அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா: அமெரிக்க சாலைகளில் விளம்பரம்

வாஷிங்டன்: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, அமெரிக்காவின் நியூயார்க், டெக்சஸ், இல்லினாய், நியூஜெர்சி, ஜார்ஜியா, அரிசோனா, மிசெளரி உள்ளிட்ட 10 மாநிலங்களில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலில் இம்மாதம் 22ஆம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

விழாவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அயோத்தி மாநகரத்தில் திருவிழா களைகட்டியுள்ளது.

ராமர் கோயில் குடமுழுக்கு விழாவிற்காக வெளிநாடுகளில் இருந்து நிதியும் அலங்காரப் பொருள்களும் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

இந்தியாவில் மட்டுமன்றி, அமெரிக்காவில் வாழும் இந்துக்களும் உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களும் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க சாலைகளில் ராமர் கோயில் திறப்பு விழா குறித்த மிகப்பெரும் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், ராமபிரான், அயோத்தி ராமர் கோயிலின் கம்பீரமான தோற்றம் ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.

விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமெரிக்கப் பிரிவும் அமெரிக்காவில் உள்ள இந்துக்களும் இணைந்து 10 மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் விளம்பரப் பலகைகளை வைத்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்சஸ், இல்லினாய், நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் ஜார்ஜியா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த விளம்பரப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.

இதேபோல், அரிசோனா, மிசோரி மாநிலங்களிலும் வரும் 15ஆம் தேதி முதல் விளம்பரப் பலகைகள் நிறுவப்படும் என்று அமெரிக்காவின் விஎச்பி பிரிவு தெரிவித்துள்ளது.

“இது ஒரு மகிழ்ச்சியான தருணம். வாழ்நாளில் ஒருமுறைதான் இது போன்ற பாக்கியம் கிட்டும். இதனை அமெரிக்க வாழ் இந்தியர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்,” எனத் தெரிவித்துள்ளார் அமெரிக்க விஎச்பி பொதுச் செயலர் அமிதாப் மிட்டல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!