குளிர்காலக் கூந்தல் பராமரிப்பு

குளிர்காலம் வந்துவிட்டால் உடல்நிலையில் மாற்றம் ஏற்படுவதோடு, சருமத்தில் இருக்கும் வியர்வைச் சுரப்பிகள் அதிக அளவு வியர்வையைச் சுரப்பதில்லை என்பதால் சருமத்திலும் கூந்தலிலும் எண்ணெய்ப் பசை குறைந்து வறண்டு காணப்படும்.

வெளியில் இருக்கும் குளிர்ந்த காற்றும், உடலில் இருக்கும் வெப்பமான, வறண்ட காற்றும் கூந்தலின் ஈரப்பதத்தை அகற்றி, கூந்தல் உடைவதற்கும், நுனிப்பிளவுக்கும் வழிவகுக்கும்.

கூந்தலில் ஏற்படும் மிகை வறட்சியினால், பலவகைக் கூந்தல் அலங்காரங்கள் செய்ய இயலாமல் போகும். கூந்தல் வேர் வரை வறட்சி ஏற்பட்டு, உச்சந்தலையில் செதில்களும் தோன்றலாம்.

இவற்றைச் சரிசெய்ய சரியான கூந்தல் பராமரிப்பு முறையைப் பின்பற்றுவது அவசியம்.

நிறைய தண்ணீர் குடிக்கலாம்

கூந்தலின் ஈரப்பதத்தைத் தக்க வைப்பது குளிர்காலப் பராமரிப்பின் முக்கிய நோக்கம். அதற்கு, போதுமான தண்ணீர் குடிப்பது முக்கியம். அது உடலின் உள்ளே இருந்து வறட்சியை எதிர்த்து கூந்தலின் ஒட்டுமொத்த நலத்தை மேம்படுத்த உதவும்.

உணவு

கூந்தலைச் செழுமையாக வைத்துக்கொள்ள ஊட்டச்சத்து மிக்க உணவை உண்பது முக்கியம். பால், நெய், தேன், உலர்பழங்கள், ‘சால்மன்’ உள்ளிட்ட மீன் வகைகள், கீரைகள் என புரதம், தாதுக்கள் நிறைந்த உணவை உட்கொள்வது கூந்தலைப் பாதுகாக்கும். வைட்டமின் ஏ, சி நிறைந்த உணவையும் உட்கொள்ள வேண்டும்.

அடிக்கடி தலை குளிப்பதைத் தவிர்க்கலாம்

அடிக்கடி தலையை அலசுவது, கூந்தலில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அகற்றிவிடும். தலைமுடியின் ஈரப்பதத்தை தக்கவைக்க, வாரத்திற்கு 2 - 3 முறை அல்லது தேவைக்கேற்ப கூந்தலை அலசுவது நல்லது.

மிகவும் சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்கலாம்

சூடான நீர் கூந்தலில் இருந்து ஈரப்பதத்தை அகற்றி உடையக்கூடியதாக ஆக்கும். கூந்தலை வெதுவெதுப்பான நீரில் கழுவுவதும், உடனடியாக உலர்த்துவதும் கூந்தலைப் பாதுகாக்கும். குறிப்பாக ‘ஹேர் டிரையர்’ பயன்பாட்டைத் தவிர்த்து, காற்றில் உலர விடுவது சிறந்தது.

ஈரப்பதத்தை தக்க வைக்கும் ‘ஷாம்பு’, ‘கண்டிஷனர்’

குளிர்கால மாதங்களில், ‘ஹைட்ரேட்டிங் ஷாம்பு’ எனப்படும் நீர்ச்சத்தைப் பாதுகாக்கும் ‘ஷாம்பு’, புரதச்சத்து, அர்கான் எண்ணெய், கற்றாழை போன்றவை அடங்கிய உரிய ‘கண்டிஷனர்’ பயன்படுத்துவது நல்லது.

கூந்தல் புத்துணர்ச்சி

வெதுவெதுப்பான நல்லெண்ணெய் தேய்த்து வருவதும், அடிக்கடி தூய தேங்காய் எண்ணெய்யைத் தடவி வருவதும் தோல் வறண்டு செதில்கள் உருவாவதைத் தடுக்கும்.

வறட்சியினால் முடி உதிர்வும் ஏற்படும். ஊறவைத்த வெந்தயத்தை தலையில் தடவி அதன்பின் அலசுவது, ஆலிவ் எண்ணெய், கற்றாழை, தயிர், செம்பருத்திப் பூ போன்ற ஈரப்பதமூட்டிகளை அவ்வப்போது தலையில் தடவிக் குளிப்பதும் வறட்சியைத் தடுக்கும்.

இவற்றைத் தவிர, ஈரக் கூந்தலுடன் வெளியில் செல்வதையும், ‘ஹீட் ஸ்டைலிங்’ எனும் வெப்பக் காற்று கொண்டு கூந்தல் அலங்காரங்கள் செய்வதையும் தவிர்க்கலாம். அப்படிச் செய்ய நேரிட்டால், உகந்த வெப்பப் பாதுகாப்பு முறைகளைக் கையாள்வதும் கூந்தலைப் பாதுகாக்கும்.

குளிர் நேரங்களில் வெளியே செல்லும்போது தொப்பி, ‘ஸ்கார்ஃப்’ போன்றவற்றால் கூந்தலை மூடிச் செல்வதும் கூந்தலைப் பாதுகாக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!