முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் எம்.எஸ்.கில் மறைவு

புதுடெல்லி: இந்திய முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எம்.எஸ்.கில் உடல்நலக் குறைவு காரணமாக தெற்கு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 86.

1996 டிசம்பா் முதல் 2001ஜூன் மாதம் வரை இந்திய தலைமைத் தோ்தல் ஆணையராக பணியாற்றிய எம்.எஸ்.கில்லுக்கு 2000ல் ‘பத்ம விபூஷண்’ விருது வழங்கப்பட்டது.

எம்.எஸ்.கில் என்றழைக்கப்படும் மனோகா் சிங் கில், இந்திய ஆட்சிப் பணியின் தொடக்க காலத்தில் பஞ்சாப் முன்னாள் முதல்வா் பிரகாஷ் சிங் பாதல் அரசில் முக்கிய அதிகாரியாக பணியாற்றினாா்.

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையராக டி.என்.சேஷன் பணியாற்றியபோது, எம்.எஸ்.கில், ஜி.வி.ஜி.கிருஷ்ணமூா்த்தி ஆகிய இருவரும் தோ்தல் ஆணையா்களாக நியமிக்கப்பட்டு, தோ்தல் ஆணையம் பல உறுப்பினா்கள் கொண்ட அமைப்பாக மாற்றப்பட்டது.

எம்.எஸ்.கில் அரசியலில் இணைந்த முதல் தலைமைத் தோ்தல் ஆணையா் ஆவாா். காங்கிரஸ் உறுப்பினராக மாநிலங்களவைக்குத் தோ்வு செய்யப்பட்ட இவா், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சராக 2008ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டாா்.

எம்.எஸ்.கில்லுக்கு மனைவியும், 3 மகள்களும் உள்ளனா். அவரது இறுதிச்சடங்குகள் திங்கட்கிழமை நடைபெற உள்ளன. அவரது மறைவுக்கு இந்திய தோ்தல் ஆணையம் இரங்கல் தெரிவித்துள்ளது, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, பஞ்சாப் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!