கூந்தல் பராமரிப்புக்கு ஃபரினா சொல்லும் ஆேலாசனை

பாரதி கண்­ணம்மா தொடர் நாட­கத்­தில் நடித்­து­வ­ரு­கி­றார் ஃபரினா ஆசாத். நிகழ்ச்­சித் தொகுப்­பா­ளர், மாட­லிங், நடிப்பு என தொடர்ந்து சுறு­சு­றுப்­பாகச் செயல்பட்டு வரும் ஃபரினா, தனது கூந்தல் பரா­ம­ரிப்பு ரக­சி­யம் குறித்து ஐபிசி மங்கை யூடி­யூப் ஒளி­வ­ழியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

முத­லில் தனது கூந்­தல் குறித்து பேசிய ஃபரினா, நீள­மான கூந்­தல் எனக்கு மிக­வும் பாது­காப்­பாக இருக்­கிறது. என்­னு­டைய ஆடை ஏதா­வது அசௌ­க­ரிய மாக இருப்பதுபோல் உணர்ந்தால், முடியை எடுத்து முன்புறம் போட்­டுக்­கொள்­வேன். அது துப்­பட்டா போல் எனக்கு பாது­காப்பு கொடுக்­கும் என்கிறார்.

தொடர்ந்து, கூந்தல் பரா­ம­ரிப்புக்கு அவர் சில உதவிக் குறிப்புகளையும் கூறி­னார். "நான் வாரத்­தில் இரண்டு நாள்கள் தலைக்கு எண்­ணெய் வைத்­துக்­கொள்­வேன். மூலிகை எண்­ணெய்தான் பயன்­படுத்­து­வேன். அதன்­பி­றகு 'ஷாம்பூ' போட்டு கூந்­த­லைக் கழுவி, கண்­டி­ஷ­னர் போடு­வேன்.

"எல்லா நாள்­க­ளி­லும் தலை குளிக்­கக் கூடாது. வாரத்­துக்கு மூன்று முறை தலை குளித்­தாலே போதும். எண்­ணெய் வைப்­ப­தால் வறண்ட முடி, மிரு­து­வாக மாற ஆரம்­பிக்­கும்.

"அதே­போல, தின­மும் தலைக்கு எண்­ணெய் வைக்­க­வும் கூடாது. அப்­படி செய்­தால் அழுக்கு தலை­யில் படிந்­து­வி­டும். அத­னால், வாரத்­தில் இரண்டு அல்­லது மூன்று முறை எண்­ணெய் வைக்­க­லாம். இது­தான் முடி­யைப் பரா­ம­ரிக்க முதல் விஷ­யம்.

"அடுத்­த­தாக சிலர் கூந்­தலை அடிக்­கடி சீவிக்ெகாண்டே இருப்­பார்­கள். அப்­ப­டி­யும் செய்­யக் கூடாது. ஓரி­ரண்டு முறை சீவி­ய­பி­றகு, அப்­படியே விட்­டு­விட வேண்­டும்.

"இரு சக்­கர வாக­னங்­களில் செல்­லும்­போது முடியைத் தூக்­கிக் கட்­டா­மல் அப்படியே தளர விட்­டுச் செல்­ல­வும் கூடாது. இதெல்­லாம் அவ­சி­யம் நாம் பின்­பற்ற வேண்­டும்.

"இதற்­கும் மேலாக, உச்­சந்­த­லை­யில் எண்­ணெய் வைத்து 'மசாஜ்' செய்யலாம்.

"வீட்­டில் எண்­ணெய் தயா­ரிக்க உங்­க­ளுக்கு நேர­மில்லை எனில், கடை­யி­லி­ருந்து பாதாம் எண்­ணெய், ஆலிவ் எண்­ணெய், ேதங்­காய் எண்­ணெய் ஆகிய மூன்­றை­யும் வாங்கி வந்து அதில் 'வைட்­ட­மின் ஈ' மாத்திரையை நன்­றா­கக் கலந்து தலைக்கு வைத்து வந்­தால் நல்ல பலன் கிடைக்­கும்.

"அத்­து­டன், 'பீர்' மதுபானம் கொண்டு தலைமுடியைக் கழு­வி­னால் முடி மிரு­து­வாக இருக்­கும். முத­லில் பீரை கூந்­த­லில் தேய்த்து, பிறகு ஷாம்பூ கொண்டு கழுவவேண்­டும். அதே­போல முட்­டை­யும் பயன்­ப­டுத்­த­லாம்.

"சின்ன வெங்­கா­யம் சாறு அல்­லது நன்கு மைய அைரத்த கூழை தலை­யின் முடி குறை­வாக இருக்­கும் பகு­தி­களில் பயன்­படுத்தலாம். இதில் மிக முக்­கி­ய­மாக 10 நிமி­டங்­க­ளுக்கு மேல் இதை தலை­யில் வைத்­தி­ருக்­கக் கூடாது. அப்­படி வைத்­தி­ருந்­தால் சளி, காய்ச்­சல் வரும்.

"இதைத்தொடர்ந்து செய்து வர புதிய முடி வளர ஆரம்­பிக்­கும். அதே­போல சாப்­பி­டும்­போது கறிவேப்­பி­லையை ஒதுக்கி வைக்­கக் கூடாது. அது கூந்­த­லுக்கு ரொம்ப நல்­லது," என பல யோச னைகளை ஃபரினா காணொளி யில் பகிர்ந்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!