இணைய விளையாட்டில் ரூ.1.5 கோடி வென்ற காவல்துறை அதிகாரி நீக்கம்

புனே: இணைய விளையாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு ரூ.1.5 கோடி வென்ற காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள பிப்ரி சின்ச்வாட் காவல் நிலையத்தில் காவல்துறை துணை ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சோம்நாத் சிண்டே, காவல்துறையின் அனுமதி பெறாமல் ‘ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் கேமிங்’ என்னும் இணைய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பிம்பிரி சின்ச்வாட் காவல்துறை துணை ஆணையாளர் சதீஷ் மனே கூறுகையில், “சிண்டே காவல்துறையின் அனுமதி பெறாமல் இணைய விளையாட்டில் கலந்துகொண்டார், மேலும், ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளிக்கும்போது சிண்டே காவல்துறை சீருடை அணிந்திருந்தார். காவல்துறையின் மதிப்பைக் குறைக்கும் வகையில் அவர் சீருடையில் பேட்டியளித்திருக்கக்கூடாது. அதையடுத்துதான் சிண்டே பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது,” என்று தெரிவித்தார்.

இதுகுறித்துப் பேசிய சிண்டே, “காவல்துறையைச் சேர்ந்த பலரும் இதுபோன்ற இணைய விளையாட்டுகளில் பங்கு பெற்று வருகின்றனர். இருந்தாலும் நான் மட்டுமே இவ்வளவு பெரிய தொகையை வென்றுள்ளேன். அதனால்தான் நான் குறிவைக்கப்பட்டுள்ளேன்,” என்று கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!