வட மாநிலங்களில் ரூ.17,600 கோடி மேம்பாட்டுத் திட்டங்கள்

புதுடெல்லி: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ரூ.17,600 கோடி பெறுமானமுள்ள மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதன் தொடர்பில் இந்தியப் பிரதமர் மோடியின் அலுவலகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், பிரதமர் மோடி வியாழக்கிழமை அன்று மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் சாலை, ரயில், எரிவாயு இணைப்புகள், வீட்டுவசதி மற்றும் குடிநீர் உட்பட ரூ.12,600 கோடி பெறுமானமுள்ள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. இதில் ஓர் அம்சம் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் (நகர்ப்புறம்) ரூ.128 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆயிரம் வீடுகள், அதற்கு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அறிக்கை தெரிவித்தது.

இதுபோல ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு பிரதமர் மோடி இன்று வியாழக்கிழமை பயணம் மேற்கொள்வார் என்றும் அங்கு சில மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், ராஜஸ்தானில் சில திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டுத் திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி என்றும் கூறப்படுகிறது.

ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் வளாகத்தில் 350 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவதாக அறிக்கை தெளிவுபடுத்தியது. இதுபோல், ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 7 அவசர சிகிச்சை மையங்களுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!