பி.கிருஷ்ணன் படைப்புலகம் குறித்த கருத்தரங்கு

சிங்­கப்­பூர் தமிழ்ப் படைப்­பி­லக்­கி­யத் துறைக்கு 70 ஆண்டு கால­மா­கப் பங்­க­ளித்து வரும் சிங்கப்பூரின் மூத்த எழுத்­தா­ளரான 90 வயது திரு பி.கிருஷ்­ணனை மலே­சிய தமிழ் இலக்­கிய உல­கம் சிறப்­பித்­துக் கொண்­டா­டி­யுள்­ளது. புது­மை­தா­சன் எனும் புனை­பெயரில் எழு­தும் பி.கிருஷ்­ண­னின் படைப்­பு­கள் பற்­றிய கருத்­த­ரங்கு, அவ­ரது ஷேக்ஸ்­பி­யர் மொழி பெயர்ப்பு நூல்­கள் வெளி­யீடு, ஷேக்ஸ்­பி­யர் மொழி­பெ­யர்ப்பு நாடக அரங்­கேற்­றம், பி.கிருஷ்­ண­னு­ட­னான உரை­யா­டல் என மூன்று நாள் நிகழ்ச்சி அண்­மை­யில் மலே­சி­யா­வின் பினாங்கு நக­ரில் நடை­பெற்­றது.

ஜார்ஜ் டவுன் இலக்­கிய விழா­வின் ஓர் அங்­க­மாக இந்­நி­கழ்ச்­சி­கள் இடம்­பெற்­றன. உல­கப்­பு­கழ் பெற்ற இந்த இலக்­கிய விழா­வில் இவ்­வாண்டு முதல் முறை­யாக தமிழ் நிகழ்ச்­சி­களும் இடம்­பெற்­றி­ருந்­தன. மலே­சி­யா­வின் வல்­லி­னம் இலக்­கி­யக் குழு இவ்­வ­ரங்­கு­களை ஒருங்­கி­ணைத்திருந்தது.

கூலில் பிரம்ம வித்­யா­ரண்­யத்­தில் நவம்பர் 25ஆம் தேதி இரவு விழா தொடங்­கி­யது. முதல் அங்­க­மாக ஜெய­மோ­கன் உரு­வாக்கி வரும் தமிழ் விக்­கி­யின் அறி­முக நிகழ்ச்சி. சிங்­கப்­பூர் தமிழ்ப் பண்­பாட்டு மையத்­தின் நிறு­வ­னத் தலை­வர் அருண் மகிழ்­நன் தமிழ் விக்­கியை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். இந்­தத் தளத்­தில் இடம்­பெற்­றுள்ள 200க்கும் மேற்­பட்ட மலே­சி­யப் பதிவு­கள் குறித்த கல்­வி­யா­ளர்­களு­டான கலந்­து­ரை­யா­ட­லைத் தொடர்ந்து தமிழ் விக்கி குறித்த ஜெய­மோ­க­னின் உரை இடம்­பெற்­றது.

மறு­நாள் காலை­யில் பி.கிருஷ்­ணன் படைப்­பு­ல­கம் குறித்த அரை நாள் கருத்­த­ரங்­கம் நடை­பெற்­றது. எழுத்­தா­ளர் ஜெய­மோ­கன் தலைமை உரையாற்றினார். மலே­சியா, சிங்­கப்­பூர், தமி­ழக எழுத்­தா­ளர்­கள் பி.கிருஷ்­ண­னின் சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட படைப்­பு­கள் குறித்த கட்­டு­ரை­க­ளைப் படைத்­த­னர்.

பி.கிருஷ்­ண­னின் நகைச்­சுவை நாட­கங்­கள் குறித்து பேசிய எழுத்­தா­ளர் அழ­கு­நிலா, சிங்­கப்­பூர் வர­லாற்­றில் 1960, 1970களில் நிகழ்ந்த முக்­கி­ய­மான சமூக மாற்­றங்­கள், அர­சி­யல், பொரு­ளா­தார நெருக்­கடி­க­ளின் பின்­ன­ணி­யில் எழு­தப்­பட்ட இந்­நா­ட­கங்­கள், எவ்­வாறு சிங்­கப்­பூ­ரின் ஒரு கால­கட்­டத்து வாழ்க்கை முறை­யை­யும் பேச்­சு­வழக்­கை­யும் பிர­தி­ப­லிக்­கின்றன என்­பதை ஆராய்ந்­தார்.

பி.கிருஷ்­ண­னின் துப்­ப­றி­யும் நாட­கங்­க­ள் குறித்து பேசிய தமி­ழக எழுத்­தா­ளர் ஜி.எஸ்.எல்.வி. நவீன், சிங்­கப்­பூ­ரின் சமூகச் சித்­தி­ரத்தை பி.கிருஷ்­ண­னின் நாட­கங்­கள் பிரதி ­ப­லிப்­ப­தை­யும் அவரது மொழி­யா­ளு­மை­யை­யும் குறிப்­பிட்­டுப் பேசி­னார்.

பி.கிருஷ்­ண­னின் சிறு­க­தை­கள் குறித்­துப் பேசி­ய மலே­சிய எழுத்­தா­ளர் அ.பாண்­டி­யன், பிர­சா­ரத்­தன்மை மிகுந்த படைப்­பு­கள் வெளி­யான காலச்­சூ­ழ­லில் நவீன இலக்­கி­யப் பிரக்­ஞை­யு­டன் மொழி­யைக் கையாண்டு மலாயா மண்­ணின் வாசம் படிந்த கதை­க­ளைக் எழு­திய முன்­னோடி எழுத்­தா­ளர் பி. கிருஷ்­ணன் என்றார்.

பி.கிருஷ்­ண­னின் உலக இலக்­கிய நாட­கங்­கள் குறித்­துப் பேசி­ய மலே­சிய எழுத்­தா­ளர் அர­வின் குமார், பி.கிருஷ்­ணன் நவீன உலக இலக்­கி­யம் தமி­ழில் பரவ வழி­வகுத்த முன்­னோடி ஆளுமை என்­றார். தொடர்ந்து, பி.கிருஷ்­ணன் மொழி­பெ­யர்த்த ஷேக்ஸ்­பி­ய­ரின் ஒதெல்லோ, மெக்­பெத், ஜூலி­யஸ் சீசர் ஆகி­யவை குறித்து பேசிய தமி­ழக எழுத்­தா­ளர் அருண்­மொழி நங்கை, பி.கிருஷ்­ண­னின் தேட­லும் மொழி­பெ­யர்ப்­பில் உள்ள நேர்த்­தி­யும் அவ­ரது மொழி­யாக்­கத்தை ஷேக்ஸ்­பி­யர் மொழி­பெ­யர்ப்­பு­க­ளுள் முதன்­மை­யாக நிறு­வு­கின்­றன என்­றார்.

இறு­தி­யாக, பி.கிருஷ்­ணன் மொழி­பெ­யர்த்த ஷேக்ஸ்­பி­ய­ரின் ஹேம்­லெட், ரோமியோ ஜூலி­யட், கிங் லியர், சூறா­வளி ஆகி­யவை குறித்து பேசிய சிங்கப்பூர் எழுத்­தா­ளர் கணேஷ்­பாபு, மொழி­பெயர்ப்­பில் அவர் பயன்­ப­டுத்­திய அரிய தமிழ்ச் சொற்­களை எடுத்­துக்­கூ­றி, ஷேக்ஸ்­பி­ய­ரின் கவி­தை­களை இனிய யாப்பு வடி­வத்­தில் மொழி­பெ­யர்த்­ததில் பி.கிருஷ்­ணன் பிற மொழி­பெ­யர்ப்­பா­ளர்­க­ளி­ட­மி­ருந்து தனித்­துத் தெரி­வ­தாக குறிப்­பிட்­டார். அமர்­வின் முடி­வில், 'பி.கிருஷ்­ணன் படைப்­பு­ல­கம்' என்ற நூல் வெளி­யி­டப்­பட்­டது. பி.கிருஷ்­ ண­னின் ஓவி­யம் ஒன்­றும் அவ­ருக்­குப் பரி­ச­ளிக்­கப்­பட்­டது.

அன்று மாலை ஜார்ஜ் டவுன் இலக்­கிய விழா­வில் 'மலே­சிய சிங்கை இலக்­கி­யக் கலந்­து­ரை­யா­டல்' இடம்­பெற்­றது. மலே­சிய எழுத்­தா­ளர்­கள் அ.பாண்­டி­யன், புண்­ணி­ய­வான், சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் கன­க­லதா ஆகி­யோர் கலந்­து­கொண்­ட­னர். மலே­சிய எழுத்­தா­ளர் அர­வின் குமார் இந்த அரங்கை வழி­ந­டத்­தி­னார். மலே­சியா- சிங்­கப்­பூர் இலக்­கி­யத்­தின் தனித்­து­வ­மான போக்­கு­களும், இருநாட்டு வர­லாறு, பண்­பாடு, கலா­சா­ரம் ஆகி­யவை எவ்­வ­கை­யில் இலக்­கி­யப் படைப்­பு­களில் எதி­ரொ­லிக்­கின்­றன போன்ற கருத்­து­களும் இவ்­வ­மர்­வில் விவா­திக்­கப்­பட்­டன.

அடுத்த அமர்­வில், சிங்­கப்­பூ­ரின் கிரிம்­சன் எர்த் பதிப்­ப­கம் பதிப்­பித்­துள்ள பி.கிருஷ்­ண­னின் ஏழு ஷேக்ஸ்­பி­யர் நாடக மொழி­பெ­யர்ப்பு நூல்­கள் வெளி­யி­டப்­பட்­டன. அடுத்து, பி. கிருஷ்­ண­னு­டன் வாச­கர்­கள் கலந்­து­ரை­யா­டும் அமர்வை எழுத்­தா­ளர் கணேஷ்­பாபு வழி­ந­டத்­தி­னார். இணை­யத்தை நீங்­கள் ஏன் பயன்­ப­டுத்­து­வ­தில்லை என்ற கேள்­விக்கு, "என் மனம் இணை­யத்தை விட­வும் வேக­மாக செயல்­படு­கிறது," என்று அவர் சொன்­ன­போது, அரங்­கம் கைத்­தட்­டல்­க­ளால் நிரம்­பி­யது.

நவம்பர் 27ஆம் தேதி காலை வாசகர்கள் எழுத்தாளர் ஜெயமோக னுடன் கலந்துரையாடும் நிகழ்வை மலேசிய எழுத்தாளர் ம.நவீன் வழி நடத்தினார். ஜெயமோகன் எழுதிய அறம் நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பான 'Stories of the true' நூல் வெளியிடப்பட்டது.

செய்தி: கணேஷ்பாபு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!