‘புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதில் தமிழகத்திற்கு முட்டுக்கட்டை போட வேண்டாம்’

சென்னை: புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து தேசிய மருத்துவ ஆணையம் அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் அந்த அறிவிப்பால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆணையத்தின் இத்தகைய கட்டுப்பாடுகளால் தமிழகத்தில் புதிய மருத்துவமனைகளும் புதிய முதலீடுகளும் வருவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும்.

எனவே, அந்த ஆணையம், தான் வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கொண்ட அந்த அறிக்கையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். இதை அமல்படுத்துவதற்கு முன் மாநில அரசுகளுடன் உரிய ஆலோசனைகள் மேற்கொள்ளவேண்டும், என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தின் விவரம், “அண்மையில் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டிருந்த அறிவிப்பினைப் பற்றி தங்களின் கனிவான கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். அந்த அறிக்கையின்படி, இளநிலை மருத்துவக் கல்விக்கான புதிய விதிமுறைகளில் 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அதற்கும் கூடுதலான மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளோ, மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களோ அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“இது மாநில உரிமைகள் மீதான நேரடி ஆக்கிரமிப்பு ஆகும். அத்துடன் பொது சுகாதாரம், பொது சுகாதார கட்டமைப்பு போன்ற துறைகளில் முதலீடு செய்துள்ள மாநிலங்களுக்கு வழங்கப்படும் தண்டனையாகவே ஆணையத்தின் விதிமுறைகள் உள்ளன.

“தமிழ் நாட்டைப் போன்ற முன்னேறிய மாநிலங்கள் பல ஆண்டுகளாகவே பொது சுகாதாரத் துறையை மேம்படுத்தி வருகின்றன. இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் என்றளவுக்கு சென்னை உயர்ந்துள்ளது. தரமான சுகாதார சேவைகளுக்கான தேவை இங்கு அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் மேலும் புதிய மருத்துவக் கட்டமைப்புகள் மிகமிக அவசியம். எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இவை உருவாக்கப்பட வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவ இடங்கள் என்று நிபந்தனை விதிப்பது பொருத்தமானதாக இல்லை. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கான காரணங்களும் ஏற்புடையதாக இல்லை.

“புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு மருத்துவர் - மக்கள் விகிதாச்சாரம் பற்றி அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதுமான அளவு மருத்துவர் - மக்கள் விகிதாச்சாரம் இருந்தாலும்கூட சில மாவட்டங்களில் மருத்துவர் - மக்கள் விகிதாச்சாரத்தில் பற்றாக்குறை இருக்கிறது. பின் தங்கிய பகுதிகளில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதே தீர்வாக இருக்க முடியும்.

“புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மாநில நிலவரங்களைக் கொண்டு தடை விதிப்பது தேவையுள்ள மாவட்டங்களுக்கு அநீதி இழைப்பதாகிவிடும்.

“மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது குறித்த புதிய விதிமுறைகளைக் கொண்ட ஆணையத்தின் அறிவிப்பினை உடனடியாக நிறுத்த வேண்டும்,” என முதல்வர் ஸ்டாலின் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!