சிங்கப்பூரர்கள் கூகலில் அதிகம் தேடிய சொற்கள்

கடந்த 2023 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் அதிகம் தேடப்பட்ட சொற்றொடர்களை வெளியிட்டுள்ளது கூகல் நிறுவனம்.

கூகல் நிறுவனத்தின் தேடுபொறி தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஒவ்வோராண்டும் அதிகம் தேடப்பட்ட சொற்றொடர்களை நாடுவாரியாக அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

அந்த வரிசையில் டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற நீர்மூழ்கிக் கலன் தொடங்கி, அண்மையில் நடந்த துருக்கி நிலநடுக்கம் வரை, உலக அளவில் பல்வேறு தலைப்புகளை மக்கள் அதிகம் தேடியதாகத் தெரிவிக்கிறது அந்நிறுவனம்.

சிங்கப்பூரில், செய்தி எனும் பிரிவில் ‘டிக்கெட் மாஸ்டர்’ எனும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு முன்பதிவு செய்யும் இணையத்தளம் தேடல் பட்டியலில் முதல் இடத்தையும், ஐஃபோன் 15 ஐந்தாமிடத்தையும் பெற்றுள்ளன.

இவை தவிர அதிபர் தேர்தல், சிடிசி பற்றுச்சீட்டு, டெய்லர் சுவிஃப்ட், ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு ஆகியவையும் செய்தி பிரிவில் அதிகம் தேடப்பட்ட சொற்றொடர்கள் பட்டியலில் முதல் 10 நிலைகளில் இடம்பெற்றுள்ளன.

வெளிநாட்டுச் செய்திகள் பிரிவில் அதிகம் தேடப்பட்ட முதல் பத்து சொற்றொடர்கள் பட்டியலில், இஸ்ரேல் காஸா போர் முதலிடம் பெற்றுள்ளதோடு, இன்டர் மயாமி, அல்நசர் எனும் காற்பந்தாட்டக் குழுக்கள் பற்றிய கேள்விகளும் இடம்பெற்றுள்ளன.

துருக்கி நிலநடுக்கம், ஓபன் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி, சிலிகான் வேலி வங்கி ஆகியவற்றையும் சிங்கப்பூரர்கள் அதிகம் தேடியதாகத் தெரிகிறது.

மேலும், 2023 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற எஃப்-1 கார் பந்தயம், வான் கோக் சிங்கப்பூர், ஹாலோவீன் கொண்டாட்டங்கள், சத்துசாக் இரவுச் சந்தை (Chatuchak SG Night Market) ஆகியவையும் அதிகம் தேடப்பட்டுள்ளன.

அதிகம் தேடப்பட்ட இடங்கள் பட்டியலில் உட்லே கடைத்தொகுதி, செங்காங் கிராண்ட் கடைத்தொகுதி, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி, துவாஸ் சோதனைச் சாவடி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

புகழ்பெற்ற திரைப்படங்களாக ஓபன்ஹைமர், பார்பி, ஜான் விக், கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி உள்ளிட்டவையும் அதிகம் சிங்கப்பூரர்களால் தேடப்பட்டுள்ளன.

பொதுவாக கூகல் தேடுபொறியில், குறிப்பிட்ட ஒன்றை எப்படிச் செய்வது எனும் வழிமுறைகளைத் தேடும் ‘ஹவ்-டு’ கேள்விகள் அதிகம் கேட்கப்படும்.

அவ்வகையில், சிங்கப்பூரில் சிடிசி பற்றுச் சீட்டைப் பெற்றுக்கொள்வது, ‘சாட் ஜிபிடி’ எனும் தளத்தைப் பயன்படுத்துவது, வாக்களிப்பது, வாட்ஸப் செயலியில் அனுப்பப்பட்ட தகவல்களில் மாற்றம் செய்வது ஆகியவை தொடர்பில் தேடல்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், இருமலை எப்படி நிறுத்துவது, ரூபிக்’ஸ் கியூப் புதிருக்கு எவ்வாறு தீர்வுகாண்பது, ஹரி ராயா பண்டிகைக்கு வாழ்த்துகள் தெரிவிப்பது எப்படி, கொழுப்பைக் குறைப்பது எப்படி, டெய்லர் சுவிஃப்ட் நிகழ்ச்சிக்கு நுழைவுச்சீட்டு பெறுவது எப்படி என்றும் சிங்கப்பூரர்கள் அதிகம் தேடியதாகத் தெரிவிக்கிறது இந்தப் பட்டியல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!