வேகமாக நடப்பது உடலுக்கு நல்லது!

மெதுவோட்டம் பலரும் விரும்பும் ஒருவகை உடற்பயிற்சி என்று நாம் சொல்லிவிட முடியாது.

மெதுவோட்டத்தை விரும்பாதவர்களும் உடற்பயிற்சி செய்து நலமுடன் வாழ பல வழிகள் உள்ளன.

குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களும், அந்நோய் வருவதற்கான அபாயத்தில் உள்ளவர்களும் மெதுவோட்டத்திற்குப் பதிலாக வேகமான நடைப்பயிற்சியைத் தெரிவுசெய்யலாம்.

வேகமான நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் விரைவாக நீரிழிவு நோயிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள முடியும் என்று விளையாட்டு மருத்துவம் தொடர்பான பிரிட்டிஷ் சஞ்சிகை ஒன்று தெரிவித்துள்ளது.

நீரிழிவு நோய், குறிப்பாக இரண்டாம் வகை நீரிழிவு பாதிப்பு, ஒருவரின் ரத்தத்தில் அதிக அளவில் சர்க்கரை இருந்தால் உண்டாகும்.

ஆயினும், உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் இன்சுலின் சுரப்பைச் சீராக வைத்துக்கொள்ள முடியும்.

அடிக்கடி நடைப்பயிற்சி செய்து வந்தால் ஒருவரின் ரத்தக் கொழுப்பு குறைந்து, நீரிழிவு நோய் தொடர்பான சிக்கல்களும் குறையும். நடைப்பயிற்சிக்குப் பிறகு, கணையம் சிறப்பாக இயங்கி, இன்சுலினும் நன்கு சுரக்கும் என்றும் நம்பப்படுகிறது.

இருந்தாலும், வேகமான நடைப்பயிற்சி செய்து வந்தால் ஒருவருக்கு நீரிழிவு அறவே வராது என்பது ஒரு கட்டுக்கதை. நோய் வரும் அபாயம் குறையும், ஆனால், நோய் வந்துவிட்டால் அதிலிருந்து முழுமையாகக் குணமடைய உணவுப் பழக்கங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன.

நல்ல உணவுப் பழக்கங்களும் அன்றாடம் போதிய உறக்கமும் இருந்தால்தான் ஒருவரால் நடைப்பயிற்சியால் முழுமையான பலன்களைப் பெற முடியும்.

வேகமான நடைப்பயிற்சி உடல்தசைகளை வலுவாக்கக் கூடியவை. அதிக வெப்ப ஆற்றல் செலவிடப்படுவதால் உடல் வலிமையடைந்து, ஒருவரின் தோற்றமும் மெருகேறும். மேலும், இதய நோய்கள் வருவதற்கான அபாயமும் குறையும்.

யார் வேண்டுமானாலும் வேகமான நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். வெளிப்புறங்களிலும், உடற்பயிற்சிக் கூடங்களிலும், வேலைக்குச் செல்லும்போதும் வேகமாக நடக்கலாம்.

புதிதாக நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் தொடக்கத்தில் வேகமாக நடப்பதற்குப் பதிலாக மெதுவாக அதிக நேரம் நடந்து, காலப்போக்கில் வேகத்தைக் கூட்டலாம். நெடுந்தொலைவு நடக்க வேண்டும் என்பது மட்டும் இலக்காக இருக்கக்கூடாது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!