை பெற்றுள்ளனர். 8 வயது தனுஸ்ரீ ஜால்ரா தாளத்தோடு வாசிக்கிறார். அவரை வாய்ப்பாட்டு வகுப்புகளுக்கும் அனுப்பவிருக்கிறார் குமரன்.

பெற்றோர்வழி பிள்ளைகள்

“என் பெற்றோரின் தாக்கத்தால் என்னால் இயற்கையாகவே தோல்கருவிகள் வாசிக்க முடிந்தது, பஜனைகளில் பாடவும் முடிந்தது. என் பெற்றோர் என்னை இந்திய நுண்கலைக் கழகத்தில் வகுப்புகளுக்கு அனுப்பினர்,” என நினைவுகூர்ந்தார் குமரன்.

மக்கள் கழகத் தன்னுரிமை இசைக் கலைஞர்களாக தந்தை-மகன் சிங்கே ஊர்வலம், ‘மில்லெனியம் 2000’, ‘எஸ்பிளனேட்’ திறப்பு விழா ஆகியவற்றுக்கு இணைந்து வாசித்தனர்.

‘விண்ணொளி’ இசைக்குழுவிற்கு டிஎம்எஸ்-எல்.ஆர்.ஈஸ்வரி கச்சேரியிலும் சேர்ந்து வாசித்தனர்.

“நான் பஜனைகளிலும் வாசிப்பதைக் கண்டு என் பிள்ளைகளுக்கும் தோல்கருவிகள்மீது ஆர்வம் ஏற்பட்டது,” என்றார் தன் இரு மகன்களுக்கும் தவில் கற்றுக் கொடுத்த குமரன்.

சர்வேஷ்ராம், தனேஷ்ராம் இருவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் அன்றாடம் சற்று நேரம் தோல்கருவி வாசித்தபின்புதான் அடுத்த வேலைக்குச் செல்வர். அந்த அளவிற்கு இசைமோகம்.

நான்கு வயதிலேயே தானாக டோல்கி வாசிக்கக் கற்றுக்கொண்ட சர்வேஷ்ராம், 16, ஓராண்டுக்கு மேல் மிருதங்க வகுப்புகளுக்குச் சென்றுவருகிறார். படம்: பே.கார்த்திகேயன்

இசையால் இறுகிய பிணைப்பு

ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமை மாலைகளிலும் குமரனின் வீட்டில் தவறாமல் பஜனைகள் நடைபெறும். அவற்றில் முடிந்தவரை திரு நாகலிங்கமும் வந்து கலந்துகொள்வார்.

வாராவாரம் தன் மகனின் வீட்டிற்குச் சென்று பேரப்பிள்ளைகளுடன் பஜனையில் ஈடுபடும் திரு நாகலிங்கம் வீரமுத்து, 78 (நடுவில்). படம்: பே.கார்த்திகேயன்

ஜெய் மாருதி பக்த சமாஜத்தில் குமரனும் பிள்ளைகளும் தைப்பூசம், தீமிதி போன்ற திருவிழாக்களில் வாசித்து வருகின்றனர். அடுத்தது பங்குனி உத்திரத் திருவிழாவிலும் வாசிக்கவுள்ளனர்.

சிங்கப்பூரில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இசையிலும் கலாசாரத்திலும் ஈடுபாடு கொள்ளவேண்டும் என்பதே என் ஆசை.
குமரன், 43

திரு நாகலிங்கம், திருமதி லலிதாவைத் தாத்தா பாட்டி என்ற உறவுமுறைக்கும் மேலாகத் தங்கள் இசைத்திறனின் பிறப்பிடமாக பேரப்பிள்ளைகள் அரவணைக்கின்றனர்.

“என் பெற்றோர்தான் எங்கள் குரு, எங்கள் இசையுலகின் ஆணிவேர்கள்,” என்று பெருமிதத்துடன் கூறினார் குமரன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!