வைட்டமின் பி12 குறைபாடு: அறிகுறிகளும் தீர்வுகளும்

உடல்நலனுக்கு, குறிப்பாக பெண்களின் உடல்நலனுக்கு அடித்தளமாக விளங்கும் ஊட்டச்சத்துகளில் முக்கியப் பங்கு வகிப்பது வைட்டமின் பி12.

நரம்புகளின் செயல்பாடு, மரபணு, ரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்தி, ஊட்டச்சத்தில் இருந்து ஆற்றலைப் பெருக்கும் செயல்முறை (எனர்ஜி மெட்டபாலிசம்), இதய நலம் உட்பட உடலின் பல அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு அடிப்படையானது வைட்டமின் பி12 என்கிறார் ஊட்டச்சத்து நிபுணரும் இயற்கை மருத்துவ நிபுணருமான கேட்கி வினயச்சந்திரா.

பொதுவாக, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒரு நாளில் குறைந்தது 2.4 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 தேவை. கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மாருக்கும் சற்று அதிகம் தேவைப்படும். நீரில் கரையும் தன்மையுடைய வைட்டமின் பி12, தேவைக்கு அதிகமாக உட்கொள்ளப்பட்டாலும், எதிர்காலப் பயன்பாட்டுக்காக கல்லீரலில் சேகரிக்கப்படும்.

பெண்களிடம் பரவலாகக் காணப்படும் அதீத களைப்பு, மூட்டு வலி, தசைப்பிடிப்பு, மறதி உள்ளிட்டவற்றுக்கு வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக இருக்கலாம். இதனைப் பலர் கவனிப்பதில்லை.

குறிப்பாக, வயது ஆக ஆக, உடலில் பி12 சேர்த்துக்கொள்ளும் தன்மை குறையும். மதுப்பழக்கம் உள்ளோர், குறிப்பிட்ட சில அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டோர், ‘அனீமியா’ எனும் ஒருவகை ரத்த சோகை இருப்போர், குறிப்பிட்ட உணவு முறையைப் பின்பற்றுவோர் ஆகியோருக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். நெஞ்செரிச்சல், நீரிழிவு உள்ளிட்ட நாள்பட்ட நோய்களுக்கான சில மருந்துகளும் இந்தக் குறைபாட்டை ஏற்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

வைட்டமின் பி12 குறைபாடு இருப்போருக்குப் பல்வேறு அறிகுறிகள் தென்படும் என்கிறார் ‘ஆஸ்க் கேட்கி’ நிறுவனரான திருவாட்டி கேட்கி.

பி12 குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை வெளிர் அல்லது மஞ்சள் நிற தோலுக்கு வழிவகுக்கும் என்கிறார் அவர். மேலும், சற்றே அதிகமான உடல் செயல்பாடுகளின்போது சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல், தசை பலவீனம், தலைச்சுற்றல், சருமத்தில் அதிக அரிப்பு, சரும உணர்வின்மை உள்ளிட்ட பல அறிகுறிகளும் வைட்டமின் பி12 குறைபாட்டால் ஏற்படலாம் என்றும் குறிப்பிடுகிறார்.

இவ்வகை உடல்நலப் பிரச்சினைகளைச் சந்தித்தால் மருத்துவரை அணுகுவது அவசியம் என வலியுறுத்துகிறார் திருவாட்டி கேட்கி. ரத்த பரிசோதனை மூலம் உடலின் பி12 அளவை அறியலாம்.

வைட்டமின் பி12 உணவு வகைகள்

பொதுவாக, வைட்டமின் பி12 அசைவ உணவு வகைகளில் அதிகம் காணப்படுகிறது. எனவே, சைவ உணவு முறை, ‘வீகன்’ உணவு முறைகளைப் பின்பற்றுபவர்களுக்கு உணவின் மூலம் போதுமான பி12 அளவைப் பெறுவதற்குச் சவாலாக உள்ளது என்கிறார் அவர்.

‘சால்மன்’, ‘ட்ரவுட்’, ‘டுனா’, மத்தி, கானாங்கெளுத்தி ஆகிய மீன் வகைகளிலும் கோழி, ஆடு, மாடு, பன்றி இறைச்சி வகைகளிலும் நண்டுகள் போன்ற பிற கடல்சார் உணவு வகைகளிலும் வைட்டமின் பி12 அதிகம் காணப்படுகிறது.

சீஸ், தயிர் போன்ற பால் உணவு வகைகளிலும் முட்டையிலும் பி12 அதிகம் காணப்படுகிறது. ‘வீகன்’ உணவு முறையைப் பின்பற்றுபவர்கள் தாவர பால், ‘தோஃபு’ உள்ளிட்டவற்றை உட்கொள்ளலாம் என்று திருவாட்டி கேட்கி பரிந்துரைக்கிறார்.

அன்றாட உணவு மூலம் கிடைக்கும் வைட்டமின் பி12 குறைவாக இருப்பதாகக் கருதுபவர்கள், மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரையின் அடிப்படையில் ‘சப்லிமன்ட்ஸ்’ எனும் இணை மருந்துகளை உட்கொள்ளலாம் என்றும் சொன்னார் திருவாட்டி கேட்கி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!